வாழ்க்கைப் பாடம்
வாழ்க்கைப் பாடம்


தாத்தா மண்ணிலிருந்து ஒவ்வொரு நாற்றுச் செடியாகப் பிடுங்கி தெருவின் ஓரத்தில் நட்டு வைத்துக்கொண்டிருந்தார். ஜக்கம்பேட்டை கிராமத்தில் இருந்த அனைத்து கிராம மக்களும் தாத்தாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்தனர். கொய்யாவும்,மாங்கன்றும் எதற்காக தாத்தா நடவேண்டும் என கேட்டு அவரது செய்கையை உதாசீனம் செய்தனர்.
தாத்தாவும் தளராது வெயில் காலங்களில் நட்டு வைத்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினார். ஒரு வீட்டில் சிறுமி அசோகர் சாலையில் நிழலுக்காகவும், உயிரினங்கள் உண்பதற்காகவும் மரங்கள் நட்டதாகப் படித்துக் கொண்டிருந்ததைக் கேட்டபடி திண்ணையில் சாய்ந்து படுத்தார். காலங்கள் பறந்தோடின. கொரானா அனைத்து மக்களையும் வீட்டில் முடக்கியது.
ஆனால் ஜக்கம்பேட்டை மக்களுக்கு கொரானா பாதிப்பு இல்லை. தாத்தா நட்டு வைத்த நொச்சி மரமும்,வேம்பும்,வேங்கையும் மக்களைக் காத்ததை அங்கிருந்த மருத்துவர் கவனித்தார். பசித்தால் சாப்பிட சாலையோரம் இருந்த கொய்யா,மாமரங்களில் இருந்த பழங்களைச் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்ததைக் கண்டு அவர் தனது தோட்டத்தில் இருந்த கற்பூரவல்லி,தூதுவளை செடிகளைச் சாலையோரம் நடுவதற்காக வேகமாகச் சென்றார்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம் கற்றுத் தர தனது நண்பர்களை வரவழைத்தார். வாழ்க்கைப்பாடம் என்னவென்பதை மருத்துவர் நன்றாக உணர்ந்தார்.