ரசிக்க மறந்து...!!!
ரசிக்க மறந்து...!!!
இருள் மெல்ல விலகத் தொடங்க
காற்றும் சற்று குளிராகவே இருக்க
பறவைகளின் கானம் இதமாய் கேட்க
கதிரவன் தன் கதிர்களை மெல்ல நீட்டி
சோம்பல் முறித்து எட்டிப் பார்க்க
வெட்கம் சிந்திய மேகமோ
செவ்வானத்தை எடுத்துப் போர்த்த
இரவின் பனியில் நனைந்த நெற்கதிரோ
காற்றின் இசைக்கு தலையசைத்து
கதிக்கரம் வீசும் திசை நோக்கி சாய்ந்து குளிர் காய
நனைந்திருந்த தரையும் மண் வாசம் வீச
மரத்தில் அணில்களும் துள்ளிக் குதித்து விளையாட
அழகாய் புலரும் காலை பொழுதை காணாது
பலர் ஏழு மணிக்கு அலாரம் அடிக்கும் வரை தூங்குகின்றனர்
கற்பனை கனவில் எட்டாத இயற்கை காட்சியின்
அழகை ரசிக்க மறந்து....!!!
