STORYMIRROR

Deepa Sridharan

Abstract

3  

Deepa Sridharan

Abstract

உயிர் தீண்டும் ஓர் படைப்புக்காக

உயிர் தீண்டும் ஓர் படைப்புக்காக

1 min
187

ஆதுரமாக வருடிக்கொடுத்ததால்நம்பிவிட்டேன் இரவுகளைஉறக்கத்தைக் குத்திக்கிழித்தகூர்மயிர்கள் வெட்டைவெளியில்தைத்துக் கிடக்கின்றனகருவிலோ ஏட்டிலோமனிதவெள்ளம் பெருக்கெடுத்தகடைத் தெருவிலோமௌனத்தின் மழையிலோதேங்கிக் கிடந்தமொழித் தடாகத்தில்கல்லெறிந்து காதுமெறிந்தேன்சுழிந்து சுழிந்துதழும்பிக் கொண்டிருந்தனசில சொற்கள்அவற்றை முந்திக்கொண்டும்முணகிக் கொண்டும்தெறித்துச் சிதறினஇன்னும் பல சொற்கள்அவற்றில் ஓரிரு நூறுஉளம்நாடும் சொற்களைகளவாடிவந்த செவிகள்விரல்களில் பதுக்கிவைக்கஎதன்பின் எதைக்கோர்க்க என்றுதுழாவிக் கொண்டிருக்கையில்தீக்காடாய்த் திரண்டவெட்டைவெளியில்கருகிக்கிடந்தன கூர்மயிர்கள்பொய்த்துவிட்ட இரவுகளைவசைபாடிக் கொண்டேநாட்கள் கழிகின்றனஉயிர் தீண்டும்ஓர் படைப்புக்காக!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract