நன்றியின் நீதி
நன்றியின் நீதி
கஜா என்ற ஊரில் ராஜு என்பவர் வாழ்ந்து வந்தார். தனக்கென அந்த ஊரில் தனி பெயர் அந்தஸ்தை பெற்ற அவருக்கு நாய்களை கண்டால் மட்டும் ஏனோ ஒரு வெறுப்பு. நாய்களை கண்டால் அதை கல் எடுத்து அடித்து விடுவார். அதனால் அந்த ஊர் நாய்கள் இவரை கண்டால் குரைத்து கொண்டே இருக்கும். ஒரு நாள் இவர் அலுவலக வேலைக்கு வேகமாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் வீட்டு வாசலில் நின்ற நாய் அவர் நடந்து சென்றுகொண்டு இருக்கையில் துரத்த ஆரம்பித்தது. ராஜுவிற்கு பதட்டமும் பயமும் அதிகமானது. திரும்பி பார்க்காமல் வேகமாக ஓடினார். அந்த நாயும் வேகமாக துரத்தியது. ராஜு ஒரு சந்தில் மாட்டிக்கொண்டார். அவரது பணப்பையை வாயில் கவ்விய படி அவர் அருகே போட்டது. திகைத்து நின்ற ராஜு அந்த நாயின் முன் மண்டியிட்டு அதன் தலையை தடவினார். அதற்கு நன்றி கூறினார். நாயும் வாலாட்டி விட்டு சென்றது.
எதுவும் கெட்டது அன்று நாம் அதன் நல்லதை பார்க்கும் வரை.
