ஊதி ஊதி பெருசாக்கு...
ஊதி ஊதி பெருசாக்கு...
நபர் 1 : அதோ பொராரே... அவர் சின்னத ஊதி பெருசாக்குவாரு...
நபர் 2 : அப்படியா?... அவர் ரொம்ப மோசமானவரோ??....
நபர் 1 : இல்ல இல்ல... அவர், ரொம்ப நல்லவர்.
நபர் 2 : என்னங்க நீங்க.... சின்ன விஷயத்த ஊதி பெருசாக்குறவர போய் ரொம்ப நல்லவர்ன்னு சொல்லுறீங்களே...??..
நபர் 1 : அட நீங்க வேற... அவரோட சூழ்நிலை அப்புடிங்க.
நபர் 2 : ம்க்கும்... சூழ்நிலையாவது மண்ணாவது.., சின்ன விஷயத்த அப்படியே விடுறது தானே நல்லது... அத போய் ஏன் ஊதி பெருசாக்கனும்?...
நபர் 1 : அதுதான் அவரோட பொழப்பு ... அப்படி செய்யலன்னா அவர் வீட்டுல அடுப்பெரியாது... எல்லோரும் பட்டினி கிடக்க வேண்டியது தா...
நபர் 2 : இதெல்லாம் ஒரு பொழப்பா... ??.. இந்த பொழப்பு பொழைக்குறதுக்கு பேசாம பிச்ச எடுக்கலாம்.
நபர் 1 : பலூன் விக்கிறது ஒன்னும் அவ்வளவு மோசமில்லையே...?
