STORYMIRROR

நாஞ்சில் செல்வா

Abstract

5.0  

நாஞ்சில் செல்வா

Abstract

போய்விடுவேன்...

போய்விடுவேன்...

1 min
397


நான் போய்விடுவேன்.....


போவதற்கு முன்


 என்னிடம் கூற நினைத்தை இப்போதே கூறிவிடுங்கள்....


என்னிடம் கேட்க நினைத்ததை இப்போதே கேட்டுவிடுங்கள்...


என்னைப்பற்றிய நினைவுகளை

இப்போதே பகிர்ந்துவிடுங்கள்....


என்னிடம் காட்டாத உணர்வுகளை 

இப்போதே காட்டிவிடுங்கள்...


என்னிடம் சொல்லாதா பாராட்டுகளை இப்போதே சொல்லிவிடுங்கள்...


என்னிடம் தீர்க்காத கருத்துவேறுபாடுகளை 

இப்போதே தீர்த்துவிடுங்கள்...


என்னிடம் காட்ட அன்புகளை 

இப்போதே காட்டிவிடுங்கள்...


என்னிடம் கூறாத புரிதல்களை

 இப்போதே கூறிவிடுங்கள்...


என்னிடம் செல்லாத நன்றிகளை 

இப்போதே சொல்லிவிடுங்கள்..


என்னிடம் ஆச்சிரியத்தில் ஆழ்த்திய ஆளுமைகளை

 இப்போதே கூறிவிடுங்கள்......


என்னிடம் வியப்பில ஆழ்த்திய ஆற்றல்களை இப்போதே கூறிவிடுங்கள்....


 நான் போயிடுவேன்...கேட்க முடியா தூரத்திற்கு....


கேட்கமுடியா என்னிடம் என்னைப்ற்றி பேசாதீர்....உங்கள் ஆறுதலுக்காக...


எதுவென்றாலும் போவதற்கு முன் கூறிவிடுங்கள்....

.நிறைவாய் விடைபெறுவேன்.......


.


Rate this content
Log in