STORYMIRROR

Chidambranathan N

Children Stories Inspirational Children

4  

Chidambranathan N

Children Stories Inspirational Children

குழந்தைகளின் அம்மா

குழந்தைகளின் அம்மா

1 min
210

பாசத்திற்கு மறுபெயர் அம்மா!

குழந்தைகளின் முதல் கடவுள் அம்மா!

தந்தையுடன் தன் செல்லக் குழந்தைகளை விளையாடிடத் தன் குழந்தைகளை அழகுபடுத்திக் கொடுப்பவள் அம்மா!

விடியற்காலையில் எழுந்துத் தன் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து உழைப்பவள் அம்மா!

எல்லாக் குழந்தைகளையும் வீட்டின் நிர்வாகத்தையும் தொடர்ந்து திறமையுடன் நிர்வகித்துவருபவள் அம்மா!

எல்லாக் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் ஒளிவிளக்காகத் திகழ்பவள் அம்மா!

தந்தையின் ஆணாதிக்க அதிகாரத்தினைத் தனது குழந்தைகளுக்காகப் பொருத்துக் கொள்பவள் அம்மா!

குழந்தைகளின் மழலைப் பேச்சுக் கோபத்தையும் செல்லமாகப் பொருத்துக் கொள்ளுபவள் அம்மா!

குழந்தைகளின் உணவுத் தேவைகளைத் தொடர்ச்சியாகப் பூர்த்திசெய்பவள் அம்மா!

குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை எனில் உடனிருந்து தொடர்ந்து கவனிப்பவள் அம்மா!

குழந்தைகளின் முதல் ஆசிரியர் அம்மா!

வீட்டு நிர்வாகத்தில் பணத்தினைச் சிக்கனமாகச் செலவு செய்து தனது தனது குழந்தைகளின் எதிர்காலத் தேவைக்குச் சேர்த்துவைபவள் அம்மா!

அனைத்துக் குழந்தைகளும் சிறந்த ஆளுமையுடன் திகழத் தினந்தோறும் உழைத்துக் கொண்டிருப்பவள் அம்மா!

ஒவ்வொரு தாயும் கேட்க ஆசைப்படும் முதல் வார்த்தை அம்மா!

அனைத்துக் குழந்தைகளின் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை அம்மா!

குழந்தைகளின் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தையினைக் கேட்டுப் பூரித்துப் போகும் அம்மா!

ஒவ்வொரு குழந்தையினையும் வளர்த்து ஆளாக்கும் அம்மா!


Rate this content
Log in