DEENADAYALAN N

Others

5.0  

DEENADAYALAN N

Others

மனிதம் வாழ வேண்டும்!

மனிதம் வாழ வேண்டும்!

2 mins
651


 

2019 வருடம் நடந்த சில நிகழ்வுகளை காண்போம்:


உலக அளவில்:

---------------------------

2019இல், அமேசான் காட்டுத்தீ எச்சரிக்கும் சுற்றுப் புற சூழல் கேடு, மிக மிக அச்சத்தை ஊட்டுகிறது.  காடுகளின் அழிப்பு லட்சக்கணக்கான டன்கள் கார்பனை சூழலுக்குள் விடுவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். இதில் மக்களாகிய நமக்கு என்று எந்த பொறுப்பு வந்தாலும் அதை ஏற்று கடை பிடிப்பது, நம் எதிர்கால சந்ததிகளுக்காக நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமையாகும்.  


பிரிட்டன் நாடு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜனவரி 31 2020 இல் வெளியேறும் தருணத்திற்கான இறுதி கட்டப் பணிகள் 2019-இல் முழு வீச்சில் நடந்தன.

 

அமெரிக்கா – சீனா வர்த்தக போர் 2019இல் பல பரிமாணங்களை அடைந்தது. 2020லும் தொடரும் என்றே தோன்றுகிறது.


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் பதவி நீக்கத் தீர்மானம், தொடரும் அமெரிக்கா – வடகொரியா இடையே அணுகுண்டு மற்றும் ஏவுகணை பரிசோதனை குறித்த பேச்சுவார்த்தைகள் என பல உலகப் பிரச்சினைகள் 2019ல் இடம்பெற்ற நிகழ்வுகளாகும்.இந்திய அளவில் பார்த்தால்…

------------------------------------------------


மே மாதம் 2019 தேர்தல் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இரண்டாம் முறையாக பெற்ற அமோக வெற்றி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கப்போகிறது.


பல வருடங்களாக தொடர்ந்த அயோத்தி வழக்கின் இறுதித்தீர்ப்பு 2019 இன் ஒரு முக்கியமான அம்சமாக கருதலாம்.ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 இன் நீக்கம் என்பது 2019இல் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு என்று சொல்லலாம்.

 

 

சந்திரயான் – 2 நோக்க அளவில் பெரு வெற்றி பெற்ற வருடம் 2019. சந்திரையான் – 2 லிருந்து தரையிறங்கியானது, நிலவில் தரை இறங்குவதில் ஏற்பட்ட ஒரு சிறு குறைபாட்டின் காரணமாக, 10 படிகள் கொண்ட வெற்றியின் ஒன்பதாவது படியில் சந்திரயான் -2 ஒரு தடுமாற்றத்தைப் பெற்றது. அந்த தடுமாற்றத்தை தவிடுபொடி ஆக்கும் பணிகள் தொடர்வதால் விரைவில் இறுதி வெற்றி காண்போம்.


 

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் அம்சங்களை எதிர்த்து நம் நாட்டில் 2019இல் நடந்த போராட்டங்கள் பற்றி எல்லோரும் அறிவோம். அரசும் எதிர்கட்சிகளும் மக்களாகிய நாமும் கலந்து அனைவரும் ஏற்கும் வண்ணம் ஒரு நல்ல முடிவை 2020இல் காண்போம் என்பது உறுதி.

Rate this content
Log in