STORYMIRROR

Chidambranathan N

Children Stories Fantasy Children

4  

Chidambranathan N

Children Stories Fantasy Children

குழந்தையின் அழகு

குழந்தையின் அழகு

1 min
195

சண்டையிடு விட்டுக் கோபமுடன் இருக்கும் குழந்தை அழகு!

சமானத்துடன் அனைத்தையும் மறந்து சிரிக்கும் குழந்தை அழகு! 

சகிப்புத்தன்மையுடன் அமைதியையும் புன்னகையையும் போதிக்கும் குழந்தை அழகு! 

உரிமையென நினைத்து அதிகாரம் செய்ய முயலும் குட்டிக் குழந்தை அழகு!

உறவினர்கள் மாறி மாறிப் பேசும் உணர்வுகளைப் புரியாமல் தவிக்கும் குழந்தை அழகு! 

யோசித்துப் பேசாத வார்த்தைகள் செப்பும் மழலைப் பேச்சுக் குழந்தை அழகு! 

எந்த நிலையிலும் தயார் சினம் கொள்ளக் கூடாது என ஆசைப்படும் குழந்தை அழகு! 

நட்சத்திரங்களைக் காண இருள் வேண்டும் என உறுதியாகச் சொல்லும் குழந்தை அழகு! 

யோசித்துப் பேசாமல் நேசித்துப் பேசும் குழந்தை அழகு! 

ஆயிரம் பேர் வந்து பார்த்துச் சென்றாலும் ஒய்யாரமாகச் சாய்ந்து சிரிக்கும் குழந்தை அழகு!

பெற்ற தாயை மட்டுமே சுற்றிச் சுற்றி வரும் குழந்தை அழகு! 

உடன் பிறந்த உறவுகளை வீட்டினிலே சென்று தேடும் குழந்தை அழகு! 

தெரியாத பதிலுக்கு நாம் விழிக்கும்பொழுது நம்மைப் பார்த்து நகைக்கும் குழந்தை அழகு! 

பாசத்துடனும் பிரிவு இல்லாமலும் வாழும் குழந்தை அழகு! 

கோபம் இல்லாத பெற்றோருடன் மகிழும் குழந்தை அழகு! 

பேராசை இல்லாத குடும்பத்தினருடன் வசிக்கும் குழந்தை அழகு! 

மான் விழிகளைக் கொண்டு அங்கும் இங்கும் பார்க்கும் குழந்தை அழகு! 

செல்லமான வெற்றியை இலக்காகக் கொண்டு வீட்டிற்குள் செல்லமாக ஓடும் குழந்தை அழகு! 

குடும்பத்தில் அனைவரையும் சமாதானம் செய்யும் குழந்தை அழகு! 

அழகுக்கே அழகு சேர்க்கும் குழந்தை அழகு! 


Rate this content
Log in