Amirthavarshini Ravikumar

Others

4  

Amirthavarshini Ravikumar

Others

வீரர்

வீரர்

2 mins
299


"அம்மா...அப்பா வந்தாச்சு" எனக் கூறிக் கொண்டே வாசலை நோக்கி ஓடுகிறாள் அம்மு. 

" அம்மு, அப்பா பக்கத்துல போக கூடாது அவங்க குளிச்சிட்டு வந்ததும் போ"

 " ஏன் அம்மா "

" அப்பா மருத்துவமனையிலிருந்து வராங்களா. அங்க நிறைய நோயாளிகள் இருப்பாங்க அதனாலதான்"

" சரி அம்மா"

 குணா குளித்துவிட்டு நாற்காலியில் வந்து அமர்கிறான். அம்மு அவனை விளையாட அழைக்கிறாள். அம்மு அப்பா கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கட்டும் என்கிறாள் தமிழ். அந்நேரம் தொலைபேசி அடிக்கிறது. 

" தமிழ் அதை எடுத்து தா" என்கிறான் குணா. 

 மருத்துவமனையில் கொரோனா அவசர சிகிச்சைக்காக குணாவை அழைத்தனர். குணாவும் உடனே கிளம்பி சென்றான். 

 "அப்பா என்கூட விளையாடவே வர மாட்டேங்கிறாங்க அம்மா" என அழுதுகொண்டே கூறுகிறாள் அம்மு. 

 தமிழ் அவளை சமாதானம் செய்கிறான். "அப்பா வேலைக்கு சென்றால் தான் உனக்கு நிறைய பொம்மை மிட்டாய்கள் வாங்கி வர முடியும்" என்கிறாள். அம்முவிற்கு சாப்பாடு ஊட்டி படுக்க வைக்கிறாள். குணா இரவு 2 மணிக்கு வீட்டிற்கு வருகிறான். 

 தமிழுக்கும் குணாவுடன் 

நேரத்தை செலவிட வேண்டும் என தோன்றியது. ஆனால் குணா மிகவும் சோர்ந்து போய் வந்தான் அதனால் தமிழும் ஏதும் பேசவில்லை. மறுநாள் குணா விற்கும் பயங்கர தலைவலி. வீட்டிலிருந்து ஓய்வெடுக்கலாம் என நினைத்த நேரம் மறுபடியும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்து அழைத்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவமனைக்கு கிளம்ப தயாரானான். தமிழ், "உங்களுக்கும் உடல்நிலை சரியில்லை நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும்" என்றாள்.

 ஆனால் குணாவும் என் உடலை விட நோயாளிகளின் உயிர் தான் எனக்கு முக்கியம் என கூறிவிட்டு சென்றான். அன்று இரவும் குணா ஒரு மணி அளவில் நான் வீட்டிற்கு வந்தான். வந்ததும் ஒரு மாத்திரையை போட்டு விட்டு தூங்கிவிட்டான். தமிழ் அருகில் போய் அமர்ந்து அவனது தலையை தடவிவிட்டாள். குணா விழித்து பார்த்தான். "இப்படி எல்லா மருத்துவர்களும் தன் நிலையை பற்றி கவலை கொள்ளாமல் வேலை பார்த்தால் எப்படி?" என்றாள் தமிழ்.

 குணா சிறிதாக சிரித்தான். "நேரமாகிவிட்டது படுத்து உறங்கு தமிழ்" என்றான். 

"ம்ம்... "

 மறுநாள் காலை விடிவதற்கு முன்பே குணா மருத்துவமனைக்கு சென்று விட்டான். அன்று அம்முவின் பிறந்தநாள். அம்மு இன்றும் அப்பா மருத்துவமனைக்கு சென்று விட்டாரா என கூறி அழ தொடங்கிவிட்டாள். தமிழ் அம்முவை எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தும் அவள் அழுகையை நிறுத்திய பாடு இல்லை. ஒருவழியாக அம்முவை தூங்க வைத்தாள் தமிழ். குணாவிற்கு தமிழ் அலைபேசி மூலம் அழைப்பு விடுத்தாள் ஆனால் குணா அலைபேசியை எடுக்கவே இல்லை. இரவு 7 மணி அளவில் குணா தமிழிடம் இன்றும் நேரம் ஆகும் என்றான். அப்பொழுது தமிழ், "இன்று அம்முவின் பிறந்தநாள் உங்களைத் தேடி அவள் அழுகிறாள்" என்றாள். குணாவிற்கும் கண்கள் கலங்கியது. எனக்கு இங்கு வேலை அதிகமாக இருக்கிறது. மருத்துவமனையை விட்டு வெளியே வர வாய்ப்புகளே இல்லை தமிழ் என்றான். தமிழும் சரி எனக் கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டாள். இரவு 10 மணி அளவில் குணா வீட்டிற்கு வந்தான். அம்மு, "நான் உங்களுடன் பேச மாட்டேன் அப்பா" எனக்கூறினாள். குணாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்பொழுது குணாவிடம் தமிழ் ஒரு பெரிய பொம்மையையும் ஒரு மிட்டாயும் கொடுத்தாள். குணா தமிழிடம் "இதை எப்படி வாங்கினாய் தமிழ் இதை தேடி தான் நான் இரவு முழுவதும் அலைந்தேன் ஆனால் கடைகள் இல்லை". 

 தமிழ் சிரித்துக்கொண்டே "இதைக் கொடுத்து அவளை சமாதானம் செய்யுங்கள்".

" நன்றி தமிழ் ".

"சரி போய் உங்க பொண்ணுட்ட குடுங்க "

 குணா பொம்மை மிட்டாய் உடன் அம்மு முன்னாடி நின்றான். 

அம்மு மகிழ்ச்சியில் "ஹை எனக்குப் பிடிச்ச பொம்மை..."  

"நன்றி அப்பா"

"இப்போ கோவம் போய்ட்டா அம்மு" 

ஆமா... என கூறி குணாவை கட்டி தழுவி கொண்டாள்.  

இதை பார்த்த தமிழ், மருத்துவர்களும் இப்பொழுது ராணுவ வீரர்கள் போல் ஆகிவிட்டனர் என நினைத்தாள். 

சரி இப்பொழுது மூவரும் சாப்பிடலாம் வாருங்கள் என அழைத்து சென்றாள்.


Rate this content
Log in