Madhu Vanthi

Children Stories Drama Classics

4.5  

Madhu Vanthi

Children Stories Drama Classics

2k KIDS - 4

2k KIDS - 4

7 mins
612


காலை ஏழு மணிக்கே டிப்-டாப்பாக ரெடியாகி இருந்த ஹர்ஷன் மூன்று தொசைகளை வேகவேகமாக உள்ளே தள்ள., அவன் விழுங்கிய வேகத்திற்கு விக்கல் எடுக்க தொடங்கி விட்டது.


விக்கி கொண்டிருந்தவன் தலையிலேயே தட்டி கொடுத்த அவனின் தாய், "இந்த ஸ்கூல் காலேஜ் கேளம்பனும்னா மட்டும் எங்கேருந்து தா இவ்ளோ வேகம் வருதோ... பைய சாப்புடு டா...", என தலையில் தட்டி கொடுத்து தண்ணீரை எடுத்து கொடுத்தார்.


அதை குடித்து கொண்டே, மாடிப்படியில் குடுகுடுவென ஓடி வரும் மித்ராவை ஒரு கண்ணால் பார்த்து கொண்டே தோசையை மறு கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். இவை இரண்டும் தானே இளைய சமுதாய வாழ்வின் முக்கியமான குறிக்கோள்.


("சாப்பாடும் சைட்டும் இல்லாத வாழ்வு

நரக வாழ்வாம் 2kகிட்ஸ்க்கு"


- மை குறள் 😜)


அவனை பார்த்து புன்னகைத்த வண்ணம் அவளும் வந்து டேபிளில் அமர்ந்தது உணவை விழுங்க தொடங்க... "மித்து.... மித்து... பைய சாப்புடு... அடச்சுக்க போது...", என அக்கறையாக அவன் படபடத்தான்.


"ம்ம்.. சரிங்க... ஆனா லேட் ஆகிருமே.... அப்பரம் ஃபர்ஸ்ட் ஹவர் அட்டெண்டன்ஸ் கட் ஆகிரும்....", என கூறி வேகமும் இல்லாமல் மெல்லமாகவும் இல்லாமல் மென்றும் மெல்லாமலும் தோசையை அவள் விழுங்க... அவளுக்கு தோசை பரிமாறிய சங்கரி தான் இருவரின் செயலை கண்டு, "என்னான்கடா நடக்குது இங்க?...", என கண்களை சுருக்கி இருவரையும் கூர்ந்து நோக்கினாள்....


பெற்றோரை இழந்த வேதனையில் அவள் கலங்கிடும்போது, இத்தனை நாளும் அக்கறை இருந்தாலும் வெளிப்படையாக அக்கறையை காட்டிடாதவன் சில நாட்களாக அவளை கைக்குள் தாங்கி கவனிப்பதும்... ஹர்ஷா என்றே இவ்வளவுநாளும் அவனை அழைத்திருந்தவள் திடீரென மரியாதையை அள்ளி தெளிப்பதும் சங்கரிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தாதா என்ன?...


அன்னையின் குறுகுறு பார்வையில் இருந்து தப்பிக்கும் நோக்கில், "ஒன்னும் நடக்கல மம்மி... இதெல்லாம் கண்டுக்க கூடாது.... போ போ... தோச தீயுது ... அத போய் பாரு..", என அன்னையை அவன் விரட்ட..., "அடுப்ப ஆஃப் பண்ணி அரமணி நேரம் ஆச்சு டா மகனே.....", என அவனை மேலும் ஒரு லுக்கு விட்டார் அவர்.


"ஆமா... ஏம்மா மித்ரா... கேக்கனும்ன்னு நெனச்சேன்.... இப்போலாம் இவன ரொம்ம்ம்ம்ம்ப மரியாத குடுத்து கூப்பிடுற", என சங்கரி கேட்ட நொடி மித்ராவிற்கு சட்டென புறையேரி விட... , "ம்ம்மா... சாப்பிடும்போது பேச கூடாது... போமா அந்த பக்கம்... மித்துக்கு போற ஏறுது பாரு", என அன்னையை அவன் முறைக்க..., "டேய்... கொஞ்ச நாளாவே ரெண்டு பேரும் சரி இல்ல.... ...", என பதிலுக்கு முறைத்து கொண்டே அவர் இழுக்க..., "அதெல்லாம் இல்ல அத்த... அவரு என்னவிட வயசுல பெரியவருல அதா வாங்க போங்கன்னு சொல்லுறேன்... ", என இருவருக்கும் இடையே புகுந்தாள் மித்ரா.


"அட ச்ச்சை... காலங்காத்தால இதெல்லாம் கேக்கனுமா நானு...", என்றவாறு பள்ளி சீருடையில் மயூரி உணவிற்கு வந்து அமர..., அவளுடனே வந்த தீராவும் மித்ராவின் பதிலால், "சத்ய சோதன டா யப்பா... இவன் உன்னவிட பெரியவன்னு இப்பொ தா கண்டு புடிச்சியா மித்ராக்கா....", என நக்கலடித்து கொண்டே வந்தமர்ந்தாள்.


"ஓய் தீருமா... அவ உனக்கு அக்கா இல்ல... அத்த பொண்ணு மொற வரும்... சோ அண்ணின்னு சொல்லு", என ஹர்ஷன் சுத்தி வளைக்க... "சொல்லுவா சொல்லுவா... கூடிய சீக்கிரம் உரிமையோடவே சொல்லுவா.... அதுக்கு மொத தீராவோட அண்ணனுக்கு மித்ராவ கட்டி வைக்கனும்...", என சங்கரியும் சுத்தி வளைக்க... அவள் வார்த்தையில்  பாவம் மித்ரா தான் ஒன்றும் புரியாமல் விழிக்க தொடங்கினாள். ஹர்ஷனும் தான்... ஏனெனில் தீரா அவனது உடன் பிறவா சகோதரி தான்.... தீரா வீட்டிற்க்கு ஒற்றை பிள்ளைதான் என்றாலும் உறவில் அவளுக்கு எக்கச்சக்க அண்ணங்கள்... அதில் எந்த அண்ணன் என தெரியாதனாலே இந்த பதட்டம்.


"ம்மா... எந்த அண்ணன்....?", என ஹர்ஷன் பதட்டம் ஆக...


"புது அண்ணா டா....", மகனை வேண்டுமென்றே கடுப்பேற்றினால் சங்கரி... 


யாரு அந்த புது அண்ணன்???", இன்று உண்மையை அறியாமல் அவன் விடுவதாக தெரியவில்லை.... மித்ராவும் திருதிருவென விழித்துக்கொண்டு அத்தையும் அத்தை மகனும் தன்னை வைத்து காமெடி கீமடி செய்யவில்லையே என்னும் அளவிற்கு இருவரையும் பார்த்துக் கொண்டே இன்னொரு தோசையை உண்ண தொடங்கிட.... தீராவும் மயூரியும் வாயை மூடி சிரித்து கொண்டே உண்டார்கள்.


அதே நேரம் ஒரு அறைக்குள் இருந்து சீருடையில் வந்த ரக்ஷவ், "எந்த அண்ணனா இருந்தா என்ன மச்சான்... என் அக்காக்கு பிடிச்சா போதும்.... வர்றது நம்ம சொந்தம் இல்லனாலும் பாப்பா அவளோட புது அண்ணனா ஏத்துக்குவா.... அத தா அத்த சொல்லுறாங்க இல்ல அத்த??....", என ஹர்ஷனை கடுப்பேற்றியவன் தீராவின் தோளில் கை போட்டு நிற்க... , "ஆமா ஆமா..... புது அண்ணா வந்தா மீ ஹாப்பி தா.. ", என தோசையிலேயே கவனமாக கூறினாள் தீரா.


"ம்மா... மித்ரா இப்பொ தா ஃபர்ஸ்ட் இயர் சேந்துறுக்கா... அதுகுள்ள அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறீங்க.... என்ன ம்மா நீங்க.... சின்ன பொண்ணுமா அவ.... இப்டி அவள புடிச்சு பாளுங்கெனத்துல தள்ளி விட பாக்குறீங்க... அவளுக்கு எவ்ளோ ட்ரீம் இருக்கும்... கல்யாணம் பண்ணுனா அது நிறைவேறுமா??... இதெல்லாம் யோசிக்க மாட்டீங்களா??..", என அன்னையின் மனநிலை புரியாமல் அவன் பாட்டிற்கு கத்தி கொண்டே போக... அதை என்னவோ வார்ல்டு ஃபேமஸ் டைலாக்கை தியேட்டரில் அமர்ந்து பார்ப்பது போல் பாப்கார்ன்னுக்கு பதிலாக தோசையை வாய்க்குள் தள்ளி கொண்டு சுவாரசியமாக பார்த்தார்கள் மற்ற மூவரும்.


"டேய் டேய் டேய்..... ஏன் இப்டி பீப்பி ஏறுது... தண்ணிய குடிடா.... எங்களுக்கும் எல்லாமே தெரியும்... என் மருமகள பாத்துக்க நீ எனக்கு சொல்லி தரியா?... போடா போடா... சாப்பிட்டு கெலம்பு.... அவள அவ்ளோ சீக்கிரமா யாருக்கும் குடுக்க மாட்டேன்.. ", என சிரித்து கொண்டே மகனை அமைதியாக்கினாள் அவனின் தாய்.


அதன் பின்னர் தான் அவன் பேசியது நினைவிற்கு வர... அனைவரின் பார்வையையும் சமாளிக்கும் வழி தெரியாமல் விழித்தான் ஹர்ஷன்.

மித்ராவோ அமைதியாக உணவை உண்டு முடித்து சமத்து பிள்ளையாக கைகழுவி விட்டு, எழுந்து நிற்க.... அதை கண்ட ஹர்ஷன், இவர்கள் அனைவரின் பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என அவளை அழைத்து கோண்டு அன்னையிடம் கூறிவிட்டு தன் கல்லூரி பேருந்தை பிடிப்பதர்க்காக புறப்பட்டான்....


மித்ரா தன்னை இவ்வளவு நேரம் நக்கலடித்த தங்கை மற்றும் தம்பியை தலையில் தட்டிவிட்டு.... உணவை விட்டு நிமிராத தீராவின் தோசையில் ஒரு பங்கை பிய்த்து வாயில் வைத்துவிட்டு.. அதற்க்கு அவள் முறைக்கையில் சிரித்துவிட்டு அத்தையிடம் கையை அசைத்து விட்டு ஹர்ஷனுடன் புறபட்டாள்.


செல்லும் தன் பிள்ளைகளை பார்த்திருந்த சங்கரி மற்ற பிள்ளைகளுக்கு மதிய உணவு எடுத்து வைக்க கிச்சனுள் நுழைந்தாள்... சில நிமிடங்களிலேயே உணவை உண்டு முடித்த ரக்ஷவ் சென்று கை கழுவிவிட்டு அத்தையின் முந்தானையிலேயே கையை துடைத்து கொண்டு "ஹிஹிஹி... நைஸ் ஸாரி அத்த.... எந்த கடைல வாங்குநீங்க...", என கேட்டு நிற்க... அவனை செல்லமாக முறைத்து பார்த்தாள் அவள்.


"டேய் ரக்ஷவா... உன் அக்கா ஹர்ஷன் பத்தி நீ என்ன நெனைக்குர?


நா என்ன நெனைக்கனும் அத்த...


அதில்ல டா.... ம்ம்ம்ம்... உன் அக்காவுக்கும் என் மகன புடிச்சிருக்கு தானே....


ஆமா.... புடிச்சிருக்கு தா...


ஹ்ம்ம்... ஆமா ஆமா.... புடிச்சு தா இருக்கு...


.... ...... ....


......... ..... ..... ...


"டேய்... உன் அக்காவ என் மகனுக்கு கல்யாணம் பண்ணி குடுப்பியாடா??....


" .... ... ..... ..." 


"இப்போவேலாம் இல்ல டா.... அவ படிச்சு முடிக்கவும் தா..."


"ஹாஹாஹா....அத்த..... அத்த.... இதெல்லாம் என்ட்ட ஏன் கேக்குறீங்க.... உங்க மகன்... உங்க மருமக.... நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு நோ அப்ஜக்ஷன்..... ஆனா மித்ராக்கா எப்போ ஓகே சொல்லுராளோ அப்போ தா.. சரியா?...."


"ஹாஹா.... சரி டா.. சரி டா.... உன் அக்கா சரின்னு சொன்னா தா கல்யாணம்....", 


"சோ சுவீட் அத்த", என்று அவள் கன்னத்தில் முத்தமி்ட... , "உங்க மாமியார் மருமகன் கொஞ்சல்ஸ அப்பறமா வச்சுக்கோங்க... இப்போ ஸ்கூலுக்கு டைம் ஆச்சு... சீக்கிரம் லஞ்ச் பேக் பண்ணுங்க.... ", என பரபரத்தது கொண்டே உள்ளே வந்தாள் தீரா.


"பறக்காத பறக்காத.... இந்தா... சாப்பாடு கட்டியாச்சு... மதியம் அர்ஜுனுக்கும் குடுத்துறு.....", என ரக்ஷவ் மயூவிடம் ஒரு ஒரு லஞ்ச் பேக்கை கொடுத்தவள் தீராவிடம் இரண்டு கொடுக்க..., "ஹ்ம்ம்... அவனா வந்து வாங்குனா தா குடுப்பேன்... இப்பொலாம் உங்க மகன் என்ன கண்டுக்குறதே இல்ல... அவன் கண்ணுக்கு அந்த கீர்த்தி மட்டும் தா தெரியுறா போல", என்று கூறி தீரா அலுத்து கொள்ள..., "என்ன பாப்பா... உன் அண்ணன் மேல போசசிவ் வருதா??", சிரித்து கொண்டே ரக்ஷவ் கேட்க... "ஆமா ஆமா போசசிவ் தா... ஹ்ம்ம்...", என முறைத்து விட்டு முகத்தை திருப்பி கொண்டு சென்றாள் அவள்.


             ********


விடியக்காலையே டான்ஸ் கிளாஸ் சென்று விட்ட அர்ஜுன்... தன் பயிற்சி முடியவும் புதிய தோழி கீர்த்திகாவுடன் காலை உணவுக்காக பைக்கை ஒரு ஹோட்டலில் நிறுத்தினான்.... என்றும் இல்லாமால் இன்று அவள் முகம் வாட்டமாக இருப்பதை அவன் கவனித்திருந்தான்... 

ஆளுக்கு ஒரு பூரி செட்டை ஆடர் செய்து விட்டு, அவளுடன் சேர்ந்த கடைசி இருக்கையில் அமர்ந்தான்.... காலை நேரம் என்பதால் அந்த ஹோட்டலில் இன்னும் கஸ்டமர் யாரும் வரவில்லை. 


யாருமே இல்லாத இடத்தில் அமர்ந்தது அவளுக்கு வசதியாக இருந்தது போலும்...காலையில் இருந்து அடக்கியிருந்த கண்ணீர் மெல்ல வெளியே எட்டி பார்க்க தொடங்கியது..... ஆனாலும் அதை பார்த்து கொண்டு அர்ஜுன் அமைதியாகவே இருந்தான்...


சிறிது நேரம் அமைதி காத்தவன் மெல்ல அவள் கரம் பற்றி, "கீர்த்தி.... என்ன டா ஆச்சு.... நானும் காலைல இருந்து கேட்டுட்டு இருக்கேன்.... சொல்லு டா... மாஸ்டர் திட்டுனதுக்கு ஃபீல் பண்ணுறியா??..... இல்ல அந்த ஸ்டெப் சரியா வரலைன்னா.... நா தா கத்து தரேன்னு சொல்லுறேன்ல... இல்ல வேற எதாச்சுமா??..... சொன்னா தானே உனக்கும் கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்....", அவள் கரத்தில் அவன் அழுத்தம் கொடுக்க... இந்த தனிமை அவள் மனதை வெளிபடுத்த சரியாக இருந்தது.


"ஏன் அர்ஜுன்.... காலைல நா போதும் போதும்னு சொன்னப்பவும் உன் ஃபேமிலி பத்தி சொல்லிட்டே இருந்த...", அவள் கண்ணீரின் ஊடே அவனை கேள்வியாய் நோக்க.... அவனோ குழப்பத்துடன் நோக்கினான்.


"ஆரம்பத்துல இருந்தே யாரும் இல்லாம இருந்தாலும் இந்த அளவுக்கு வலிக்காது... .... ..... .... சின்ன வயசுல இருந்தே கூட இருந்தவங்க திடீர்னு ஒருநாள் வந்து நீ எங்க சொந்தம் கெடையாது... உன்னயவும் உன் அண்ணனையும் கடற்கரையில தலைல அடிபட்டு இருந்தப்போ தா கூட்டிட்டு வந்தோம்ன்னு சொன்னா???..... எனக்கு எப்டி இருக்கு.... ... ... ... நாங்க அவங்களுக்கு கெடைக்கும்போது அவங்களுக்கு கொழந்த இல்லையாம்.... இப்பொ இருக்காம்... அதனால நாங்க வேனாமாம்..... ... அதா அண்ணா என்ன மட்டும் கூட்டிட்டு தனியா வந்துட்டான்... இப்போ அவங்க நியாபகமாவே இருக்கு....", என கூறி தேம்பி அழ.... அர்ஜுனுக்கு தான் ஏதோ போல் இருந்தது.


அவளை விளையாட்டாக வெறுப்பேற்றுவதற்காகவே, "எங்க அம்மா அப்படி அண்ணன் அப்படி... ரக்ஷவ் மை சூப்பர் மச்சான்... தீரு மை செல்ல தங்கச்சி.... மயூ மித்ரா அண்ணி மாறிலாம் யாருமே இருக்க முடியாது என குடும்பத்தை பற்றி ரசித்து ரசித்து பேசினான்... அது இவளை இந்த அளவிற்கு கொண்டுவரும் என்பதை அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.


"ஹே... கீர்த்து.... ஸாரி டா.... நா .... நீ இவளோ ஹர்ட் ஆவன்னு நா நினைக்கவே இல்ல.. பிளீஸ்.... அழாத..", என சமாதானம் பேச அவளின் விசும்பல்கள் குறைந்ததே ஒழிய அவளின் கண்ணீர் செல்லாமல் வழிந்து கொண்டே இருந்தது..... 


"இங்க பாரு கீர்த்து.... லைஃப் நம்மளுக்கு கஷ்ட்டத்த குடுக்கும்போதுளாம் நாம சிரிச்சிட்டே இருக்கனும்.... அத பாத்து ஒரு ஸ்டேஜ்ல நமக்கு கஷ்ட்டத்த குடுக்குற லைஃப் டயர்ட் ஆகிரும்... இப்பொ நீ ஹப்பியா இருக்கனும்.... எனக்கு அது தா வேணும்... அஜ்ஜு கூட இருக்குற வர கீர்த்தி அழ கூடாது.... ஸ்மைல் ஸ்மைல்.......", என தொங்கபோட்டிருந்த அவள் முகத்திற்கு நேராக குனிந்து அவன் சமாதானம் பேசிய விதத்தில் அவள் சிரித்த விட்டாள்... சரியாக அவர்கள் ஆர்டர் செய்த பூரியும் வர... அழகாக அதை உண்டு முடிதது பள்ளிக்கு புறப்பட்டார்கள்... அங்கு காத்திருக்கும் ஆப்பு பற்றி அறியாமல்.


            *******   

ஹர்ஷன் மித்ராவின் கல்லூரி தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது.... 

இங்கே மற்றவர்களுக்கு பள்ளி தொடங்கி ஒரு மாதம் ஆகி விட்டது.


பள்ளிக்கூடத்துல பாடம் படிச்சது இல்ல நாங்க நட்பு படிச்சோம்

சின்ன வயசுல நாங்க அழுததில்ல

ஒன்னா சேந்து சிரிசோம்....


என்ற பாடலை படாமலேயே விளக்கம் அளிப்பது போல பாடங்களை மேலோட்டமாகவும் நட்பை அடி ஆழம் வரையில் சென்று கற்றுக்கொண்டே தங்களின் நாட்களை சுழல விட்டுக் கொண்டிருந்தார்கள் நம் வயலூர் மேல்நிலைப்பள்ளி வாலண்டியர் வானரங்கள்.


இவர்களின் ஆட்டங்கள் சுகன் ஸாரின் அழகான அடக்குமுறையுடன் சிறப்புடனே ஓடியது... இப்போது பள்ளி திறந்து ஒரு மாதமும் உருண்டோடி விட்டது.... சென்ற வருடம் முழுவதும் ஆன்லைனிலேயே நடைபெற்ற வகுப்பின் காரணமாக தங்களின் பள்ளி கட்டிடத்தை.... வகுப்பறைச் சூழலை.... தினமும் ஒக்காந்து ஒக்காந்து தேய்க்கும் பென்ஞ்சை... சாக் பீசால் நிறப்பி வைக்கும் கரும்பலகையை... இவற்றையெல்லாம் ஏக்கத்துடன் தேடிக் கொண்டிருந்த ஒரு ஆண்டுகால தவிப்பை, பள்ளி வந்ததும் இரண்டு வாரங்கள் வரையில் அனைத்தையும் இப்பொழுதே முதன்முதலாய் பார்ப்பது போல அழகாக ரசித்தவர்கள்.... இப்பொழுது, "எப்பா கொரோனா.... எங்கப்பா போன.... திரும்ப வர மாட்டியா.... எங்களுக்கு லீவ் குடுக்க மாட்டியா?...", வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து விடலாமா என திட்டம் போடாத குறையாக தலையை பிய்த்துகொள்ள தொடங்கி விட்டார்கள்.


காரணம்... ஓராண்டு காலமாக ஓய்வில் இருந்த மூளையில் இப்பொழுது பாடங்களை ஏற்றும் பொழுது அது வேலை செய்வேனா என அடம்பிடித்து வேலைநிறுத்தம் செய்து கொண்டிருக்கிறது....... 


அந்த லிஸ்ட்டில் தலை முடியை பிய்த்து பிய்த்து எண்ணி கொண்டிருந்த அர்ஜுனுக்கு ஆப்பாக வந்தது அந்த அழைப்பு.. பிளஸ் ஒன் வகுப்பாசிரியர் மாணிக்க ராஜ் இடம் இருந்து.


😜😈GALAATTAS ON THE WAY 😈🤪


Rate this content
Log in