Madhu Vanthi

Children Stories Comedy Inspirational

4.7  

Madhu Vanthi

Children Stories Comedy Inspirational

2k KIDS -1

2k KIDS -1

8 mins
458


பார்க்கும் இடமெல்லாம் பசுமை போர்த்தி திக்கெங்கிலும் பச்சை சூழந்த அழகிய கிராமபுரம் வயலூர்... வயல்வெளிகளில் மும்முரமாக நடை பெறும் வேலைகள்... ஊராரின் வழக்கமான வம்பு சண்டைகள்.... ஊர் கதை உலக கதைகளை சலிப்பின்றி தங்களின் கற்பனை கலந்து பேசும் மக்கள்... இவர்களின் மத்தியில், "நாங்க பிறந்ததே உங்கள திருத்த தா யா", என சொல்லாமல் சொல்லி கொண்டு அராத்துகளாகவும் அருந்த வால்களாகவும் வளம் வரும் அந்த ஊரின் இளைஞர் பட்டாளமான, கிராமத்தின் முதல் தலைமுறை பட்டதாரிகளின் சேட்டை தாங்காமல், "படிச்ச திமிருல எல்லாமே ஆடுதுங்க..." என அவர்களை புறம்பேசாத வாயே வயலூரில் இல்லை... 


இவர்களை இந்தளவிற்கு மெருகேற்றிய பெருமை அந்த கிராமத்தில் இருக்கும் அந்த ஒரே ஒரு மேல்நிலைப் பள்ளியையே சாரும்.... ஆள் ஆரவாரமற்ற சாலையில் அமைந்துள்ளது அரசு நகராட்சி மேல்நிலை பள்ளி... ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவனை பக்குவமாக வளர்க்க வேண்டிய பதின்வயதில் அவர்களைச் சிறப்புற வளர்த்து, சமுதாயத்தில் தலை சிறந்த ஒருவனாக மாற்றும் ஆழகிய கலைக்கூடம் என்று தான் சொல்ல வேண்டும்.... அதன் பெருமைக்கு முதற்காரணம் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சுகந்தன் மாணாக்கர்களுக்கு பிரியமான சுகன் சார்.... ஆனால் பள்ளியின் பெருமையுடன் சேர்ந்து பிற மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இழி சொல்லை உண்டாக்குவது போலவே சில வாலில்லா வானரங்களும் இதே பள்ளியில் உலாவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.. 


ஜுன் 1, 2021.... (naama Konjam advance ah ve povom 😜)


2021-22 கல்வியாண்டில் கால்பதிக்கும் முதல் நாள்... கம்மியாகவே மாணவர்கள் வந்திருப்பினும் அனைவரின் முகத்திலும் ஏகத்திர்க்கு மகிழ்ச்சியின் ரேகை படர்ந்திருந்தது... எப்பொழுதுமே ஸ்கூல் பிரேயர் முடிந்த பின் பைய பைய ஆமைநடை போட்டு வர நம்ம புள்ளைங்க..., இன்றைக்கு பிரேயர் துவங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்து..., ஒரே கிளாஸ் ரூமில கூட்டணி போட்டு இருந்தார்கள்... 

பத்தாம் வகுப்பு A பிரிவில் அந்த கும்பல் தீவிரமாக ஏதோ ஒரு யோசனைல மூழ்கி இருக்க.... அந்தத் மௌனத்தை உடைத்தாள் ஸ்ரீ யாத்வி.


" ஹே.. இன்னும் எவ்வளவு நேரம் தா யோசிப்பிங்க...., சீக்கிரம் எதாவது ஐடியா சொல்லுங்க...", என்று யாத்வி அழுத்தந்திருத்தமாக கூறியவள் மற்றவர்களை பார்க்க, "அட பொரும்பா....", என ஐடியா கிடைக்காத கடுப்பில் அவளை பார்த்து கத்தினாள் ஹரிணிமித்ரா. ( அதாவது பொரு அம்பா = பொரும்பா....

அம்பா என்பது இந்த ஸ்கூலில் இந்த செட்டுக்கே உரிய பிரத்யேக ப்ரெண்ட்ஷிப் ஸ்லாங்... அதுக்கு இவங்க கிட்ட அர்த்தம் கேட்டிங்கனா, "அம்மா அப்பா = அம்பா.... ரெண்டு பேரையும் சேத்து வச்சது தா எங்க ப்ரெண்ட்ஸ்", அப்டின்னு சொல்லுவாங்க. 😁😁😁)


"யாரு இவங்க ரெண்டு பேரையும் ஒரே நாள்ல பொறக்க சொன்னது?..., ஒவ்வொரு வருஷமும் இதே பிரச்சன..., புதுசு புதுசா ஐடியா தேட வேண்டி இருக்கு", என்று ஶ்ரீயிடம் அழுத்துகொண்டாள் ஹரிணி...., அவள் கூறியதற்கு ஜால்ரா போடும் விதமாக, "ஆமா.. ஆமா", என்று அவளின் வார்தையை ஆமோதித்தனர் இணைபிரியா உயிர் தோழிகள் மதி மற்றும் ஜீனத்.


தீடிரென , "ஐடியா......", என்று ஒருத்தி கத்த...., "என்ன என்ன...", என்று மற்றவர்கள் அவளை நோக்க, அனைவரையும் வட்டமாக சேர்த்து தனது யோசனையை கூற தொடங்கினாள் ஐடியா குயின் சுஜினா...., அவள் திட்டத்தை கூறி முடிக்க... "ஹே....சூப்பர்...", என கத்தி கொண்டே வட்டத்தில் இருந்து அனைவரும் விலகினார்கள்.


அனைவரும் ஐடியா கிடைத்ததில் ஆனந்தமாய் இருக்க.... சுஜினாவின் இரட்டை சகோதரி சபீனா மட்டும், "ஏன்டி உடன் பிறப்பே என்ன இப்டி கோர்த்து விட்ட?...", என்ற ரெஞ்சிற்கு சுஜினாவை லுக்குவிட்டு கொண்டிருந்தாள்.

"சூப்பர்'ம்பா...., செம்ம ஐடியா....", என்று சுஜினாவை பாராட்டி விட்டு, "சபி.... அவ சொன்ன மாதிரியே பன்னிரு", என்று ஸ்ரீ அவளுக்கு கட்டளை இட..., சபியோ , "இந்த தடவ நான் தா பலி யா? ", என்பது போல் அனைவரையும். பார்த்து கொண்டிருந்தாள்..

அதே நேரம் சரியாக காலை வழிபாட்டிற்கு மணி அடித்தது...


வழக்கத்தை விட முதல் நாள் வழிபாட்டு கூட்டம் ஆசிரியர்களில் கருத்து கூறுவதிலேயே மிக நீளமாக நீண்டு கொண்டே போனது... இவ்வாறு அழகாக மாணவர்களின் பள்ளி முதல் நாள், 'அறுவை'.. 'ரம்பம்' என்று அவர்களால் பெயர் வைக்க பட்டிருக்கும் அறிவுரை மழையால் துவங்கிட... பிரேயர் துவங்கி பத்து நிமிடம் கழித்து பள்ளி வாயிலுக்கு எதிரில் இருந்த தாத்தா கடையில் சடன் பிரேக் இட்டு நின்றது இரு பல்சர் பைக்... 


"டேய்... பாவி ... உங்களால தா டா ஃபர்ஸ்ட் டே வே லேட்..... போங்க டா... ", என ஒருவனை திட்டி கொண்டே மற்றொருவன் வண்டியில் இருந்து இறங்கியவள் வேகவேகமாக ரோட் கிராஸ் சேய்து பள்ளி வாயிலை அடைய... அந்த வாயிலோ வழிபாட்டு கூட்டம் துவங்கும் ஐந்து நிமிடம் முன்பே உள்புறமாக சங்கிலியால் பூட்டபட்டிருந்தது..... 


பூட்டு தொங்கும் பிரம்மாண்ட நீலவண்ண வாயில்அவளை வரவேர்க்க... பாவமாக முகத்தை வைத்து கொண்டவள்... தன்னுடன் வந்த இரு தோழர்களையும், தன்னிடம் திட்டு வாங்கியவன் வண்டியில், "நாம இப்படியே திரும்பிப் போய்விடலாமா?", என திட்டம் போட்டுக்கொண்டிருந்த மற்றொருத்தியையும் நோக்கினாள்.


இதை பார்த்தது பல்லை காட்டிக்கொண்டே வண்டியில் இருந்து சாவியை எடுத்தவர்கள், "தாத்தா... வண்டி பத்தரம்...", என கடைகார தாத்தாவிடம் கூறிவிட்டு, "மச்சான்... இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே... நெராய நியூ அட்மிஷன் வந்திருக்கும்.... சோ எகிறி குதச்சுனாலும் இன்னைக்கு உள்ள போறோம்.... ", என மற்றொருவனிடம் கூறிவிட்டு, தன்னையே நம்பி இந்த பள்ளியில் சேர்ந்திருக்கும் தன் தங்கை போன்றவளையும் இழுத்து கொண்டு வாயிலை அடந்தான் அவன்...

பன்னிரெண்டாம் வகுப்பு உயிரி-கணிதம் பயிலும் அர்ஜுன்...  

அவன் இழுத்த இழுப்புக்கு வேறு வழி இல்லாமல் அவனின் தங்கையான தீரா தீ செல்ல... ஏற்கனவே வாயிலில் நின்றிருந்த தன் உடன்பிறவா சகோதரி மயூரியுடன் சேர்ந்து நின்றான் ரக்ஷவன்.


அந்த கேட்டில் போட்டிருந்த சங்கிலியை, கேட் கம்பிகள் வழியே கையை விட்டு கழற்றிய அர்ஜுன் வாயிலை திறந்து 

மற்றவர்களுடன் திருட்டு தனமாக உள்ளே நுழைந்து, மீண்டும் அந்த சங்கிலியை பழையபடிக்கே போட்டு விட்டு, "அவ்ளோ தா.... இதுக்கு இவளோ சீனா.....", என கூறி கொண்டே பின்னால் திரும்ப... திரும்பியவன் முன் ஒரு முறைப்புடன், பிடித்து வைத்த பிள்ளையார் பொல ஒரு உடல் வாகுடன் விரைப்பாக வந்து நின்றார் அப்பள்ளியின் பீட்டி சார் பாஸ்கரன்.


              *********


கிட்டத்தட்ட அரை மணி நேரங்கள் கழித்து காலைவணக்க வழிபாடுகள் முடிந்துதும், மாணவிகள் அவரவர் வகுப்பறையை நோக்கி நகர்ந்து சென்றார்கள்...


10th - A வகுப்புக்கு செல்லும் வரிசையில், சபினா, ஸ்ரீ, ஹரிணி, வரிசையாக நிற்க..., நீல நிற மஸ்தானி சுடிதார் அணிந்து, இன்றைய பிறந்தநாள் பெண்ணாக அந்த வரிசையில் தன்னந்தனியாக தெரிந்தாள் தாரா என்கிற ரதி தாரா.., 


10th - B செல்லும் வரிசையில் சுஜினா, மதி, ஜீனத் மூவரும்..., அவர்கள் வரிசையில் செல்வதை கூட கவனிக்காமல், தங்களுக்கு பின்னால் கரும்பச்சை நிற மேக்ஸியில் அழகுக்கே அழகு சேர்க்கும் விதமாக நின்றிருந்த மற்றொரு பிறந்தநாள் பெண்ணான பில்கி- என்கிற ஃபாத்திமா பில்கீஸ் க்கு, பிறந்தநாள் வாழ்த்து கூற எவ்விக்கொண்டு கை கொடுக்க..... இவர்கள் செய்யும் இந்த சேட்டையை வகுப்பு வாசலில் நின்று கவனித்து கொண்டிருந்த, அவர்களின் வகுப்பு ஆசிரியை நந்தினி மிஸ்.


இவர்களை கண்டவர் திடிரென கடைசியாக வந்து கொண்டிருந்த இந்த நால்வரை, அப்படியே நிறுத்துமாறு , தன் கையை ஷேக் ஹேன்ட் குடுப்பது போல் அவர்களை நோக்கி நீட்ட..., அவர்கள் நால்வரில் முதலாவதாக நின்றிருந்த மதி, அவரின் அந்த திடீர் பிரவேசத்தில் அதிர்ந்து போய், அவரின் கையையும் முகத்தையும் மாற்றி மாற்றி பர்த்தவாரே திருதிருவேன முழித்துக் கொண்டிருந்தாள்... 


அவளை பார்த்த நந்தினி மிஸ் , "எங்களுக்கும் கை குடுக்குறது...", என்று கூறியவாறே ஷேக் ஹேன்ட்க்குக் காத்திருக்க... இவளோ , "எதாவது தப்பு பண்ணிட்டோமோ? ", என மனதிற்குள் நினைத்துகொண்டு, தயங்கியவரே அவரின் கையை பிடித்து குலுக்கினாள்... அவளுக்கு கை கொடுத்த நந்தினி மிஸ், பின் பில்கியை நோக்கி கையை நீட்ட, "நானுமா...? ", என்று மைண்ட் வாய்ஸ் வாசித்துகொண்டே அவளும் கை குடுத்தாள்... அடுத்து சுஜிக்கும் ஜீனத்திர்க்கும் கை கொடுத்து விட்டு, அவர்களை உள்ளே அனுப்பிய நந்தினி மிஸ், அவரும் உள்ளே சென்று ஃபர்ஸ்ட் பெஞ்ச் தொடங்கி லாஸ்ட் பெஞ்ச் வரை உள்ள அனைவருக்கும் ஷேக் ஹேன்ட் கொடுக்க..., இதை பார்த்த பில்கி, "இன்னிக்கி எனக்கு தானே எல்லாரும் விஷ் பண்ணனும்.... ஏன் மிஸ் எல்லாருக்கும் கை குடுக்குராங்க...????, ஒரு வேள எல்லா விஷ்ஷயும் மொத்தமா வாங்கி என்கிட்ட குடுக்க போறாங்களோ? ", என தலையை சொரிந்து கொண்டே தனது இருப்பிடமான லாஸ்ட் பெஞ்ச்சில், முதல் இடத்தில் அமர... மற்ற மாணவிகளும் அதே போலவே நந்தினி மிஸ்ஸின் செய்கையில் குழம்பி தான் போனார்கள்...


நந்தினி மிஸ்ஸை பார்த்தவாறே சுஜி முதல் பெஞ்சில் முதலாவதாகவும்... மதி மற்றும் ஜீனத் மூன்றாவது பெஞ்சில் முதல் இரு இடங்களிலும் அமர்ந்தார்கள்..., 


இவர்கள் நான்கு பேர் சேர்ந்து அமர்ந்திருந்த போது செய்த அளவில்லாத அலப்பறைகளின் விளைவுக்கு கிடைத்த தண்டனையாக, இப்படி தனி தனியாக இடம் ஒதுக்க பட்டது.... மதியும் ஜீனத்தும் மற்ற நேரத்தில் அராத்துகளாய் இருப்பினும், ஆசிரியர்களின் முன் அப்பாவியாக நடித்து விடுவதால், அவர்களின் சேர்க்கைக்கு இதுவரை எந்த வித பங்கமும் வரவில்லை..., சபினா மற்றும் சுஜினாவின் தாய், முதல் நாள் இவர்களை இங்கு சேர்க்கும் போதே, "இதுங்க ரெண்டையும் ஒரே கிளாஸ்ல விடாதீங்க..., ஏதாவது பிரச்சன வந்தா நா வர மாட்டேன் ", என ஸ்டிரிக்ட்டாக கூறி விட... அவரின் வார்த்தைகளில் அதிர்ந்து போன ஆசிரியர்கள், இருவரையும் வேறு வேறு வகுப்பில் விட்டு விட்டார்கள்..., இடைவேளையில் மட்டுமே இவர்கள் தங்கள் பட்டாளத்துடன் சேர்ந்து, ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வார்கள்.


               ****

அனைவருக்கும் கை கொடுக்கும் பணியை முடித்துவிட்டு, தனது இருக்கையில் அமர்ந்த நந்தினி மிஸ், தனது இங்கிலீஷ் புத்தகத்தை எடுத்து பக்கங்களை புரட்ட..., அதை கண்டு சீறிக்கொண்டு எழுந்த ஜீனத் , "மிஸ்... பில்கிக்கு பர்த்டே சாங்? ", என்று கேள்வியாய் அவரை பார்த்தாள்..., 


"ஏன்... சாக்லேட் சாப்புடாம கொஞ்ச நேரம் பொறுக்க முடியலயா? ", என்று அவளைப் பார்த்து முறைக்க..., "ஆஹா கண்டுபிடிச்சுட்டாங்க...", என்று நினைத்தவாறு, "தாராளமா வெய்ட் பண்றேன் மிஸ்... நீங்க கிளாஸ் ஸ்டார்ட் பண்ணுங்க..", என்று கூறிக்கொண்டே தலையை கவிழ்ந்தபடியே அமர்ந்து தனது புத்தகத்தை புரட்ட தொடங்கினாள்.


இதைப்பார்த்த பில்கியோ... கையை வாயில் வைத்து சத்தம் வராமல் சிரித்துகொண்டு இருக்க, அதை கவனித்த மதி, ஜீனத்திடம் அதை போட்டு கொடுத்தாள்..., அப்படியே பில்கியை நோக்கி திரும்பிய ஜீனத், தனக்கு ஒரு பெஞ்ச் தள்ளி அமர்ந்திருந்தவளை பார்த்து, "உனக்காக தானே டி கேட்டேன்...", என்று ஹஸ்கி வாய்சில் அப்பாவியாக கேட்க..., "நீ யாருக்காக கேட்டனு எங்களுக்கு தெரியாது பாரு",என அதே ஹஸ்கி வாய்சில் பதிலளித்தாள் பில்கி..., 


இவர்களின் ஹஸ்கி வாய்ஸ் கூட மிஸ்சுக்கு எப்படியோ கேட்டு விட...., "சைலன்ஸ்....", என கத்தியவரின் குரலில்... அந்த வகுப்பில் ஒரு மயான அமைதி நிலவியாது....


பின் அட்டெண்டன்ஸ் போட்டு விட்டு, தனது பாடத்தை தொடர்ந்தார்...., சாக்லேட்காக ஆவலாய் காத்திருந்த மாணவிகள்..., அது கிடைக்காமல் போன கவலையில் கவனம் சாக்லேடில் இருந்தாலும், விதியென பாடத்தை கவனிக்கத் தொடங்கினார்கள்..


10th - A...


வகுப்பில் சற்று தாமதமாகவே நுழைந்தார் அவர்களின் வகுப்பாசிரியர் கௌசல்யா..., அன்பானவர், அமைதியானவர், வாழ்க்கை தத்துவங்களை அழகாய் எடுத்துரைப்பவர்...


அவரை கண்டதும், இதுவரை இருந்த சலசலப்பும், சிறுசிறு வாக்குவாதங்களும் தடைப்பட... ஒருசேர எழுந்த மாணவிகள், கோரஸாக, " குட்ட்ட் மாஆஆஆர்னிஈஈஈங் மிஸ்", என்று வழக்கமான வரவேற்பை அவர்களுக்கு அளித்தார்கள்..., அவரோ, இந்த வணக்கத்தை கூறி முடித்ததும், "என்ன டி பாடி முடிச்சிட்டீங்களா? " , என்று கேட்க..., ஃபர்ஸ்ட் பெஞ்சில் இருந்து எழுந்த சபீனா, "தாராவுக்கு பர்த்டே சாங் தானே மிஸ்....?, இனிமே தான் பாடணும்", என்று சீரியசாக கூறினாள்.


அதைப் பார்த்து சிரித்த ஆசிரியை கௌசல்யா, "அது இல்லடி.... இப்போ பாடுநீங்களே குட் மார்னிங் சாங்.... அது முடிஞ்சதா..?, என கேட்க..., "ஓ.... அதுவா மிஸ்..., முடிஞ்சது... முடிஞ்சது...", என கூறிவிட்டு சிரித்தபடியே அமர்ந்தாள். பின் தாராவிர்க்கு பிறந்தநாள் பாடல் பாடப்பட்டது.


நீண்ட நீண்ட காலம், 

நீ நீடு வாழ வேண்டும்...

வானம் தீண்டும் தூரம் 

நீ வளர்ந்து வாழ வேண்டும்

அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பணிவு வேண்டும்

சக்கரை தமிழ் அள்ளி, 

தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


என அழகாய் தங்களின் வாழ்த்துகளை கூறி முடித்தார்கள் அந்த வகுப்பின் மாணவ மாணவிகள்.... மற்ற வகுப்புகளில் ஆங்கிலத்திலேயே ஹேப்பி பர்த்டே சாங் பாடபட்ட நிலையில், இங்கு நம் சபி செய்த கலவரத்தால், இந்தத் தமிழ் பாட்டு நிலைத்து போனது.


பின் அனைவருக்கும் சாக்லேட் பகிர்ந்தளிக்க பட்டதும்..., பாடங்கள் தொடங்கியது...


            ********


12th A1... (உயிரி-கணிதவியல், Bio-maths)

     தாமதமாக வந்ததற்கு பாஸ்கரன் சாரிடம் சிறப்பு கவனிப்பு பெற்றுவிட்டு முதல் பாடவேலை துவங்கி அரைமணி நேரம் கழித்து தான் வகுப்பினுள் நுழைந்தார்கள் அர்ஜுன் மற்றும் தீரா...


நல்ல வேளையாக... பத்தாம் வகுப்பில் நடந்ததை போல் முதல் நாளிலேயே பாடங்களை துவங்கி மாணவர்களின் மனநிலையை தாறுமாறாக மாற்ற இவர்களின் ஆரிரியர்களுக்கு மனம் இல்லை போலும்.. இன்னும் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கை நடைபெறுவதால் ஒரு வாரம் "ஜெனரல் டாக்" என கூறி வழக்கமான தகவல்களை மட்டுமே அளிக்க முடிவு செய்துவிட்டார்கள்.... அதனால் ஆரஅமர இரண்டாவது இருக்கையை அடைந்த அர்ஜுன் தீராவை மறு பக்கம் முதல் இருக்கையில் அவளின் புதுதோழி லாவண்யாவிடம் விட்டுவிட்டு தன் தோழன் நவீனின் தோளில் தலை சாய..., "என்னடா மச்சி... மொத நாளே ரவுண்ட்ஸ்சா?.. என நக்கலாக வினவினான் நவீன்.


"அட போடா... அந்த மனுஷன் மொத நாளே இப்டி பண்ணுவாருன்னு நா எதிர்பாக்களியே...", என்று கூறி தன் தண்டனையை எண்ணி அலுத்து கொண்டான்..... மூன்று மாடி கட்டிடத்தில் ஒரு பக்க படியில் மூன்றாவது மாடிக்கு ஏறி மறு பக்கமாக கீழே இறங்கி நால்வரையும் பத்து முறை வட்டமடிக்க விட்டுவிட்டார் பாஸ்கரன் சார்.


             ********


மாடியேரி மாடியேறி சோர்ந்து போன ரக்ஷவன் மற்றும் மயூரி பன்னிரெண்டாம் வகுப்பு வரலாறு வகுப்பினுள் நுழைய..., "என்னடா... ஃபர்ஸ்ட் டே ரொம்ப சீக்கிரமா வந்திருக்கீங்க...", என சிரித்த முகத்துடன் இருவரையும் வரவேர்த்தார் அவர்களின் வகுப்பாசிரியர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தன்.


"எல்லாம் இந்த மயூவால வந்தது சார்... வேகமாக வண்டிய ஓட்ட விடல... ", என அவரிடம் குறை கூறிய ரக்ஷவன், மயூவை தலையில் தட்ட..., "போ டா லூசு... நீ இப்போ வந்ததே 110... இதுக்கும் மேல உனக்கு வேகம் கேக்குதோ...", என அவனை திட்டியபடியே தன் இடத்திற்க்கு செல்ல...


"ரக்ஷவ்...... லைசன்ஸ் இல்லாம ஸ்டாப் கூட வண்டி கொண்டு வர்றது இல்ல... ஆனா நீ அலோட் இல்லாமலே 110-ல ஸ்கூல் வந்திருக்க...", என கூறி ஆசிரியர் முறைத்ததற்கு பல்லை காட்டி விட்டு தன்னிடத்தில் அமர்ந்தான் ரக்ஷவன்.


இன்று இவனை மையமாக வைத்தே, வாழ்க்கை பாடமான சாலை விபத்து மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பொதுவான பாடத்தை நடத்தி முடித்தார் சுகந்தன்.


            *********

6th B...


முதல் வகுப்பு முடிந்ததும், எப்படா இந்த மிஸ் கிலம்புவாங்க... என்று நந்தினி மிஸ் கிளம்புவதற்கு காத்திருந்த மாணவிகள், அவர் கிளம்பியதும் மொத்தமாக பில்கியை சூழ்ந்து கொள்ள... அனைவருக்கும் தன் பிறந்த நாள் இனிப்பை வழங்கினாள் அவள்.. எல்லாரும் இரண்டு மூன்று மிட்டாய்களை எடுத்துகொண்டு அவரவர் இடத்தில் அமர்ந்து அதை ருசி பார்த்தார்கள்..., பின் பில்கி, மதிக்கும் ஜீனத்திற்கும் சாக்லேட் கவரை நீட்ட.. அவர்களோ அனைவருக்கும் குடுத்தபின்பு வாங்கி கொள்வதாக கூறி ஒரு கள்ள சிரிப்பு சிரித்தார்கள்...,


சரி என அவளும் அனைவருக்கும் குடுத்துவிட்டு, மீண்டும் அவர்களிடம் கவரை நீட்ட.... பாதி காலியாகி இருந்த அந்த மிட்டாய் கவரை அப்படியே பிடுங்கி தங்கள் டெஸ்க் டிராயரில் வைத்துவிட்டு..., "மதியம் ஆளுக்கு ஒரு ஓரியோ டைரி மில்க் வாங்கி தந்துரு", என கட்டளை இட..., இதை முன்பே எதிர் பார்த்தது போல் , "வாங்கி தந்து தொலைக்குறேன் ", என்று அவள் கூறுவதற்கும், அடுத்த வகுப்புக்கு ஆசிரியை நுழைவதற்கு சரியாக இருந்தது... 


அவருக்கும் வழக்கமான வரவேர்ப்பு வழங்க பட.., அதை ஏற்று கொண்டவர் தன் பாடங்களை தொடங்கினார்.


அவர், மாணவ மாணவிகளை பார்த்து பாடம் நடத்திய படியே... தலையை தாழ்த்தி புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கும் ஒவ்வொரு முறையும், டெஸ்கில் இருந்து ஒவ்வொரு சாக்லேட் ஆக மதி மற்றும் ஜீனத்தின் வாய்க்குள் தாவிக்கொண்டு இருந்தது...


அவர்களுக்கு அருகில் இருந்தவர்களும் , "எங்களுக்கும் குடுக்குறியா இல்ல மிஸ்ட்ட போட்டு குடுக்கவா?" , என மிரட்டி மிரட்டியே அவ்வப்பொழுது ஒன்றிரண்டு சாக்லேட்களை உள்ளே தள்ளி கொண்டிருந்தார்கள்.. இப்படியே அந்த வகுப்பும் முடிந்தது..., ப்ரேக் துவங்கியது..... 


இப்பொழுது, அவர்களின் வழக்கமான சந்திப்பு நிகழும் இடத்திற்கு 10th A நட்புகளை தேடி B கிளாஸ் பட்டாளம் கிளம்பியது...

    


😜😈GALAATTAS ON THE WAY 😈🤪



Rate this content
Log in