ஏலியன் அட்டாக் - 9
ஏலியன் அட்டாக் - 9
டாக்டர். வில்சனின் வார்த்தைகளை கேட்டு மூவரும் வாயடைத்து நின்றனர். வில்சன் தன் கடந்த காலத்தை சற்று நினைவு படுத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்......
"நானும் கண்ணனும் ஆஸ்ட்ரோநாட்ஸ் , அது மட்டும் இல்ல ....... நல்ல ப்ரெண்ட்ஸ் கூட........
அவனுக்கு புரியாத புதிர்களை தேடி அதுக்கான பதில கண்டு புடிக்கரது ரொம்ப பிடிக்கும்....... அவன் ஆஸ்ட்ரோநாட் ஆனதுக்கு காரணமும் அது தான்...... டிரெய்னிங் - ல அவனுக்கு ஈடு யாருமே கிடையாது என்பதுதான் உண்மை...... அவ்ளோ ஈடுபாடு ...... எல்லா வலியையும் தாங்குவான் ...... ஒரே ஒரு காரணத்துக்காக....." , வில்சன் தன் வார்த்தைகளுக்கு இடைவெளி விட்டார்.
" அது என்ன காரணம் சார்..?, மாயா ஆர்வத்துடன் கேட்டாள்.
"ஏலியன்ஸ்.......", வில்சன் முகம் தன் நண்பனின் நினைவில் ஆழ்ந்தது. மற்ற மூவரின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது....
"நாங்களே அந்த மெஷின் வந்ததுக்கு அப்பறமா தான் ஏலியன்ஸ் இருக்கறதா நம்புனோம்...... ஆனா அவருக்கு யெப்டி இந்த4 நம்பிக்கை வந்துச்சு...?, இந்த மாதிரி எதாச்சும் நடந்துசா...? ,அணு தன் சார்பாக ஒரு வினாவை எழுப்பினாள்.
"அது தான் இல்ல...... அவன்கிட்ட நான் நெறய தடவ இத பத்தி கேட்டு இருக்கேன்....
ஆன அவன், "ஏலியன் கணவுல வந்து என்ன கூப்புடுது", அப்டின்னு கிண்டலா சொல்லுவான் , அப்போ நாங்க அவண கனவுல கூப்ட்டதுக்கு நீல தேடி பொரியோ? அப்டின்னு கிண்டல் தான் பண்ணுவோம்.
"யாராவது இப்படி சொன்னா எல்லாரும் கிண்டல் தான் பண்ணுவாங்க......", முகிலன் இப்போது பரண் மேல் இருந்து இறங்கி அவர்களுடன் இணைந்து கொண்டான். அது அந்த பல்லி பிராணிகளுக்கு வசதியாக போனது..... அவனின் இரு கைகளையும் ஆளுக்கு ஒன்றாக பிடித்து தொங்க ஆரம்பித்தது....... அப்போதும் அவனை கண்ணன் என்று கூப்பிடுவதை நிறுத்தவில்லை.....
"இதுங்களுக்கு சொன்னாலும் புரியாது......ஹ்ம்ம் ......சரி சார்..... நீங்க கண்டின்யூ பண்ணுங்க", முகிலன் அழுத்து க்கொண்டான் ......
"அவன் வெறும் கணவுக்காக இத சொல்லல, அவன் ஏற்கனவே ஏலியன பாத்து இருக்கான்..... அதுவும் நம்ம பூமியில....., இது ,நாங்க போன முதல் விண்வெளி பயணத்துல தான் எனக்கே தெரிஞ்சது....."
பூமியில ஏலியன்ஸ் இருக்கா....? மூவரும் ஒருசேர வியந்தனர் .
பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை டாக்டர். வில்சன் கூறியபோது மூவரும் திகைத்து நின்றனர்.
" ஆமா.....அவன் இந்த விஷயத்த எங்களோட முதல் விண்வெளி பயனதுல தான் சொன்னான்....
அதுவும் அவனா சொல்லல... எங்க ஸ்பேஸ்ஷிப் ல ஒரு விண்கல் மோதிருச்சு....
எங்க என்ஜின் ல ஒரு சின்ன மிஸ்டேக் ஆயிருச்சு ... அப்போ நாங்க ஒரு எடத்துல லேண்ட் ஆனோம் ...... இதுவர யாரும் கண்டு பிடிக்காதத நாங்க கண்டு பிடிச்சு இருகோம்னு நெனச
்சோம்..... அப்போ அங்க திடீர்னு ஒரு அதிர்வு..... பூகம்பம் மாதிரி..... நாங்க எல்லாரும் பயந்து போய் இந்தோம்.... ஆனா கண்ணனுக்கு மட்டும் அந்த பயம் இல்ல...."
"ஏன்...? அவருக்கு பழக்கமான எடமோ...?", முகிலன் கிண்டலாக கேட்டான். பயப்படாம தில்லா இருந்துருகாரு...." முகிலன் ஏளனமாய் சொன்னான்.
அதற்கு அவரின் பதில் அவனை வாயடைக்க செய்தது, " அது தான் உண்மை தம்பி..... அவனுக்கு அது பழக்கப்பட்ட இடம் தான்....." நீண்ட பெருமூச்சு விட்டார் வில்சன்.
என்னது....? ,பழக்கப்பட்ட எடாம...? , அப்படினா...... அவர் ஏற்கனவே ஸ்பேஸ் டிராவல் பண்ணி இருக்காரா....? அப்படினா ஏன் அவர் ஸ்பேஸ் டிரெய்னிங் எடுத்துக்கணும் ....?, அனுவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைக்க அவள் தலையே சுற்றியது.
"ம்ம்ம்ம் ..... ஒரு தடவ இல்ல அவனோட பத்து வயசுல இருந்து அவன் அங்க பொறதும்..... அந்த ஏலியன்ஸ் இங்க வரதுமா இருந்துச்சு.... இத ஸ்பேஸ் சென்டராலயே கண்டு பிடிக்க முடியல....."
"அங்க இருந்து நீங்க எப்படி தப்பிசிங்க சார்", மேலும் ஒரு அதிர்ச்சியை முகிலன் எதிர்பார்த்தான். அவன் எதிர்பார்த்தததே அவனுக்கு கிடைத்தது .
"நாங்க தப்பிகல ...... அவங்களா தான் கொண்டு வந்து விட்டாங்க.... அதுவும் எங்க ஸ்பேஸ் செண்டர்லயே...."
"அப்படினா அது ஸ்பேஸ் சென்டர் -ல இருக்குற எல்லாருக்கும் தெரியுமா?... அது நியூஸ்ல வந்து இருகணுமே ....? ஏன் வரல....?",மாயா தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.
இல்ல சென்டர் ல இருக்குற யாருக்கும் தெரியாது. அவங்க ஒரு கண்டிஷன் போட்டு தான் எங்கள கூட்டிட்டு வந்தாங்க.....
அது என்னனா, அவங்கள பத்தி யாருக்கும் தெரிய கூடாது, அப்படி தெரிஞ்சா அவங்க பூமிய தாக்குவாங்க.... அப்படி சொன்னதால நாங்களும் அத பத்தி யாருகிட்டயும் சொல்ல ல.
அப்படினா....? இந்த விஷயம் பூமியில வெற யாருக்கோ தெரிஞ்சிருச்சா....? அதனால தான் இப்போ இந்த போரா.....?, அணு தாழ்வான குரலில் கேட்டாள்.
"இருக்கலாம்..... ஆன யாருக்கு தெரிஞ்சிருக்கும் ......எப்டி......?" வில்சன் அதற்கான சாத்தியங்களை ஆராய்ந்தார்.அதே சமயம் முகிலன் கையில் இருந்த ஸ்மார்ட் வாட்ச் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.....
"முகில் அத ஆஃப் பண்ணு", அணு அதட்டினால்.
"அணு, இது நா செட் பண்ணல..... தானா அலர்ம் அடிக்குது....."முகிலன் சொன்ன பொழுது தான் வில்சனின் பார்வை அந்த கைக்கடிகாரம் மீது விழுந்தது....
"இது கண்ணனோடது..... இது எப்படி உன்கிட்ட வந்தது", வில்சனின் முகத்தில் ஒருவித பயமும் தெளிவும் தெரிந்தது.
_ தொடரும்.......