ஏலியன் அட்டாக் - 4
ஏலியன் அட்டாக் - 4
மனம் மகிழ்ந்து இருக்கும்போது வேறு எந்த நினைவும் இருக்காது, அது போல தான் முகிலனும் மாயாவும் இருந்தார்கள். ஆனால் அனுவிற்கு மட்டும் அந்த சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ள விருப்பம் இல்லாதது போல் கரை ஓரத்தில் ஒரு மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்து கொண்டாள். கடலில் இருந்து தங்கள் கால்களை தீண்ட வரும் அலைகளிடம் இருந்து தப்பி ஓடி வந்து மணலில் கால் பதிப்பதும், மீண்டும் கடலுக்குள் செல்லும் அலைகளை துரத்தி பிடிப்பதுமாகா தன் தம்பியும் தோழியும் விளையாடுவதை கண்கள் பார்த்தாலும் அது அனுவின் மூளைக்கு எட்டவில்லை மாறாக அவளின் நினைவுகள் முழுவதும் இரவு நடந்த சம்பவத்தையும் நாளைய சந்திப்பயும் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. அலைகள் ஓயவில்லை ஆனால் அதில் விளையாடிய இருவரின் கால்களும் ஓய்ந்துவிட்டது. சற்று நேரம் ஓய்வு எடுக்க நினைத்த போது தான் அனுவின் நினைவு அவர்களுக்கு வந்தது. இருவரும் அவள் அமர்ந்து இருந்த மரத்தை நோக்கி நடந்தனர்.
"நீ எப்ப தான் நார்மல் ஆவ....? நீ இப்படி சோகமா இருக்கறது நல்லாவே இல்ல ..... நீயும் எங்களோட வந்து விளையாடு அப்போ தான் உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்" , முகிலன் தன் அக்காவிற்கு ஆறுதல் சொல்ல முயற்சித்தான் . மனம் அதை ஏற்க்க மறுத்தாலும் அவள், சரி என்பது போல புன்முறுவல் காட்டினாள். "சரி நா போய் எதாச்சும் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வரேன்" , என்று கூறி விட்டு முகிலன் அங்கே இருந்து நகர்ந்தான்.
சற்று நேரத்தில் , கடலில் இருந்து ஒரு விதமான அதிர்வு அலைகள்...... மக்கள் கூட்டம் பயத்தில் வேகமாக கரையை நோக்கி விரைந்தனர். மெல்ல தொடங்கிய அதிர்வு சற்று நேரத்தில் வேகமானது..., சுனாமி தான் வரப்போகிறது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் கடலில் இருந்து ஒரு விசித்திர உயிரினம் வந்தது...... நண்டு போல உடலும் பாம்பின் வாலும் சேர்ந்தது போல், இதுவரை யாரும் பார்க்காத ஒரு உயிரினம் அது. சற்று நேரத்தில் கரை எங்கும் பரவ தொடங்கியது. கண்ணில் படும் உயிர்களை தன் வாலால் சுருட்டி பிடித்தது..... பிடிபட்ட மக்கள் மயங்கி விழ தொடங்கினார்கள். அனுவும் மாயாவும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக்கொண்டனர். அவர்களால் மரத்தின் பின் சென்று ஒளிந்துகொள்ள முடிந்ததே தவிர வேறு எந்த வழியும் தோன்றவில்லை. அதே சமயம் அனுவின் கைப்பேசி ஒலித்தது.... அழைப்பில் வந்தது டாக்டர்.வில்சன் என்பதை பார்த்ததும் அனுவிர்க்கு ஒரு வித தைரியம் வந்தது...
கைபேசியை தன் காதில் வைத்தாள், "ஹலோ". மறுமுனையில் இருந்து, " ஹலோ... நான் வில்சன்..., மார்னிங் நீங்க தானே ஆபீஸுக்கு கால் பன்னது". "எஸ் சார்.... ஒரு பிராப்ளம் என்று கூறி நேற்று இரவில் இருந்து இன்று கடற்கரையில் நடப்பது வரை ஒன்று விடாமல் கூறினாள்..." . ஓகே ஓகே..... நீங்க பயப்படத் தேவையில்லை.....அந்த மிருகத்தோட கண் முன்னாடி மட்டும் போகாதீங்க .....நானே வந்து உங்களது பிக்கப் பண்றேன்..", என்று கூறி போனை கட் செய்து விட்டார். அணுவிர்க்கு ஒன்றும் புரயவில்லை. இப்பொழுது ஸ்நாக்ஸ் வாங்க சென்ற தன் தம்பியின் நிலை குறித்த கவலை அவளை பற்றிக்கொண்டது. ....
_தொடரும்.......
