Amirthavarshini Ravikumar

Others

5.0  

Amirthavarshini Ravikumar

Others

பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு

4 mins
332



   எனது கற்பனை உலகில் கல்கியின் பார்த்திபன் கனவு ஒரு வித்யாசமான கதை களத்தில் படைத்துளேன். 


    நரசிம்மன் போரில் பார்த்திபனை வெற்றி கொள்கிறான். அருள்மொழி தேவியையும் விக்ரமனையும் நாட்டை விட்டு வெளியேத்துகிறான் நரசிம்மன். அருள்மொழி தேவி ஒரு சிறிய குடிலில் விக்ரமனுக்கு தன் தந்தையின் வீரத்தையும் கலைகளையும் கூறி வளர்கிறாள். ஒரு கொடூர நோயால் அவதியுற்று அருள்மொழி தேவி இறக்கிறாள். "அம்மா" "அம்மா" என்று அவன் கூப்பிட்டும் அவள் கண் திறக்காததால் அருகில் உள்ள ஆஸ்ரமத்திற்கு சென்று உதவியை நாடுகிறான். அங்குள்ள முனிவர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் நடந்ததை அறிந்து அருள்மொழி தேவிக்கு செய்யவேண்டியதை செய்து விக்கிரமனை ஆசிரமத்திற்கு அழைத்து செல்கின்றனர்.  




      தாயை இழந்த அக்குழந்தைக்கு அங்கு உள்ள ஆச்சாரியர்கள் மற்றும் முனிவர்கள் ஆறுதல் கூறுகின்றனர். சிறிது காலம் பிறகு ஆசிரமத்திலேயே வளர்ந்த அவன் அங்கு கற்றுக்கொடுக்கும் கலைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு தலை சிறந்து விளங்குகிறான். காலம் பல ஓடினாலும் அவன் அம்மா கூறிய வார்த்தை மட்டும் அவனால் மறக்க இயலவில்லை." மகனே உன் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் சோழரின் புகழ் உலகமெங்கும் பரவ வேண்டும்". என்று அவள் கூறிய வார்த்தை அவனுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகம் வந்தது. தந்தையின் கனவை நிறைவேற்ற துடித்த அவனுக்கு ஆசிரமத்திலேயே சரியான குரு ஒருவர் கிடைத்தார்.அந்த குருவிற்கு விக்கிரம சோழன் தான் பார்த்திபனின் மகன் என்பது அறிந்து ராஜ்யத்தை அடைய 

ராஜா தந்திர வித்தைகளை கற்று கொடுத்தார். 




      ஒரு நாள் விக்ரமன் நரசிம்மவர்மனின் ஆட்சியில் என்ன நடக்கிறது, என்னென்ன சிறப்பெல்லாம் உள்ளது என்பதைப் பார்ப்பதற்காக அங்கு ராஜ்யத்தில் உலா வருகிறான். அப்போது கடைவீதியில் ஒரு அழகிய பெண்ணைப் பார்க்கிறான். அங்கு அவள் ஒரு மூதாட்டிக்கு உதவி செய்து கொண்டிருக்கிறாள் கடைவீதி பரபரப்பாக இருக்க, இவள் மட்டும் அவன் கண்ணிற்கு வித்தியாசமாக தெரிகிறாள். சற்றும் தயங்காமல் விக்கிரமன் அந்தப் பெண்ணிடம் சென்று "தங்களது பெயர் என்ன? " என்று கேட்கிறான். அதற்கு அந்தப் பெண் "முன்பின் தெரியாதவரிடம் என் விலாசத்தை எல்லாம் கூற முடியாது" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்படுகிறாள். அன்று இரவு அந்த ஜாமத்தில் விக்கிரமன் தூக்கமின்றி அங்குமிங்கும் புரிகிறான் ஏனோ அந்தப் பெண்ணின் கண்கள் மட்டும் இவனது மனதில் ஒட்டிக்கொண்டது. அவள் யாரென்று தெரிய வேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் கடைவீதிக்கு சென்றான் ஆனால் அங்கு சில நாட்கள் அவள் வரவில்லை. அதன்பின் அவன் ராஜ்யத்தின் உள்ள செயல்கள் அங்குள்ள வளங்கள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான்.



       கடைவீதியில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவி செய்து அங்கு உள்ளவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறான் விக்கிரமன். விக்கிரமன் மட்டும்தான் அந்த பெண்ணை பார்க்க வில்லை ஆனால் அந்தப் பெண்ணோ தினமும் விக்ரமன் செய்யும் செயல்கள் அனைத்தையும் தூரம் நின்று ரசித்து கொண்டு இருந்தாள். ஒரு நாள் ஆற்றங்கரையில் அந்தப் பெண் விக்கிரமனை சந்தித்து தன் மனதில் உள்ளதை கூறி விடுகிறாள் விக்கிரமனோ திகைப்பில் ஆள்கிறான். அந்தப் பெண்ணிடம் தனக்கான கடமைகள் நிறைய உள்ளதாகவும் தன்னால் தன்னால் அவளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறி விடுகிறான். ஆனால் அந்தப் பெண் மீண்டும் மீண்டும் விக்கிரமனுக்கு தன் மனதில் உள்ளதை எடுத்துக் கூறுகிறாள். இதை அறிந்த விக்ரமனின் குரு "அந்தப் பெண்ணின் காதல் உண்மையானது நீ அவளை ஏற்றுக் கொள்" என்று கூறுகிறார்.



      ஒருநாள் விக்கிரமன் அந்த பெண்ணை தனியாக சந்தித்து எனக்கான கடமைகள் நிறைய உள்ளது என் கடமைகளில் நீ தலையிடக்கூடாது என்றும், என் கடமைகள் முடிந்த உடன் நானே உனக்கு அதை கூறுவேன் என்றும் கூறுகிறான்.அந்தப்பெண் தான் எந்த விஷயத்திலும் தலையிட மாட்டேன் என்றும், உன்னுடைய காதல் மற்றும் போதும் என்று கூறி அவனிடம் சத்தியம் செய்கிறாள்.அந்தப் பெண் அவளது வீட்டில் இதைப்பற்றி கூறும்போது வீட்டார் அனைவரும் இதை மறுக்கின்றனர்.ஒருநாள் இரவில் அனைவரையும் விட்டுவிட்டு விக்ரமன் இருக்கும் இடத்திற்கு வந்து விடுகிறாள் விக்ரமனும் அவளை திருமணம் செய்து கொள்கிறான்.




       ஒரு குடிலில் இருவரும் தன் வாழ்வை தொடங்குகின்றார்கள். ஆனால் விக்ரமன் தன் தந்தையின் கனவை நிறைவேற்றிய ஆகவேண்டுமென்று குறிக்கோளை விடவில்லை. குருவிடம் சென்று பயிற்சி பெறுகிறான் அண்டை நாட்டு உதவியுடன் பல படைகளை திரட்டுகிறான். உறையூரின் அருகிலுள்ள ஒரு காட்டில் பயிற்சி அளிக்கிறான் இதை அறிந்த நரசிம்மனின் ஒற்றர், நரசிம்மருக்கு செய்தி கூறுகிறான் இதை அறிந்த நரசிம்மன் ஆவேசத்தில், எதிரிகளை கொன்றே தீரவேண்டும் என்று புறப்படுகிறான். விக்கிரமனுக்கு ம் நரசிம்மனுக்கு போர் நடக்கிறது. இதை ஏதும் அறியாத அந்தப் பெண், குடிலில் விக்கிரமண்ணிற்காக காத்திருக்கிறாள்.


              போரில் நரசிம்மனை வென்று விக்ரமன் வாகை சூடுகிறான் தான் இழந்த நாட்டை யும் திரும்பி பெறுகிறான். இங்கு ஏதும் அறியாத அந்தப் பெண் இரண்டு நாள் கழித்தும் விக்ரமன் வரவில்லையே என்று நினைத்து பதறுகிறாள். இரண்டு நாட்களுக்குப் பின் விக்ரமன் குடிலுக்கு வருகிறான். அந்தப் பெண் ஆனந்த கண்ணீருடன் விக்கிரமனை கட்டித் தழுவுகிறார் "இத்தனை நாள் எங்கு சென்றீர்கள்" என்று கேட்கிறாள். அதற்கு விக்கிரமன் நான் "உனக்கு ஒரு ஆச்சரியத்தை காட்டுகிறேன்" என்று அவளது கண்ணைக் கட்டி ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறான்.



    கண்ணை திறந்து இதுதான் உன் புதிய வீடு என்று அவளிடம் காண்பிக்கும் போது அவளுக்கு ஆச்சரியம் வரவில்லை அதிர்ச்சி தான் இருந்தது. ஏனென்றால் அவள்தான் நரசிம்மனின் மகள் குந்தவி. குந்தவி, "தன் தந்தையின் பகைவரது மகனை திருமணம் செய்தோம்"என்று நினைத்து கவலை கொள்கிறாள் கலங்குகிறாள். விக்ரமனின் குரு, குந்தவிக்கும் விக்ரமுனுக்கும் நடத்திவைத்த திருமணத்தில் காரணத்தை இப்பொழுதுதான் உணர்கிறாள் குந்தவி. தன் தந்தைக்கு துரோகம் இழைத்து விட்டதாக வருந்துகிறாள் குந்தவி. குந்தவையின் முழு விவரத்தையும் அறிந்த விக்கிரமனும் அதிர்ச்சியில் உறைகிறான். விக்ரமனின் குரு, " இது உன் தந்தையின் கனவு இது யாருக்காகவும் நீ அதைக் கலைத்து விடக்கூடாது" என்று அவனுக்கு அறிவுரை கூறுகிறார். குந்தவி க்கும் விக்ரமுக்கும் சில நாட்களாக பேச்சு வார்த்தையே இல்லை. விக்ரமன் தன் தந்தையின் கனவாக இருப்பினும் தன் மனைவியின் குடும்பத்தை சிதைத்து விட்டோமே என்று சிறிது கலக்கம் அடைகிறான்.



          ஒருநாள் இரவில் விக்ரமன் யாருக்கும் தெரியாமல் நரசிம்மவர்மனும் அவன் குடும்பமும் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு செல்கிறான். அங்கு அவன் நரசிம்மனிடம், " நீங்கள் எங்களுக்கு பகைவராக இருந்தாலும் என் தந்தையின் தோழர். என் மனைவியின் தந்தை என் மனைவிக்கு உடலில் இருக்கும் பொழுது கூட அவளின் முகத்தில் நான் வாட்டம் கண்டதில்லை. ஆனால் இன்று மாளிகை அவளிடம் இருந்தும் கூட அவள் உங்களையே தேடுகிறாள். தன் தந்தைக்கு துரோகம் இழைத்து விட்டதாக எண்ணி அவள் வருத்தம் அடைகிறாள். நீங்கள் சம்மதித்தால் உங்களுக்கு அவன் நீங்கள் சம்மதித்தால் உங்களுக்கு அரண்மனையில் ஒரு இடம் தருகிறேன்" என்று கூறுகிறான். " இது நீ எனக்கு அளிக்கும் பிச்சையா? " என்று நரசிம்மன் கேட்கிறான். " தவறாக நினைக்க வேண்டாம் என் தாயார் நாட்டை நான் கைப்பற்ற சொன்னார். என் தந்தையின் கனவை நிறைவேற்ற சொன்னார் ஆனால் யார் மனதையும் புண் படுத்த எனக்கு சொல்லி கொடுக்கவில்லை" என்றான் விக்கிரமன். என் தந்தையின் தோழர் நீங்கள் என்பதால் எனக்கு நீங்கள் தந்தையாக தானே இருக்க முடியும். தந்தைக்கு எந்த மகனும் பிச்சை அளிக்க மாட்டான் பரிசு மட்டுமே அளிப்பான்"என்றான் விக்கிரமன்.



         சற்று சிரித்த பின் நரசிம்மனும் விக்கிரமன் உடன் வர சம்மதம் நரசிம்மனும் விக்ரமன் உடன்வர சம்மதம் சம்மதிக்கிறான். குந்தவி தந்தையைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்து அடுகிறாள். "தந்தையே நான் தவறு செய்துவிட்டேன்என்னை மன்னித்துவிடுங்கள்" என்கிறாள். தந்தையோ, "நான் தேடினால் கூட இப்படி ஒரு வரன் கிடைத்து இருக்காது. நீ ஒரு வரன் அல்ல வரத்தையை உன் வாழ்வில் பெற்றிருக்கிறாய்" என்றான். 




          குந்தவி விக்ரமனிற்கு நன்றி கூறுகிறாள். விக்ரமனின் குருவோ விக்கரண்ட் விக்ரமனின் திறனை பார்த்து மகிழ்கிறார். " போரின்றி பல்லவரையும் சோழர்களையும் ஒன்றிணைத்து விட்டாய்" என்று கூறுகிறார். நரசிம்மனும் விக்கிரமனும் சேர்ந்தே சோழ பல்லவ புகழ் மட்டுமின்றி தமிழகத்தின் புகழையும் இந்தியா முழுவதும் பரவ விடுகின்றனர். ஒரு அமைதியான சாம்ராஜ்யமும், விக்ரமனின் காலத்திலேயே பார்த்திபனின் கனவும் நிறைவேறியது.

         



Rate this content
Log in