முதல் முத்தம்
முதல் முத்தம்
முத்தம் என்றாலே யுத்தம் தானோ!
இருள் கருவின் கோ நான் !
என் பனிக்கொட்டையுள் போர் ,
போருக்கு பின் பிறந்தேன் நான் !
இதழ் பூ கொண்டு நான் கண்ட முதல் மழை "முத்தம்" !!!
இளமை பிறந்தது , காதலும் !
கண்கள் பேசியது , ஏனோ பின் இருதயம்
தனி தாண்டவம் ஆடியதும் ,
இதழ்கள் இணைந்து புது மொழி பேசி , என் மனம் மறுக்கும் வரை முதல் முத்தமிட்டாள் !!
பல புத்தகங்கள் போல , பல முத்தங்களும் யுத்தங்களே !!!