துளிர் விடும் விதைகள்
துளிர் விடும் விதைகள்

1 min

23.7K
உள்ளம் சுமக்கும் கனவுகள்
ஆயிரமாயிரமாய் நாளும்
ஏறிக் கொண்டே தானிருக்கின்றன !
ஆனாலும் - ஓர் நாளும்
அவை கனத்ததில்லை !
ஏனோ ?
மண்ணில் விழும் விதைகளை
தன்னுள் தாங்கிக் கொண்ட
நிலம் தனைப் போல்
மனம் தனில் விழுந்திட்ட
ஆசை விதைகளுமே
ஓர் நாள் நிறைவேறி
மனம் தனை நிறைத்திடும்
துளிர் விடும் விதைகளாய் !