Mohana B

Fantasy Others Children

4  

Mohana B

Fantasy Others Children

சகோதரர்கள்

சகோதரர்கள்

1 min
376


#சகோதரர்கள்_தினம்2023


"என்ன ரெண்டும் பையனா? ஒரு பொண்ணு பெத்து இருக்கலாம் இல்ல.. பொண்ணுங்க தான் இந்த காலத்துல அப்பா அம்மாவ வச்சி பார்த்துக்குது!…பசங்கலாம் சும்மா...."


இப்படி போற போக்குல சொல்லிட்டே போறாங்க நம்மாளுங்க!🙃


ஆமா..ரெண்டும் பையன் தான். ஆனா அத நெனச்சி நான் ஒரு நாள் கூட வருத்தப்பட்டதே இல்ல.


இவங்க ரெண்டு பேர வளக்கறதுலயே அவ்ளோ வித்தியாசம்.


ஒருத்தன் குலாப்ஜாமூன் கலரு. இன்னொருத்தன் ரசகுல்லா கலரு... ஆனா ரெண்டுமே செம்ம டேஸ்ட்டு தான்.


ஒருத்தன் படு சைலன்ட்டு.. இன்னொருத்தன் பக்கா வயலன்ட்டு..


ஒருத்தன் எல்லாத்துக்கும் பயப்படுவான்.. இன்னொருத்தன் எதுக்குமே பயப்பட மாட்டான்..


சில நேரம் வெறித்தனமா அடிச்சிப்பானுங்க.. பல நேரம் வேற லெவல் கெமிஸ்ட்ரியோட கொஞ்சிப்பானுங்க...


இப்படி அவங்களுக்குள்ள 10 விஷயத்துல வேறுபாடும், 100 விஷயத்துல ஒற்றுமையும் இருக்கு.


நம்ம வச்ச தரமான செடி நல்லா வளரலனா காரணம் நம்ம தான். செடி இல்ல.


எந்த எதிர்பார்ப்புமின்றி நிபந்தனையற்ற அன்போடு எப்போதும் இருப்பார்கள் என நம்புகிறேன்.


சகோதரர்கள் தின வாழ்த்துகள்!


திருமணத்திற்கு முன் 2 அண்ணன்களோடும், திருமணத்திற்குப் பின் 2 மகன்களோடும் இருப்பது வரமெனக்கு!!!💟


-ப.மோகனா அய்யாதுரை


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar tamil story from Fantasy