Amirthavarshini Ravikumar

Others

4  

Amirthavarshini Ravikumar

Others

ஆசை அம்மா

ஆசை அம்மா

2 mins
221


     நிலா வரும் நேரம். சாலையில் ஒரு பெண் மட்டும் தனியாக விறகுகளுடன் நடந்து வந்து கொண்டு இருக்கிறாள். ஒரு ஓட்டு வீட்டுக்குள் நுழைந்து அவள், " ஆனந்த் சாப்பிட்டு விட்டாயா? " என்கிறாள். 

" ஆம் அம்மா" என்கிறான் ஆனந். 

 வெளியே இருந்து ஒருவர் "லட்சுமி தண்ணி வந்துவிட்டது வா"என்கிறாள். 

" வரேன் அக்கா... ஆனந் நீ படித்துக் கொண்டு இரு நான் தண்ணி எடுத்து விட்டு வருகிறேன்" என்று கூறி கிளம்புகிறாள் லட்சுமி. 

 ஆனந்த் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டு இருக்கிறான். அவனது ஆசை ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது. இதை தன் அம்மா லட்சுமியிடம் கூறி இருந்தான். லட்சுமி தான் விறகுவெட்டி சம்பாதித்த பணத்தை சிறிதுசிறிதாக சேமித்து வைத்திருந்தாள். இப்பொழுது சேமிப்புத் தொகை 10 ஆயிரம் ரூபாய் அவள் கையில் இருந்தது. தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளும் வந்தது. ஆனந் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தான். பள்ளி சென்று வரும் வழியில் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அவன் கையில் அடிபட்டது. அவன் கையை குணமாகவே சேமித்து வைத்திருந்த 10 ஆயிரமும் செலவானது.

 லட்சுமி ஆனந்த்திடம், "நீ ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக அப்படி நான் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றாள். ஆனந்த் வேண்டாம் அம்மா என்று கூறியும், "நான் உன் அம்மா என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் நீ தேர்வில் படி" என்று கூறினாள். ஐஐடி நுழைவுத் தேர்வில் ஆனந்த் வெற்றி பெற்றான். வெளியூரில் படிக்க இடம் கிடைத்தது. விடுதியில் மாதம் இருமுறை மட்டும் வீட்டாரிடம் பேச அனுமதித்தனர். ஒருமுறை ஆனந்த் தன் தாயாருடன் பேசிக்கொண்டு இருக்கையில் ஏதோ சத்தம் கேட்டது. உடனே லட்சுமி கைப்பேசியை வைத்து விட்டு சென்று விட்டாள். ஆனந்த்திற்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் ஏதோ பிரச்சனை என்று மட்டும் நன்றாக புரிந்தது. ஆனந்த் தன் அம்மாவின் பிறந்த நாளுக்குப் பரிசு வாங்குவதற்காக மாலை வேளையில் வேலைக்கு சென்றான். அப்பணத்தை சேமித்து வைத்து தன் அம்மாவிற்கு பிடித்ததை வாங்கிக் கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டான். விடுமுறை சமயம் ஆனந்த் வீட்டிற்கு சென்றான் அப்பொழுது வீட்டின் முன் வட்டி கொடுத்தவர் லட்சுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தார். இதைப் பார்த்த ஆனந்த்திற்கு கோபம் வந்துவிட்டது. தன் அம்மாவின் பிறந்த நாளிற்காக சேர்த்து வைத்திருந்த பணம் 15,000 ரூபாயை வட்டி கொடுத்தவர் முகத்தில் தூக்கி எறிந்தான்.

" என் அம்மா வட்டிக்கு மட்டுமே கடன் வாங்கி உள்ளார்கள். தன்மானத்தை உன்னிடம் அடகு வைக்கவில்லை" என்று உரத்த குரலில் அவனைப் பார்த்து முறைத்தபடி கூறினான். பணம் கிடைத்துவிட்டது என்று அந்த பணத்தை தூக்கிக்கொண்டு அந்த வட்டி காரர் சென்றுவிட்டார். லட்சுமி ஆனந்த்தை பார்த்து வியந்து போய் நின்று கொண்டு இருந்தாள். ஆனந்த் சிரித்தபடி பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா என்று கூறி ஒரு பட்டுப் புடவை பரிசளித்தான். இது உனக்கு எவ்வாறு கிடைத்தது என்று அம்மா கேட்க தான் படித்துக்கொண்டே வேலை பார்ப்பதாக கூறினான். இது கடினமான வேலை ஆனந்த் இதையெல்லாம் ஏன் செய்கிறாய் என்று கேட்டாள். உன் கஷ்டத்திற்கு முன் இது பெரியதல்ல அம்மா என்று கூறி அம்மாவை அணைத்துக் கொண்டான்.லட்சுமி முத்தமிட்டாள்.


Rate this content
Log in