தாமோதரன் சாது

Children Stories Tragedy Inspirational

4.8  

தாமோதரன் சாது

Children Stories Tragedy Inspirational

தன்னம்பிக்கை திவ்யா

தன்னம்பிக்கை திவ்யா

7 mins
481



வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼



இக்கதையில் வரும் அனைத்தும் அரசியல்வாதிகள் போல் சில கலப்படம் உள்ளது ..,

“கற்றதை கற்றுக் கொடு" பழமொழி நாம்யாறிவோம் ! எனக்கு தெரிந்ததை இதோ உங்களுக்கு தேவையான பயன்யுள்ள தகவலிருந்தால் எடுத்து கொள்ளுங்கள் .... 


இளங்காத்து வீசுதே ! இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைன்ஞ்சு ஓடுதே ! என்று வானொலில் ஒழிக்க ,


இளங்காற்று மிதமாக வீசிக் கொண்டிருந்த மாலை பொழுதில் திவ்யா தன் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து தலைவாரி கொண்டிருந்தாள் , காற்று சற்று

அவள் கூந்தலை தீண்டி செல்லும் போது காட்சியை கண்டால் , மழலை முதல் பல் எட்டிப் பார்ப்பது போல அவள் வளர்த்த ரோஜா செடியில் முதல் மொட்டு எட்டி பார்த்து சிரித்தது , இளங்காத்தில் அந்த ரோஜா மணம் திவ்யாவின் நாசியை தீண்டி அழைத்தது , அவள் அருகே சென்று அந்த பூவை தடவி பார்த்தால் பிறந்த குழந்தை இருந்தது போல் உணர்வு அவளுக்கு தோன்றியது , பின் அதை நுகர்ந்து பார்த்தால் அந்த மணம் அவளை பரவாசப்படுத்தியது , திவ்யாவும் உல்லாசமாக இருந்தாள், அதே நேரத்தில் குயில்கள் தன் வீட்டை அடைந்த்தது.


ரோஜா செடி அருகே உள்ள மாமரத்தில் அமர்ந்து குயில்கள் கூ ..கூக்கு ... என அவளை அழைத்தது , மழலை மொழி யாருக்கும் அறியாது இது இயற்கை அவளுக்கு வீதி விலக்குல்ல , ஆனால் அந்த அழைப்பு இசையை அவள் ரசித்தாள் , இந்த சூழலில் அவள் மனம் இழகுவானது , அதற்கு காரணம் அன்று பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்றுதான் , கடந்த நாளை எண்ணி மனதில் அசைப் போட அரம்பித்தால் , நாமும் திவ்யாவுடன் செல்வோம் , 


திவ்யா இயற்கையாக அமைதி குணம் உடையாவள் , பிறர் சத்தமாக பேசினால் கூட அவளுக்கு நடுக்கம், பயம் , தயக்கம் அனைத்தும் அவள் தோழிகள் எப்போதும் கூடவே இருப்பார்கள் , இதனால் மற்ற மாணவர்கள் மத்தியில் ஒன்றும் தெரியாதது போல் 

தனித்துருப்பாள் , அவள் தோழிகள் கேழியும் , கிண்டலுக்கும் அவளுக்கு பஞ்சமில்லை , மதிய உணவு இடைவேளைக்கு பின் விஜி என்ற

அறிவியல் ஆசிரியர் வாருவார்கள் என்று எதிர்ப்பார்த்து கொண்டிருன்ந்த வேளையில் டேவிட் என்ற கணக்கு ஆசிரியர் வந்தார் , நாளை கணக்கு தேர்வு என்பாதால் கணக்கு பாடத்தை முடித்த பிறகு அறிவியல் தொடரலாம் என்று ஆசிரியர்கள்குள் ஒப்பந்தம் ,


 அதன்படியே வகுப்புகள் நடைப்பெற்றது , ஒவ்வொரு மாணவ , மாணவிகளிடையே வாய்ப்பாடுகள் கேட்க்கப்பட்டன , திவ்யாவிடம் பன்னிரெண்டாம் வாய்ப்பாடுகள் கேட்க்கப்பட்டன , அவளுக்கு நன்றாக தெரிந்துருந்தாலும் அவாளால் கூறமூடியவில்லை காரணம் அவள் பயம் என்ற 

தோழி தான் காரணம் , சற்று தயங்கிய நிலையில் எழுந்து நின்று அந்த மெல்லிய குரலில் சொன்னாள் , ஆசிரியர் மதியனம் உணவு உண்ணவில்ளையா என்று திட்டி சத்தமாக சொல் என்று கூறினார் , அவள் சொல்ல முடியாமல் தடுமாறினால் , சக மாணவார்கள் கூச்சலிட தொடங்கினார் , கடும் கோபம் கொண்ட ஆசிரியர் சரமாரியாக திவ்யாவை திட்டினார் , அதை கேட்டுக் கொண்டிருந்த சக மாணவர்கள் ஏளமாக சிரித்தனர் , இந்த சம்பவம் அவளை பெரிதும் பாதித்தது , பள்ளி முடிந்தபின் வீட்டை அடைந்தாள் , இந்த சம்பவத்தை எண்ணி அவள் மனம் வெதுப்பியது , அம்மாவிடம் சொல்லாமா வேண்டமா என்று அலை பாய்ந்தது , தயக்கம் என்ற தோழி அம்மாவிடம் மறைத்தது , இரவு வெகு நேரம் ஆகியும் அவளால் உறங்க முடியவில்லை , 


எல்லாம் தெரிந்த எனக்கு என்னால் ஏன் கூற முடியவில்லை என்று அவளுக்குள் எண்ணற்ற கேள்விகள் எழும்பியன , கண்ணிர் அவள் படுக்ககையை நனைத்தது , மறு நாள் விடிந்தது அவளால் கண் விழிக்க முடியவில்லை சிரமப்பட்டு கண் விழித்தாள் , நீர்யில்லாத குளம் போல் அவள் கண் சிவந்துருந்தது , அதை பார்க்க கோவைப்பழ போல் தெரிந்தது , படுக்கையிலிருந்து எழுந்து குளியலைக்கு சென்று வாளியில் உள்ள நீரை இரண்டு கையால் அள்ளி தன் முகத்தை கழுவி கொண்டாள் , கொடியிலிருந்த துண்டை எடுத்து துடைத்த பின் அவள் அம்மாவை தேடினால் , 


அம்மா ..... அம்மா ..... இங்கே தான் இருக்கேன் திவ்யா .... என்று அம்மாவின் குரல் தோட்டத்திலிருந்த்து வந்த்தது ., திவ்யா நேராக அம்மாவிடம் சென்று கட்டிக் கொண்டாள், அவளுக்கு என்ன நேர்ந்தது அறியாத அம்மா அவளை அணைத்து முத்தமிட்டாள் , நீ போய் குளித்துவிட்டு வா நான் தலைவாரி விடுகிறேன் பள்ளிக்கு செல்ல தயாராகு என்றாள், திவ்யா அம்மா கட்டிக் கொண்டு நான் பள்ளிக்கு போக விருப்பமில்லை என்று மறுமொழி கூறினாள் , அம்மா செடிக்கு தண்ணீர் பாய்ப்பதை நிறுத்தி ஏன் ?? என்ன ?? ஆயிற்று என்று கேள்விகளை அடுக்கினால் , தயக்கம் என்ற தோழி மீண்டும் வந்தாள் , ஏதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றாள் , இதை கவனித்த அம்மா அவளை மீண்டும் அனைத்து என்னிடம் மறைக்காமல் சொல் !!! தைரியாமக சொல் !! என்று கேள்விகளை எழுப்பினால் , 

திவ்யா அப்போது தான் தயங்கி தயங்கி வாய் திறந்தால் ,, அம்மா .. அம்மா.. அது வந்து ..... என இழுத்தால் , .......ம் சொல்லும்மா .... என்று மீண்டும் கேட்டால் , நேற்று கணக்கு ஆசிரியர் வாய்ப்பாடு சக மாணவரிடமும் , என்னையும் எழுப்பி கேட்டார் ... பிறகு என்ன நடந்தது என்று அம்மா கேட்டால் , 

என்கிட்ட பனிரெண்டாம் வாய்ப்பாடு கேட்டார் ..

நீ சொன்னியாம ...

இல்லம்மா...

ஏன் சொல்லவில்லை உனக்கு தான் தெரியும்ல ... அப்போ ஏன் சொல்லால ...

எல்லார் முன்னாடியும் நின்னு சொல்ல பயம் ! 

தப்பாக சொல்லிர்வனோ என்று 

பயம் தப்பாக சொல்லி மத்தவங்க பார்த்து சிரிப்பங்களோ என்று தயக்கம் அதான் சொல்லவில்லை அம்மா என்றாள் ,,,,



                                    நான் சொல்லமால் நின்னேன் ஆசிரியர் என்னை ரொம்ப திட்டிவிட்டார் , எனக்கு கக்ஷ்டமா இருந்துச்சு , என்னையால தாங்க முடியல !

 அதான் இரவு முழுவதும் அழுது அழுது காலையில கண் முழிக்க முடியல , கண்ணுல எரியுது

நான் நாளைக்கு பள்ளிக்கூடம் போறேன் என்று மழலையர் பள்ளிக்கூடம் (kindergarten) குழந்தைகளை போல போகாமல் இருக்கா ! காரணம் கூறுவது போல் அடுக்கிக் கொண்டே போயிட்டுருந்தால் , பெத்த மனசு பதட்டம் அடையாமல் ,

 தன் மகளை அணைத்தப் படியே இருவரும் வீட்டில் நுழைந்தார்கள் .

அம்மா திவ்யா நீ போய் பல் துலக்கிட்டு வா ...


நான் உனக்கு சூடாக தேனீர் போட்டு வைக்கிறேன் என்று கூறிக் கொண்டு சென்றாள் , சரியாம்மா...என்று சொல்லிவிட்டு சென்றாள் ,

திவ்யா வருவதற்குள் அவளது அம்மா காலை உணவுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தால் , திவ்யா காலை கடன்களை முடித்துவிட்டு கொடியில் கிடந்த துண்டை உதறி எடுத்து முகத்தை துடைத்து கண்ணாடியைப் பார்த்தால் நேற்று நடந்த சம்பவம் கண் முன்னே தோன்றியது ..,நேரம் ஆனதால்

அவளது அம்மா அவளை அழைத்தால் ..

நிகழ் காலத்துக்கு வந்தால்,

இதோ வரேன்மா என்று.. சொல்லிக் கொண்டு சென்றாள் 

டம்ளரில் தேனீர் வைத்து கொண்டிருந்தால் அவள் அம்மா ,

திவ்யா அவளது அம்மா அருகே சென்று தேனீர் வாங்கிக் கொண்டு

வீடு முற்றத்தில் அம்மாவுடன் அமர்ந்தால் , 


அம்மா தன் மகளை தலைகோதியாவறு பேச ஆரம்பித்தால் ..,,



திவ்யா என் கண்ணுல ... என் செல்ல பொண்ணுல .. இப்போ அம்மா ஒரு கதை சொல்றேன் ... அந்த கதையில உன்னை போலவே ஒரு குட்டி மயில் இருந்துச்சி ... அது என்னவலாம் பண்ணும் தெரியுமா.. சொல்றேன் கேளு என் செல்லம் ., என்று கதையை அம்மா ஆரம்பித்தால் .. வாருங்கள் நாமும் அந்த கதைக்குள் சிறிது பயணிப்போம் ... 



ஓர் அடர்ந்த காடு , அங்கு நிறைய மிருகங்களும் , பறவைகளும் எல்லாம் சேர்ந்து வாழ்ந்து வந்தது . ஒரு நாள் திடீரென காட்டில் தீ பிடித்துவிட்டது ( Amazon காடு போல்) , நல்ல கத்திரி வெயில் காலம் என்பதால் தீ வேகமாக பரவியது , அதில் ஒரு மரத்தில் மேல் கிளையில் பறவை கூடு இருந்தது அதுல நான்கு முட்டைகள் இருந்தன , அதே நேரத்தில் தாய் பறவை இல்லை கூட்டை விட்டு இரையை தேட சென்றிருந்தது , அதே இடத்தில் அந்த அழகு மயில் இரையை தேடி அலைந்து கொண்டிருந்தது , மனிதர்கள் உணர முடியாத ஒன்று பறவைகளிடம் உண்டு அதை தீ பரவுவதை உணர்ந்த தாய் பறவை பதட்டமடைந்து தன் கூட்டை நோக்கி வேகமாக வரும் வழியில் மரக்கிளைகளில் மாட்டி இறக்கையில் காயம் ஏற்ப்பட்டது , தாய் பறவையால் பறக்க முடியவில்லை ,உலகில் பணத்தை விட தாய் பாசம் மிக பெரியது .

தத்தி ... தத்தி தன் கூடுவுள்ள மரத்தில் ஒரு வழியாக வந்தடைந்தது .....

தீ மற்றும் புகை மண்டலத்தை பார்த்து மயில் பிழைக்க தப்பி ஓட ஆரம்பித்தது ,தாய் பறவை 

தன்னால் முடியாது நினைத்து கொண்டிருந்த வேளையில் ஓடுகிற மயிலை பார்த்துவிட்டது , பெத்தமனம் தன் வருங்கால சந்ததிக்காக மீண்டும் 

தத்தி ... தத்தி .. மயிலிடம் சென்று கெஞ்சியது ... 

மயில்லக்கா ... மயில்லக்கா ... கொஞ்சம் நில்லு என்றது , 


மயில் அந்த பறவையின் பரிதாப நிலையை கண்டு நின்றது சொன்னது நானே உயிர் பிழைக்க பயந்து ஓடிக் கொண்டிருக்கிறேன்.

என்னை ! ஏன் ? நிறுத்துகிறாய் ... மயில்லக்கா .. என்னால் பறக்க கூட இயலவில்லை !.. என் முட்டைகளை காப்பத்து அக்கா !

என்று கெஞ்சியது! ... 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் உதவாமல் இருக்க அது மனிதப்பிறவில்லை ..., மயில் சற்று யோசித்தது ..,,,


மயிலினால் வேகமாக பறக்க முடியும் , அதுக்கும் பயம் என்ற தோழியினால் சற்று தயங்கியது ,


பறவை மீண்டும் கெஞ்சியது , மயில்லக்கா உயிர் உள்ள வரை உன்னை மறக்கமாட்டேன் ! என்று அழுது புலம்பி தவித்தது , அருகில் நெருப்பு பரவி கொண்டே இருந்தது , நெருப்பில் மாட்டி கொண்டால் .. என்னை யார் காப்பத்துவது ...!! மனித இனம் போல் அழ்ந்து சிந்தித்தது , பின் சரி என்ன ஆனாலும் பரவாயில்லை பறந்து சென்று காப்பாற்றுவோம் என மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மேல் நோக்கி பறந்து சென்று கூட்டை அப்படியே தூக்கி கொண்டு வந்து தாய் பறவையிடம் சேர்த்தது , அந்த பறவைக்கு எல்லையற்ற மகிழ்ச்சி , 

ஆனந்த கண்ணீருடன் மயிலக்கா .... நான் உனக்கு நன்றி கடன்பட்டுள்ளேன் உன்னுடைய செயல் மிகவும் வியக்கத்தக்கது ..,, நெருப்பை பார்த்து பயப்படாமல் என் சந்ததியை காப்பாத்திவிட்டாய் ..,, என்று ஆகா.... ஓகோ ... என புகழ்ந்து தள்ளியது . 

மயிலுக்கு அளவு கடந்த மகிழ்ச்சிக்கு பின் அங்கே இருந்து வேகமாக நகர்ந்து சென்றது , மயில் தனக்க்குள்ளே பேசி கொண்டது தன் தைரியத்தை 

எண்ணி வியந்து கொண்டிருந்தது ., என்னால் இது முடியாது என்ற போதிலும் , ஆவது ஆகட்டும் என்ற நினைப்புதான் என்னை செயல்படுத்தியது ,, உதவாவும் முடிந்தது .., இனிமேல் எதை பார்த்தும் அச்சப்படமாட்டேன் , என்னால் முடிந்ததை துணிந்து செய்வேன் தனக்குள்ளே உறுதி மொழி எடுத்தது ., இவ்வாறு அவளது அம்மா கதையை முடித்தால் .


அம்மா மகளுக்கு உணவை உட்டிவிட்டு மதிய உணவையும் தயார் செய்து கொடுத்துவிட்டால் , அவள் மதிய உணவை எடுத்து பள்ளிக்கு புறப்பட்டாள் .

அம்மா..நான் பள்ளிக்கு போய் வருகிறேன் என்று கையசைத்தாள்.

அம்மாவும் போய் வாம்மா கண்ணு....என்றாள் ஆனந்த கண்ணீருடன் ..,

அவள் அம்மா பூஜையறை சென்று தனக்குள் சொல்லிக் கொண்டால் .., இனிமேல் திவ்யா புது உலகில் அடி எடுத்து வைப்பால் ..,மனிதர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்வாள் என சொல்லி கொண்டே மற்ற வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் ..,

திவ்யா எப்போதும் போல் இல்லாமல் இன்றைக்கு

மிகவும் புத்துணர்ச்சிவுடன் காணப்பட்டாள் , திவ்யாவை கண்டு 

அனைத்து மாணவர்களும் மிகவும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர் .,

என்னைக்குமே இல்லாத திவ்யா முற்றிலும் மாறுப்பட்டிருக்காள் என தோழிமார்க்குள் பட்டிமன்றம் அவற்றை கண்டுக் கொள்ளததுப் போலிருந்தால் , 

பட்டிமன்றத்தில் நடுவரின்

தீர்ப்பை கேட்பதை போல ஒரு தோழி கேட்டுவிட்டால் , 

திவ்யா சாந்தமாக பதில்யளித்தால் ...

ஆமாம் நான் என்னை பற்றி தெரிந்து கொண்டேன் ..,

அப்படி என்னப்பா ... தெரிந்துக் கொண்ட என தோழிமார்கள் பத்திரிக்கையளார்களை போல் கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றார்கள் .., 

மிகவும் பணிவுடன் கனத்த குரலில் என்கிட்ட இருக்கிற தோழிகளை (பயம் , பதட்டம், தயக்கம் , தாழ்வுமனப்பான்மை ) இது எல்லாம் என்னை விட்டு பிரிந்து கொண்டிருக்கிறது என்றாள் ..

ஓ.... அப்படியா அதையும் பார்த்திருவோம் என்றார் தோழிமார்கள் ..

வஞ்சகம் கலக்காத கள்ள புன்னகைவுடன் 

ஓ.... நல்லா பார்க்க தான் போறிங்க என்றாள் , 

பள்ளிக் கூடத்தில் தொடக்க ஒலி ... டங் ... டங் .. ஓசையெழுப்பியது ...

முதல் வகுப்பு அறிவியல் விஜி என்ற ஆசிரியர் உள்ளே நுழைந்தார் ...

எல்லாரும் ... எழுந்து நின்று ! வணக்கம் அம்மா..! என்றார்.

வணக்கம் ....பிள்ளைகளே ..எல்லாரும் அமருங்கள் என்றார் ஆசிரியர் ..,

ஆசிரியர் வருகை பதிவை எடுத்துவிட்டு ..., 

பாடத்துக்குள் நுழைந்தார் ...

நேற்று எடுத்த பாடத்தின் பெயரென்ன??? ஆசிரியர் கேட்டார் ....

உயிரினங்களின் பல்வகைத்தன்மை??? என 


சரி அந்த பாடத்தை யாரவது எழுந்து நின்று சத்தமாக வாசிங்க பார்ப்போம் என்றார் ..

சட்ட சபையில் அனைவரும் கோரஸாக சொல்லுவது போல மாணவர்கள் திவ்யாவை பார்த்து கூச்சலிட்டனார் ..,,

சபாநாயகர் போல் வெளிநடப்பு செய்யாமல் .. 

ஆசிரியர் திவ்யாவை அழைத்தார் ...

திவ்யா... சிறிது தயங்காமல் ஆசிரியர் அருகே சென்று ...

புத்தகத்தை விரித்தால் ... பயம் என்ற தோழி வெளிவந்த்தது ... பெரு மூச்சு விட்டு வாசிக்க தொடங்கினால் .., சற்றும் தயங்காமல் மழை பெய்ந்து ஒய்ந்தது போல வாசித்து முடித்தாள் ..,

இது திவ்யா ....ஆஆஅ தான என ஆச்சர்ய கடலில் மாணவர்கள் முழ்கினார் ..,

ஆசிரியரும் வியந்து பாராட்டினார் .. 

பலே ... பலே... திவ்யா மிகவும் நன்றாக வாசித்தாய் உனக்குள் இருந்த பயம் , நடுக்கம் சிறிதும் இல்லை குரல் தெளிவாக இருந்தது என ஆசிரியர் பாரட்டு மழை பொழிந்தார் .., மற்ற தோழிகள் அவளை பாரட்டி அணைத்து கொண்டனர் ., இதை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தால் .., 

ஆகாயத்தில் மிதப்பது போல் உணர்ந்தால் ..,, அம்மாவிற்கு மனத்திற்க்குள் நன்றி தெரிவித்தால் ..


                 ( வாசர்களுக்கு நன்றி - முற்றும் )




                      


Rate this content
Log in