தங்க பரிசு
தங்க பரிசு
அலன் மீரா இருவரும் அண்ணன் தங்கை. இருவரும் கடைக்கு சென்று வந்து கொண்டு இருக்கையில் ஒரு பள்ளத்தில் தடுக்கி விழுந்தனர். அந்தக் குழியில் யாரோ அலன் காலை பிடித்து இழுப்பது போல் உணர்ந்தான். அலன் கத்த ஆரம்பித்தான். மீரா அவனது கையைப் பிடித்து இழுக்க தொடங்கினாள். ஆனால் அவளையும் சேர்த்து அந்தக் குழி இழுத்து விட்டது.
உள்ளே சென்றால் தங்க உலகம். அந்த உலகத்தில் மரம் செடி கொடி என அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தது. இருவரையும் காவலாளிகள் அரசர் முன் கொண்டு நிறுத்தினர். அலனும் மீராவும் பயந்து நடுங்கிக் கொண்டே அரண்மனைக்குள் நுழைந்தனர். அங்கு அரசர் " பயப்பட வேண்டாம் குழந்தைகளே இன்று நீங்கள் எங்களுடைய அதிர்ஷ்டசாலி விருந்தினர். உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். உங்களுக்கு பரிசு தரவே இங்கே அழைத்து வந்தோம்"என்றார்.
" பரிசு என்றால் நிறைய மிட்டாய் தருவீர்களா? "என்றான் அலன்.
ராஜா சிரித்துக்கொண்டே 'அதற்கும் மேலே தருவேன்".
"சரி நாங்கள் மிட்டாய்காக என்ன செய்ய வேண்டும்? " என்றாள் மீரா.
"இந்த ஊரில் ஏதாவது ஒன்றை நீங்கள் மாற்றினால் நீங்கள் கேட்ட அனைத்தும் நான் தருவேன்" என்றார்.
இருவரும் வெளியே சென்று பார்த்தனர். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஒன்றும் தென்படவில்லை. பிறகு அங்கு ஒரு இடத்தில் குப்பைகள் சிதறிக் கிடந்தது. அந்த இடத்தை சுத்தம் செய்து, ராஜாவிடம் பூந்தொட்டிகள் வேண்டும் எனக்கேட்டு அந்த இடத்தில் பூச்செடிகளை நட்டு வைத்தனர். ராஜா இருவரையும் பாராட்டினார். அவர்கள் கையில் மிட்டாயை கொடுத்துவிட்டு இருவரையும் கஜானா இருக்கும் அறைக்கு அழைத்து சென்று உங்களுக்கு தேவையான தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அங்கு இருவரும் தன் சட்டைப் பை நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர். அலனும் மீராவும் நடந்த கதையை கூறினார்கள். அலன் மீரா அம்மா அப்பாவிற்கு இதை நம்பமுடியவில்லை. அலன் "அம்மா என்னிடம் இருக்கும் தங்கத்தை நம் வீட்டில் வைத்துக்கொண்டு மீராவிடம் இருக்கும் தங்கத்தை யாருக்காவது கொடுக்கலாம்" என்றான். அவர்களும் சரி என்று கூறினார்கள். மீராவிடம் இருக்கும் தங்கத்தை எடுத்துக்கொண்டு எங்கள் சார்பாக கொரோனாவிற்கான நிதி உதவி என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர். அலன் மீராவின் தாய் தந்தையர் அவர்களுக்கு ஒரு தங்க நிற பெரிய பொம்மையை பரிசாக வாங்கி கொடுத்தனர்.
