உணவு
உணவு


பாப்பா! உனக்கு அண்ணன் கேக் வாங்கிட்டு வந்திருக்கான்! எடுத்துக்கோ!
எனக்கு வேண்டாம் அம்மா!
ஏம்மா!
அண்ணன் சம்மட்டி அடிச்சு கையில் எல்லாம் ரத்தம் வந்து படுத்திருக்கான். அதுக்கு மருந்து போடாமல் நல்லெண்ணெயோ,தேங்காய் எண்ணெயோ போடாமல் ராக்கி கயிறு வாங்கிட்டும்,எனக்கு கேக்கும் வாங்கிட்டு வந்திருக்கான். இதுல நகைக்கடையில் கிஃப்ட் வேறு வாங்கி வைத்திருக்கான்.
அண்ணன்,தங்கை பாசம் என்பது பொருளாலோ,பணத்தாலோ,கிஃப்டாலோ வருவது கிடையாதுன்னு எங்க டீச்சர் சொல்லி இருக்காங்க அம்மா! பள்ளியில் படிக்கும்போதே என் கூட படிக்கும் மாணவர்களுக்கும் கயிறு கட்டுவேன். தூய அன்பினால் மட்டும்தான் உறவுகள் உருவாக்கப்படுகிறது... இந்த கயிறும் அப்படித்தானே அம்மா! நம்முடைய உணவுத் தேவைக்காக குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு யாரையும் சார்ந்து வாழக்கூடாதும்மா! எனக்கு வேலை கிடைச்சுடுச்சு! முதல் மாத சம்பளத்துல ரக்க்ஷாபந்தன் கொண்டாடலாம் அம்மா! அண்ணனுக்கு முதலில் மருந்து போடுங்க! என்றாள் நளினி.