விளக்கு
விளக்கு
ஒரு ஏழை வியாபாரி குடும்பம். அவர் வீட்டில் வியாபாரி,மனைவி மற்றும் ஐந்து வயது மகன் என மூவர் மட்டுமே. வியாபாரிக்கு சொத்து என சொல்லிக் கொள்ள ஒரு சிறிய நிலமும் இரண்டு அறை கொண்ட ஒரு ஓட்டு வீடு மட்டுமே இருந்தது. அதையும் அபகரிக்க வியாபாரியின் அண்ணன் தீர்மானித்தான். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நேரிடும். இதை வியாபாரி தனது நிலம் என்று சொத்து பத்திரத்தில் உள்ளதாக கூறுவார். ஆனால் அந்தப் பத்திரம் தொலைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இதனால் வியாபாரியின் அண்ணன் போலியான பத்திரம் மூலம் நிலத்தை அபகரித்து விடலாம் என எண்ணி பத்திரம் செய்யப் புறப்பட்டான்.
வியாபாரியின் மகனும் அவனது நண்பர்களும் சேர்ந்து விளையாடுவதற்காக வயல்வெளிக்கு சென்றனர். அங்கு அவன் ஒரு கனமான பாத்திரம் தடுக்கி கீழே விழுந்தான். அந்தப் பாத்திரத்தை மண்ணிலிருந்து எடுத்தான்.
அதைத் தன் சட்டையால் துடைக்கவே அதிலிருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது. "ஜி ஜி பூதம் உங்கள் அடிமை நான்" என்று உரத்த குரலில் கூறியது. இதைக் கேட்ட வியாபாரி என் மகனும் அவரது நண்பர்களும் பயந்து ஓடினர். அந்த பூதம் வியாபாரியின் மகன் அருகில் சென்று, " நீ கேட்கும் ஒரு ஆசையை நான் நிறைவேற்றுவேன் என்ன வேண்டுமானாலும் கேள்" என்றது. அவனது நண்பர்களும் மிட்டாய்களும் விளையாட்டு சாமான்களும் கேட்கச் சொன்னார்கள். ஆனால் அவனோ இரண்டு நிமிடம் யோசித்து "என் வீட்டில் தொலைந்துபோன அந்தப் பத்திரம் வேண்டும்" என்றான்.
அந்த பூதம் தொலைந்த பத்திரத்தை அவன் கையில் கொடுத்தது. உடனே அவன் ஓடி சென்று அவனது அப்பா கையில் பத்திரத்தை கொடுத்தான்.
அங்கோ வியாபாரியின் அண்ணன் காவல்துறையின் உடன் வந்து நிலத்திற்காக சண்டையிட்டுக் கொண்டு இருந்தான்.
பத்திரத்தை பார்த்ததும் வியாபாரி தன் மகனையும் உள்ளே அழைத்து சென்றான். வியாபாரி இது எங்கிருந்து உனக்கு கிடைத்தது என்று கேட்க அவன் நடந்த கதையைக் கூறினான். வியாபாரியும் வியாபாரியின் மனைவியும் இக்கதையை கேட்டு சிரித்தனர். எப்படியோ பத்திரம் நம் கைக்கு கிடைத்துவிட்டதே என்ற திருப்தியில் வியாபாரி தன் அண்ணனிடம் காண்பித்து "இது எனக்கான நிலம் நீ இதில் உரிமை கொண்டாடக உனக்கு உரிமை இல்லை" என்று கூறினார். போலீசார் பத்திரத்தை வாங்கி பார்த்துவிட்டு இது வியாபாரி நிலம் என்று கூறினார்கள். சொத்துக்காக வியாபாரியை துன்பப்படுத்தியதற்காக வியாபாரியின் அண்ணனை காவல்துறை கைது செய்தனர். வியாபாரி தன் அண்ணன் தெரியாமல் செய்ததாகவும் அவனை விட்டுவிட கூறியும் போலீசாரிடம் கேட்டார். போலீசார் வியாபாரியின் மனதை பார்த்து அவனது தோளில் தட்டிவிட்டு சிரித்துக்கொண்டே சென்று விட்டார். வியாபாரியின் அண்ணனும் வெட்கத்தில் தலை குனிந்து அங்கிருந்து சென்றுவிட்டார். மகனை தூக்கி அணைத்து வியாபாரி முத்தமிட்டார்.
