பிறந்தநாள்
பிறந்தநாள்


கௌரி......பிறந்தநாளன்னைக்கு ஏம்மா லேட்டா வர்றே? கோவிலுக்குப் போக வேண்டாமா? நான் நண்பர்களுடன் கொண்டாடி விட்டேன். பணம் ஏது? காலையில் இரண்டு பாக்கெட் சாக்லேட் தரவில்லை என்பதற்காக சாப்பிடாமல் சென்றாயே! அவர்கள் தந்தார்கள்...என் நண்பர்கள் நல்லவர்கள். அப்படி பிறந்தநாள் கொண்டாடவேண்டும் என்ற அவசியம் இல்லை.
சினிமாவைப் பார்த்து கெட்டுப்போய் இருக்கிறாய்...நம்ம வீட்டில் என்ன இருக்கிறதோ அதை சந்தோஷமாக ஏற்று நண்பர்களிடம் சொன்னால்கூட போதும். ஒரு தடவை பிறந்த நாள் கொண்டாட காசு இருக்கும். மறு வருடம் இருக்காது. அதற்காக அதேமாதிரியே செலவு செய் என்றால் எப்படி? இப்படி ஆடம்பரமாக இருக்க உன்னைப் படிக்க அனுப்பவில்லை. முடிந்தால் படி! இல்லையென்றால் மாடுகளும், ஆடுகளும் நிறைய இருக்கிறது. ஓட்டிட்டு போ! என்று அம்மா சொல்லியதும் வாங்க கோவிலுக்குப் போகலாம் என கிளம்பினாள்.