வேண்டும் வரம்
வேண்டும் வரம்
"டேய் மச்சான் இன்னும் அப்படியே இருக்கற ஆளு மட்டும் தான் வளந்துருக்க"... என்று ஒருபக்கம் சத்தம் கேட்க, மறுபுறம்
"எப்படி இருக்க "...
எங்கு பார்த்தாலும் ஒரு கேலி கிண்டல் சிரிப்புதான். ஒலிபெருக்கியில் சத்தம் கேட்டது. அனைவரும் அமைதியாகினர். "நண்பர்களே நாம் இங்கு 10 வருடம் கழித்து பள்ளி பருவ நினைவுகளை மீண்டும் இங்கு சேர்ந்து கொண்டாட கூடியிருக்கிறோம்" என்றான் சரண். எல்லோரும் ஆனந்த கூச்சலிட்டனர். அப்பொழுது சாய் எழுந்து நாம் எல்லோரும் ஒன்றாக கேன்டீன் செல்லும்போது வாங்கிய தண்டனை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டான். "அதை மறக்க முடியுமா? " என்றாள் சீதா. எல்லோரும் அந்த சம்பவத்தை நினைத்து சிரிக்க ஆரம்பித்தனர்.
" எனக்கு ராமின் முகபாவனை தான் இன்னமும் ஞாபகத்தில் உள்ளது" எனக் கூறி சிரித்தாள் லட்சுமி.ஒரு முறை உணவு இடைவேளையின் பொழுது எல்லோரும் கேண்டீனுக்கு சென்றனர். அப்பொழுது குடிக்க பழ ஜூஸ் வாங்கி வரும் பொழுது ராம் அந்த ஜூஸ்யை ஒரு ஆசிரியர் மேல் எதிர்பாராதவிதமாக கொட்டிவிட்டான்.
அவருக்கு கோபம் வந்து விட்டது. வெள்ளை சட்டையை இப்படி நாசம் செய்துவிட்டாய் என அவர் திட்ட,
"சார் நான் உங்களுக்கு வேற ஒரு பழ ஜூஸ் வாங்கி தாரேன்" என பயத்தில் ஒலறி விட்டான். அருகில் உள்ள நண்பர்கள் சிரிக்க ஆரம்பித்தனர் இதனால் அந்த ஆசிரியருக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. அனைவரையும் வகுப்பறைக்குள் போகக்கூடாது என்றும் வெளியே முட்டி போட வேண்டும் என்றார். அப்பொழுது இவர்களை அருகில் உள்ள வகுப்பு மாணவர்கள் வித்தியாசமாகப் பார்த்தனர். இந்த நிகழ்வை இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் வருகிறது என்றான் சரண். "நான் பள்ளிக்கூட நாட்களைவிட என்ன பண்ண சேட்டைகளையும், நம்ம நண்பர்கள தான் நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்" என்றாள் லட்சுமி. மறுபடியும் அந்த காலம் காலம் வராதா... வசந்த காலம் ல அது... என எல்லாரும் ஒன்றாக பேச பேச அனைவருக்கும் கண்களில் நீர் ததும்பியது. சிறிது நேரம் கழித்து பள்ளி பருவத்தில் விளையாண்ட விளையாட்டுகளை எல்லாம் விளையாட தொடங்கினர். பள்ளி பருவ நினைவுகளும் வரம் தான்...
