anuradha nazeer

Action Classics Inspirational

4.7  

anuradha nazeer

Action Classics Inspirational

சிவாஜியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

சிவாஜியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

1 min
250


மாடிப்படியில் ஒவ்வொரு விதமாக ஏறுவார். பல நூறுவிதமாக இறங்குவார். அப்பாவி ரங்கனின் உடல்மொழியும் ‘வசந்தமாளிகை’ ஜமீனின் உடல்மொழியும் வண்டிக்கார ‘பாபு’வின் உடல்மொழியும் மனம் பிறழ்ந்த ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்துக்கு உடல்மொழியும் ‘பலே பாண்டியா’ விஞ்ஞானிக்கு ஒரு உடல்மொழியும் ‘ஆண்டவன் கட்டளை’க்காக உடல்மொழியும் காலில் அடிபட்ட ராணுவ வீரரான ‘பார்த்தால் பசி தீரும்’ படத்துக்காக ஒரு உடல்மொழியும்... என ஒவ்வொரு கேரக்டரிலும் கூடுவிட்டு கூடு பாய்ந்த செப்படிவித்தைக்காரர் சிவாஜியைத் தவிர வேறு யார் இருக்கமுடியும்? வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத மனிதர். திரையில் நடிப்பில் பின்னிப் பெடலெடுத்த கலைஞன். நன்றியும் பண்பும் பாசமும் கொண்ட உன்னத மனிதக் கலைஞன். சிவாஜியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். எழுதிக்கொண்டே இருக்கலாம். படித்துக் கொண்டே இருக்கலாம். இன்னொரு விஷயம்... சிவாஜியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.


Rate this content
Log in

Similar tamil story from Action