STORYMIRROR

Emil Bershiga

Abstract Inspirational Others

4  

Emil Bershiga

Abstract Inspirational Others

அன்பின் ரூபி

அன்பின் ரூபி

1 min
374

அன்பை உணர்ந்துக்கொள்ள,

ஒரு பயணத்தை மேற்கொண்டேன்.


தாயின் அன்பை சிறந்தது என்று

பிறர் கூறுவதை கேட்டேன்.

ஆனால், குப்பை தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தையை கண்டு இதயம் பதபதத்தது.


மீண்டும் பயணத்தை மேற்கொண்டேன்.


காதலிப்பவர்களிடம் அன்பு நிறைந்தது என்று பலர் சொல்வது காதில் விழுந்தது.


தெருவில் இளம் வயதை நெருங்கிய பெண்னை ஒருவன் சித்திரவதை செய்து கொண்டு இருப்பதைக் கண்டு இதயம் பதபதத்தது.


மீண்டும் பயணத்தை மேற்கொண்டேன்.


செல்லும் வழியில் சகோதரர்கள் அன்புடன் விளையாடுவதை கண்டு,

இது தான் உண்மையான உறவு என்று வீட்டை நோக்கி நகர்ந்தேன்.


தீடிரென ஒரு கூக்குரல்,

இதயம் வியந்தது.


நான்கு வரிகள் கொண்ட,

சொத்திற்காக தன் சகோதரனுக்கு

எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.


நான் மேலும் என் பயணத்தை மேற்கொண்டேன்.


பல நிமிடங்கள் அலைந்து திரிந்தேன்.


அன்பே கண்களில் தென்படவில்லை.


நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறதை பார்த்தேன்.

அவர்களின் பேச்சுக்களில்,

சுயநலத்தை கண்டேன்.


சிறிது நேரம் இளைப்பாற

உட்கார்ந்தேன்.


சுவரில் காணப்பட்ட ஒரு வாசகம்

இருதயத்தை கவர்ந்தது.


 இறைவன் உலகத்தை நேசித்த தால்,

தன் மகனை உலகிற்கு தந்தார்.

இறுதியில் அன்பின் ரூபியான இயேசுவை கண்டேன்.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract