ஏகாந்த வாழ்வில் ஏது சுகம்?
ஏகாந்த வாழ்வில் ஏது சுகம்?
அன்பை மறந்து....
ஆசையைத் துறந்து....
இன்பத்தை வெறுத்து..
ஈடில்லா உறவுகளை தவிர்த்து ....
உன்னத வாழ்வை இழந்து....
ஊர்ஊராய் சுற்றித்திரிந்து...
எல்லையில்லா செல்வந்தனை பெற்று வந்தாலும்....
ஏகாந்த வாழ்வியலில் ஏது ஒரு சுகம்?
ஐஸ்வரியங்கள் இழந்த வாழ்வை மீட்டு தந்திடுமா?
ஒன்று கலந்த அன்போடு. ...
ஓர்கூட்டில் நல் உறவுகளோடு...
ஔடதமாம் அன்பை பகிர்ந்து....
வாழும் வாழ்வில் அல்லவோ சுகம்?
காசு பணத்திற்காக காத தூரம் அனுப்பிவிட்டு....
கனவுதனில் வாழ்க்கை தனை வாழ்ந்துவிட்டு....
காணொளியில
் காட்சிகளை கண்டுவிட்டு..
வாழ்க்கை முழுவதும் வனவாசம் தனை புகுந்துவிட்டு...
காலம் தள்ளும் வாழ்வில் ஏது ஒரு சுகம்?
அன்பான ஓர் ஸ்பரிசம்...
காதலோடு ஓர் பார்வை...
கடனில்லா கால் வயிற்று கஞ்சி....
உறவுகளோடு ஓர் நிமிடம்...
இதைவிடவா இன்பத்தை தந்துவிடும் அயல்நாட்டு வாசம்?
இழந்த வாழ்வுதனை மீட்டுத் தந்திடுமா?
இன்பந்தனை கூட்டித் தந்திடுமா?
இன்பத்திலும்... துன்பத்திலும்...
சேர்ந்தே இருப்போம்!
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம் !
ஒழித்திடுவோம் அயல்நாட்டு மோகம்தனை!
அடைந்திடுவோம்அன்பின் சுகம்தனை!