ஓவியக்கருத்து
ஓவியக்கருத்து
வர்மன் என்ற அங்கீகாரமற்ற சிறந்த ஓவியர். பார்க்கும் விஷயங்களை தத்துரூபமாக வரைவார். தன் ஓவியத்திற்கு அங்கீகாரம் கிடைக்காததால் கொஞ்சம் மனம் தளர்ந்த வரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஒரு விளம்பரப் பலகையில் உலகளாவிய ஓவியப்போட்டி காண விளம்பரத்தை பார்த்தார். அதில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் வீட்டிற்கு சென்று அன்றே அவரது பெயரையும் பதிவு செய்தார். படம் வரைந்து அனுப்புவதற்கு 2 வாரம் கால அவகாசம் இருந்தது. படம் வரைவதை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தார். ஒரு உண்மை சம்பவத்தை படமாக வரைய வேண்டும் என முடிவு செய்தார்.
காலை நடை பயணத்தின் போது ஒரு நாய்க்குட்டி தன் அம்மா நாய் உடன் கொஞ்சி விளையாடுவதை பார்த்தார். உலகிலுள்ள பாச பந்தங்களை கருத்தாகக் கொண்டு வரையலாமா என்று யோசித்தார். அதன்பின் ஒரு பூந்தோட்டத்தில் தேன் தேடும் வண்டை பார்த்தார். மனித வாழ்வியல் தேடலை இதைவைத்து கூறலாமா என்று சிந்தித்தார். மூன்றாவதாக ஒரு ஒரு பணக்காரனும் அவனது குடும்பத்தாரும் கோவிலுக்குள் நிறைய பழங்களுடன் கோவிலுக்குள் செல்வதைப் பார்த்தான். தரிசித்து வெளிவரும்போது ஒரு பிச்சைக்காரன் அவன் எதிரே நின்று பிச்சை கேட்டான். அவனிடம் தனது வண்டியில் சாப்பிட்டு மீதம் வைத்த அரை ரொட்டியை எடுத்து கையில் வைத்தான். பிச்சைக்காரனும் நன்றி சொல்லி கிளம்பினான். இதைப்பார்த்த வர்மன் இதுதான் மனித வாழ்க்கை. தவறான விஷயத்தை சரியாக செய்வான். நிரம்பி வழியும் கஜானாவில் தான் மீண்டும் தங்கத்தைக் கொண்டு கொட்டுவான். இதையே தன் ஓவியமாக வரைந்தார் ஒரு மனிதன் கையில் அரைத் துண்டு காய்ந்த ரொட்டி இருப்பதுபோல் வரைந்தார். அதை அந்தப் போட்டிக்கும் அனுப்பி வைத்தார். அந்தப்படத்தின் நோக்கத்தை போட்டி குழுவினர் கேட்டனர். அதற்கு வர்மன்" இருப்பவனின் பெருமை ; இல்லாதவனின் கவலை" எனக் கூறினார். போட்டி முடிவு காண நேரமும் வந்தது. வர்மன் போட்டியில் தற்கால நுணுக்கத்தை படமாக வரைந்து உள்ளதால் வெற்றி பெற்றார். அவரது படமும் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டன. அவரும் சிறிது நாட்களிலேயே சிறந்த ஓவியராக வலம் வந்தார்.
