DEENADAYALAN N

Others

2.6  

DEENADAYALAN N

Others

எழுது! எழுது!

எழுது! எழுது!

1 min
1K









வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளைப் பார்க்க வேண்டும்


எதுஎது என்னென்ன எங்கெங்கே என்று குழந்தைகளுக்கு எழுதி வைக்க வேண்டும்.



இனி வரும் காலங்களில் எழுத்துலகில் சாதிக்க வேண்டியவைகளே என் கண் முன் விரிந்து நிற்கிறது. நல்ல நடையில், படிப்பதற்கு ஆர்வம் ஊட்டும் வகையில் எழுத வேண்டும். தீயவைகளை எழுதினால் கூட சம்மந்தப் பட்டவர்களின் மனதை பண்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தக் கூடாது.



பிரம்மாண்ட திரைப்படம் தயாரிப்பதற்கு ஏற்றவாறு ஒரு விண்வெளிக் கதையை UNIVERSAL RAMPAGE என்னும் தலைப்பில் எழுதி அதை ஒரு ஆங்கில நாவல் வடிவில் அமேசானில் வெளியிட்டிருக்கிறேன். அதற்கான செயல் வடிவம் கொடுக்க இந்த 2020இல் முயற்சிகளை மேற்கொள்வேன்.



குறும்படங்களை தயாரிக்க ஏற்றவாறு சுமார் நூற்றைம்பது கதைகளை எழுதி இருக்கிறேன். திரைக்கதை அமைத்து, அவற்றை ஒவ்வொன்றாய் குறும்படமாய் வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுப்பேன். அவற்றுள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளின் தொகுப்பு ‘குட்டிக் குட்டிக் கதைகள்’ என்னும் தலைப்பில் முதல் பாகமாக மின் புத்தகமாக அமேசானில் வெளி வந்திருக்கிறது. மீதமுள்ள கதைகளின் தொகுப்பையும் இந்த வருடத்தில் வெளியிடுவேன்.



‘ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்’ என்னும் என் அமெரிக்கப் பயண நூல் அமேசானில் மின்புத்தகமாய் வெளி வந்திருகிறது. அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் அதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என்பதால் அந்த வேலையை இந்த வருடம் செய்வேன்.



என் எல்லா மின்புத்தகங்களையும் காகித புத்தக வடிவில் கொண்டு வர முயற்சிகளை மேற்கொள்வேன். அதற்காக பதிப்பாளர்களை இந்த 2020இல் சந்திப்பேன்.



மேலும் சில புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன். அவற்றில் முழு கற்பனையில் ஒரு வரலாற்று சஸ்பென்ஸ் த்ரில்லரும், விபரம் தெரிந்த பருவத்திலிருந்து இன்று வரை என் வாழ்வின் சுவாரஸ்யமான தருணங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றும் அடக்கம்.



இந்த என் 2020 முன்மொழிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாதந்தோறும் பரிசீலனை செய்வேன்.




Rate this content
Log in