STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Others

3  

Amirthavarshini Ravikumar

Others

நட்புடன் பயணம்

நட்புடன் பயணம்

1 min
159

     "ராமிற்கு இன்னும் சிறிது நேரத்தில் நினைவு திரும்பிவிடும்" என்கிறார்கள் மருத்துவர்கள். கணேஷ் மற்றும் சாமி அவனை உள்ளே சென்று பார்க்கின்றனர். ராமிற்கு நினைவு திரும்புகிறது. தன் காதலி இறந்ததால் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்து விட்டான் ராம். ராம் கண் விழித்து பார்த்து யாரிடமும் பேசவில்லை. ராம் காணும் அனைத்து பொருட்களும் அவனுக்கு அவன் காதலியவே ஞாபகப்படுத்தியது. கணேஷ் சாமி இருவரும் ராமை வெளியே அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதனால் நீலகிரிக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்தனர். ராமை வலுக்கட்டாயமாக சுற்றுலா செல்ல அனுமதிக்க வைத்தனர். மூவரும் காரில் பயணம் செய்யத் தொடங்கினார். போகும் வழியிலும் ராம் எதுவும் பேசவில்லை. அங்குள்ள செடி மரம் கொடி இதை மட்டும் பார்த்தபடி நேரத்தை கழித்தான். கணேஷ் மற்றும் சாமிக்கு என்ன செய்ய வேண்டும் என்றே புரியவில்லை. இரு நாளாகியும் ராம் அப்படியே இருந்தான். ராமிடம் இருவரும் உட்கார்ந்து பேசத் தொடங்கினார். நிலைமையை எடுத்துக் கூறினார்கள். ஆனால் ராமு கேட்டபாடில்லை.


எழுந்து படுக்க சென்றுவிட்டான். அன்று கனவில் அவனது காதலி வருகிறாள். ராம் "நான் உன்னுடன் இல்லை என்றாலும் உன் இரவுகளில் கனவாக உன்னுடன் விழித்து இருப்பேன்" என்றாள். ராம் உடனே விழித்தான். கணேஷ் மற்றும் சாமி இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். நான் மெதுவாக எழுந்து வெளியே சென்றான். அங்குள்ள இயற்கை காட்சிகளை பார்த்த வண்ணம் சிறிது தூரம் நடந்து சென்றான். காலையில் சாமி எழுந்து பார்க்கையில் ராம் இல்லை அவன் பதட்டத்துடன் கணேசன் எழுப்பினான். இருவரும் அவனை தேட வெளியே சென்றனர். அங்கு ராம் நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் செய்தித்தாள் வாசித்து கொண்டு இருந்தான். இருவருக்கும் அப்பொழுது தான் உயிரே வந்தது. ராம் இருவரையும் பார்த்தபடி சிரித்தான். அருகில் வந்து "உங்களால தான் இன்னைக்கு என் வாழ்க்கை திரும்பி கிடைச்சது. நன்றி நண்பா" என்றான். இருவரையும் கட்டி அணைத்துக்கொண்டான்.


Rate this content
Log in