சுதந்திரம்
சுதந்திரம்
சும்மா வந்ததல்ல சுதந்திரம்
வெறும் சுதந்திர
தினத்தன்று மாலைகள் சிலைகளுக்காக
போடுவதற்காக மட்டும்
அன்று விடுதலை வீரர்கள்
செந்நீர் சிந்தவில்லை!
சுதந்திரம் வேண்டி செக்கிழுத்த சிவாவிற்கு
குளிருட்டப்பட்ட அறையில்
அறுசுவை உணவை
ராஜமரியாதையுடன் இலஞ்சமாய்
ஆங்கிலேயன் தரவில்லை!
நோய்களும் உடல் உபாதைகளும்
தியாகிகள் பெற்று நமக்குத் தந்த
சுதந்திரத்தை சுயநலத்திற்காக
பாழாக்கலாமா!!
தனிமனித சுதந்திரம்
என்பது இன்று கேள்விக்குறியாக
மாறி தெருவெங்கும்
மனித போர்வையில் வீதியெங்கும்
கோவில் உண்டியல்கள்!
நமது பிள்ளைகள்
நலம் வேண்டி பெற்ற தாய்த் திருநாட்டை
களங்கப்படுத்தலாமா!