கனவில் கை
கனவில் கை
மகி குறும்புத்தனமான சுட்டிப்பெண். வீட்டில் தன் அம்மா செய்த வேலைகள் அனைத்தையும் தன் குறும்பால் கலைத்து விடுவாள். தன் அறையில் உள்ள அலமாரியை பூட்டும் பழக்கம் அவளுக்கு கிடையாது. அதுக்காகவே அவள் அம்மாவிடம் நிறைய திட்டு வாங்குவாள். ஒரு நாள் அவள் அறையில் தூங்கிக் கொண்டு இருக்கையில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. விழித்துப் பார்க்கையில் அவளது அலமாரிகள் ஆடிக்கொண்டிருந்தன. அருகில் சென்று கதவைத் திறந்து பார்க்கும்போது அங்கு நிறைய கைகள் இருந்தன. அவளைப் பிடித்து வைத்துக்கொண்டது. மகி அலறினாள். "எங்களை துறந்துவிட்டு ஏன் மூடாமல் செல்கிறாய்" எனக்கேட்டு அவளை இறுக்க பிடிக்க ஆரம்பித்தது. "இனி மூடி விடுவேன் மூடி விடுவேன்..." என கதறி அழுதாள். அப்பொழுது மகியின் அம்மா வந்து "மகி மகி... " விழித்து பார்த்தால் அது கனவு. மகி நம்ம அவளுக்கு தண்ணீர் கொடுத்து படுக்க வைத்தாள். மறுநாள் காலையில் குளிக்கும் முன் அலமாரியில் துணி எடுத்து அவள் மறுபடியும் மூடாமல் சென்றாள். அந்தக் கனவு அவளுக்கு நியாபகம் வந்தது. உடனே ஓடிச்சென்று மூடினாள். மகியின் அம்மா "இது என்ன புது விந்தை" என சிரித்து விட்டு கிளம்பினாள்.
