அன்னை வளர்பினிலே
அன்னை வளர்பினிலே
அன்னையின் மடியில் அழகாய் கண்ணயர்ந்திருந்தான் அவன்... அவனுக்கு தட்டி கொடுத்து கொண்டே இருந்தவள் அவன் உறங்கியது தெரிந்ததும், உறக்கம் கலையாமல் அவனை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து விட்டு நெற்றியில் ஒரு முத்தம் வைத்து... அழகாய் போர்வையும் போர்த்தி விட்டு, அருகில் படுத்து கொண்டாள் அவனின் தாய்...
இவ்வளவு நேரம் இல்லாத ரகளைகளை செய்தவன் இப்போது அழகாய் உறங்குவது கண்டு அவளுக்கு ஒரு நிம்மதி.. ஆனால் ஒரு வருத்தம்... சிறு பிள்ளையை தன் கரங்களாலேயே அடித்து விட்டோமே என்று... இருந்தும் மனதினை கல்லாக்கி கொண்டாள்....
இப்போது அடித்து திருத்தாவிட்டால் அது தவறான வளர்ப்பாக மாறி.. வருங்காலத்தில் தன் மகனின் வாழ்வையே கூட பாதிக்கலாம் என்று...
இன்று எதிர் வீட்டு பெண் பிள்ளையிடம் எங்கிருந்தோ கற்று வந்த ஆணாதிக்கத்தை நினைவில் வைத்து வன்முறையை கையாண்டவன்... வருங்காலத்தில் தகாத செயல்களில் ஈடுபடமாட்டான் என்பதில் என்ன நிச்சயம்...
தாயுள்ளமே ஆனாலும் திருத்தும் வயத்தில் கண்டித்தால் மட்டுமே பலன் கிட்டும் என பெருமூச்சுடன் மனதிற்குள்ளேயே கூறி கொண்டவள் தன் எட்டு வயது மகனை அனைத்து கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள்...
அவனும் அன்னையின் ஸ்பரிசம் உணர்ந்து அழகாக அவளை அணைத்து கொண்டு உறங்கினான்
