STORYMIRROR

Madhu Vanthi

Children Stories Drama Tragedy

4  

Madhu Vanthi

Children Stories Drama Tragedy

ஏலியன் அட்டாக் - 13

ஏலியன் அட்டாக் - 13

3 mins
345

மணி இரவு எட்டை தொட்டிருந்தது..... , காலையில் வில்சன்," இந்தப் பிரச்சனைய இதோட நீங்கள் மூணு பேரும் விட்டுருங்க..... இதுக்கு மேல இதுல நீங்க தலையிட வேண்டாம்.... நானே பாத்துக்கிறேன்..... உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா மட்டும் எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க", என்று கூறிவிட்டு, "இதுக்கு மேல நீங்கள் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் ..... , இருந்தா அது உங்களுக்கு தான் ஆபத்து..... இந்தப் பிரச்சினை முடியிற வரைக்கும் இங்க பக்கத்துல எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் அவரோட வீடு ரெண்ட்- கு இருக்கு .... நீங்க அங்க போய் ஸ்டே பண்ணிக்கோங்க" , என்று தன் கையிலிருந்த விசிட்டிங் கார்டை அனுவிடம் நீட்டினார்.


அவளுக்கும் இங்கு இருப்பது சற்று ஆபத்தாகவே தோன்றியதால் அதை பெற்றுக் கொண்டாள்.... பின் அவர்களிடம் விடைபெற்று வில்சன், தன் மொபைல் போனை எடுத்து ஏதோ சில எண்களை தட்டியவாறு வ வீட்டை விட்டு நகர்ந்தார்......


            ***********

பூமிக்கு வெளியே....


நீண்டு விரிந்த ரெக்கைகளுடன் , ஐந்தடி நீளத்தில்.... ஒருவர் மட்டுமே அமரு அளவில் ,ஒரு கூண்டு போன்ற அமைப்புடன் கூடிய , கரிய நிறத்திலான ஒரு விமானம்......

விமானம் என்பதை விட, அது ஒரு பறக்கும் தட்டு எனலாம்.... காரணம், அந்த நீண்டு விரிந்த ரெக்கை சுழலும் தன்மை கொண்டது.....

அது தரையில் இருக்கும் போதே ரெக்கை போல் தெரியும்.... மேலே யெகிரி பறக்கத் தொடங்கினால் ,அது ஒரு பறக்கும் தட்டே.....


அதிலே.... பூமியை நோக்கி பயணத்தை தொடங்கி இருந்தான் , நம் தலைவர் உருவதால் பூமிக்கு அனுப்பப்பட, மற்றொரு உருவமான நம் பூமிக்கு அமைதி துதுவனாய் வந்து கொண்டிருக்கும், சொஹாரா (Zhohara).


மின்னல் வேகத்தில் செல்லும் அந்த பறக்கும் தட்டை , தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர மிகவும் போராடிக் கொண்டிருந்தான் சொஹாரா, "தலைவா..... எப்படியாவது என் கட்டுப்பாட்டுக்கு வந்திரு..... டிரெய்னிங்ல ஓட்டும்போது ஈஸியா இருந்துச்சு..... பட் நெஜமாவே ஒட்டுநா இவளோ கஷ்டமா இருக்கும்னு நான் எதிர் பார்க்கவே இல்லையே..... இது பத்தாதுனு.... எதுக்க கண்டகண்ட கல்லெல்லாம் வந்து தொலையுதே....

யாரு இதெல்லாம் பாதையில படக்கவிட்டா??, என்ன ரொம்ப காண்டெத்துது.....", என்று கூறி கொண்டே தன் கையில் உள்ள ஒரு "U" வடிவிலான பொருளை இடமும் வளமுமாக மாற்றி மாற்றி ஆட்டிக்கொண்டு இருந்தான்..... 

அந்த சமயம், " பூமியை நெருங்க இன்னும் 300 மைல் தூரம்...... 290 மைல் தூரம்..... 250 மைல் தூரம்....." என்று ஒரு குரல் வந்த வண்ணமே இருந்த....., " அம்மாடி ஃப்ரீ பர்டு ( free bird).... உன்ன நா கேக்கவே இல்ல.... இத என் மானிடரே காட்டுது..... நீ வேற எடைல எடைல பேசி என்ன கண்ஃப்யூஸ் பண்ணாத..... இது போற வேகத்துக்கு.... நா ஸ்பேஸ் பவர் ல மாட்டிக்க போறேன்....., அப்பரொம் நீயும் காலம் பூரா கத்திகிட்டே இருக்க வேண்டியது தான்...." என்றவன் தன் மானிடரில் 150 மைல் என காட்டியதை பார்த்தான்..... , அவனின் மிரட்டலில் ஃப்ரீ பர்டு , கப்சுப் என்றாகி விட்டது....

"இன்னும் கொஞ்சம் தூரம் தான்... போயிரலாம்...... போயிரலாம்....", என்று அந்த "U" வடிவ பொருளை மெல்லமாக இருபுறமும் ஆட்டி கொண்டிருந்தான் நம் சொஹாரா....


           *********

அதேசமயம் நம் பூமியில் அனு, மாயா, முகிலன் மூவரும் புதிய இடத்திற்கு செல்வதற்காக தங்கள் பொருட்களை பேக் செய்து கொண்டிருந்தார்கள்.

"ஏய் அனு..... அவர் நம்மகிட்ட எதையோ மறைக்கிறார் பா...... அவரு முழியே சரி இல்லை...", என்றும் முகிலன் தன் சார்பில் அவர் மீது இருந்த சந்தேகத்தை குற்றச்சாட்டாய் முன்வைத்தான்.


"ஏன்டா....... அவர் இருக்கிற வர சார்... சார்னு மரியாதை குடுத்துட்டு இருந்த.... இப்போ முழியே சரியில்லன்னு சொல்ற....?, என்று தன் ஒற்றை புருவத்தை மேலே தூக்கி கேள்வியாய் அவனைப் பார்த்தாள் அனு.


"அதெல்லாம் அப்படித்தான்.... ஸ்கூல்ல டீச்சர் இருக்கைல ஒரு மாதிரியும் இல்லாதப்போ ஒரு மாதிரியும் பேசுவோம்ல்ல ..... அந்த மாதிரி தான் இதுவும் .... குடுக்கிற மரியாதைய எல்லாம் உண்மைன்னு நம்பக்கூடாது.... புரிஞ்சுதா??", இன்று திருட்டு முழி முழித்துக் கொண்டு தன் ஆடைகளை பெட்டியில் அடுக்க ஆரம்பித்தான் முகிலன்.


"அட ஃபிராடு பக்கி..... இப்பதானே தெரியுது உங்க சுயரூபம்...😳 இவ்வளவு நாள் சமத்துப் பையன் இல்ல நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன்", என்ற மாயா அவனை கலாய்க்க,


இது பொறந்ததுல இருந்தே அறுந்த வாலு.... இதப்போய் சமத்துனு நெனச்சு இருக்கியே ......என்று அனு தன் தம்பியை புகழ்ந்து தள்ள..... .

"பார்த்தா அப்படி தெரியலையே ", என்று மாயா தன் கண்களை சுருக்கி அவனையே நோக்க",.... "அக்கா.... புகழ்ச்சிலாம் நமக்குள்ளேயே இருக்கட்டும் .... அத வெளியிடுறது எனக்கு பிடிக்காது", என் முகிலன் அவன் முகத்தை மூடிக்கொண்டான்.

"அடப்பாவி", என்று மாயா அவனை நோக்கி கண்களை விரித்தாள்.


இப்படிப் பேசிக் கொண்டே அவர்கள் அனைத்து பொருட்களையும் பேக் செய்து இருந்தார்கள். நம் சொஹாராவோ இப்போது பூமிக்கு 50 மைல் தொலைவில் வந்திருந்தான்.


"இன்னும் கொஞ்ச நேரத்துல லேண்ட் ஆகப் போறேன்...... அவங்ககிட்ட போய் நான் என்னன்னு சொல்லுவேன்....?,எப்படி பேச ஆரம்பிக்கிறது ....?", என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தான் அவன்.


ஏய் ஃப்ரீ பர்டு..... ரொம்ப நேரமா என் வாயை மூடிக்குட்டே இருக்க..? ஏதாச்சும் ஐடியாவ சொல்லி தொலையேன்.


ஒரு பந்து வடிவிலிருந்த அந்தப் ஃப்ரீ பர்ட், மெல்ல மேலே எழும்பி அவனை முறைத்தது.


"ஏம்மா முறைக்கிற? ", என்று சரண்டர் டோனில் அவன் ஃப்ரீ பர்டை பார்த்து கேட்க.... அதுவோ முதல்ல லேண்ட் ஆகுற வேலைய பாருங்க பாஸ் என்று கூறிவிட்டு மீண்டும் பழையபடி கீழேயே அமர்ந்து விட்டது.


"அதுவும் சரிதான் .... முதல்ல லேண்ட் ஆகணும்", என்று கூறிக்கொண்டே சொஹாரா பூமியின் மேல் அடுக்கில் நுழைந்தான்...ப் நுழையும்போது அந்த பறக்கும் தட்டிற்கு சிலபல கமெண்ட்களை கொடுத்தான்.


"மினி காப்டர்..... இன்விசிபிலிடி ஆன்.... ",என்று அவன் கூறிய உடன் அந்த பறக்கும் தட்டு மாயமாய் மறைந்தது.... "லொகேஷன் ஆன்", என்றவுடன் சிவப்பு நிற புள்ளி அவனின் மானிட்டரில் தெரிந்தது.... "ஸ்பீடு டவுன்", என்றவுடன் பறக்கும் தட்டின் வேகம் மெல்ல மெல்ல குறைந்தது..... " கெட் ரெடி டு லேண்ட்" என்றவுடன் மெல்ல நம் மூன்று நண்பர்கள் இருக்கும் வீட்டை நோக்கி அந்த பறக்கும்தட்டு நகரத் தொடங்கியது.


                  - தொடரும்.....



Rate this content
Log in