Madhu Vanthi

Children Stories Drama Classics

4  

Madhu Vanthi

Children Stories Drama Classics

2K கிட்ஸ் - 7

2K கிட்ஸ் - 7

5 mins
302


தன்னை நோக்கி வேக நடையில் வரும் விக்ரமை கண்ட அர்ஜுன், "தீரு மா.... நீ எல்லாரையும் பத்ரமா கூட்டிட்டு வந்துரு..... நா அப்டிக்கா போய் நிக்கிறேன்.....", என்று விட்டு ஓட கிளம்பியவன், விக்ரமின் கனீர் குரலில் அப்படியே ஒரு கலவரத்துடன் அவனை நோக்கி திரும்பினான்.


"அர்ஜுன்..... ஒரு நிமிஷம் நில்லு... ", என்றவாரு அவ்விடம் வந்த விக்ரம்... அவனது மனம் படபடப்பதை அறிந்து கொண்டு அப்படியே ஒரு புன்னகையுடன் தீராவை நோக்கி திரும்பினான்.


"ஹாய் மா தங்கச்சி..... நா கீர்த்தியோட அண்ணன்... அவள தெரியும் தானே?", என அவள் முன் வந்து நிற்க... அவளோ மைண்ட் வாய்ஸில், "டெரர்ராலாம் இல்லையே.... அப்ரம் ஏன் இந்த அஜ்ஜு பையன் பம்முறான்....", என எண்ணியவாறு, "ஹான்... நல்லாவே தெரியும் அண்ணா... நைஸ் டூ மீட் யூ...", என பதிலுக்கு புன்னகைத்தாள்.


அதே நேரம் சரியாக கீர்த்தியுடன் ரக்ஷவ் மயூ வந்து விட..., அவர்களிடம் ஏற்கனவே பேசி விட்டதால் இப்போது மீண்டும் திராவிடம் வார்த்தையை தொடர்ந்தான் விக்ரம்...

"எனக்கு வெளி ஊர்ல சின்ன வர்க் இருக்கு.... கீர்த்திக்கு லீவ் போட முடியாதுன்னு சொல்றா.... சோ ஒரு ஒன் வீக் உங்க வீட்டுல தா தங்க போறா.... உங்க வீட்லயும் இப்போ தா பேசுனேன்.... சோ பத்ரமா பாத்துக்கோங்க...", என அவன் கூற..... அதில் தலையை சொரிந்து கொண்டிருந்தவள்.. குழப்பத்தில் நாலாபக்கமும் தலையை ஆட்டினாள்.


அவள் தலையை விதவிதமாக ஆடுவதை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அர்ஜுன் பக்கம் திரும்பி அவன் தோளில் கை போட... திருதிருவென விழித்து கொண்டிருந்தவன் திடுக்கிட்டு நிமிர்ந்து நோக்கினான்.


எதோ ஒரு யோசனைக்கு பின் அவனை பார்த்த விக்ரம், "ஐபிஎஸ் முகில் ஸார் உங்க ரிலேடிவ் தானே....??", என கண்களை சுருக்கி கேட்க..., "இப்போ எதுக்கு அத கேட்குறான் தெரிஞ்சவரா இருக்குமோ....", என எண்ண ஓட்டத்தை ஓடவிட்டு கொண்டே, "ஆமா... என் மாமா தா அவரு... ", என ஒரு மார்க்கமாக பார்த்தபடி அர்ஜுன் பதிலளிக்க..., "ஹ்ம்ம்... இப்போ எனக்கு ஒரு கேஸ் விஷயமா அவர் கூட தா ஒன் வீக் வெளியூர் போக வேண்டி இருக்கு.... என்னோட ஃபர்ஸ்ட் கேஸ்.... அதா கீர்த்திக்கு லீவ் லெட்டர் குடுத்துட்டு அவளயும் கூட கூட்டிட்டு போகலாம்னு நெனச்சேன்... அப்போ தா முகில் ஸார் இங்க அவர் ஃபேமிலி இருக்குறதாவும்... கீர்த்தி லீவ் போட்டா அவ படிப்ப கெடும்ன்னு சொல்லி இங்க தங்க வச்சுக்க சொன்னாரு....... இவளும் லீவ் போட மாட்டேன்னு சொல்லுறா.... உங்களையும் நல்லாவே தெரியும்ன்னு சொல்லுறா.... சோ தங்க வைக்கலாம்ன்னு நெனச்சேன்..... அப்டி அவ உங்க வீட்டுல தங்குனா பத்ரமா பாத்துப்ப தானே.....??", என சற்று கறாராக கேட்க.... அவனோ பிடித்து வைத்த பில்லையார் போல இருந்தான்....


"அதெல்லாம் பாத்துப்பாங்க அண்ணா... நீ மொதல்ல கெளம்பு... டைம் ஆகுது பாரு...", என்றவாறே விக்ரம் கையில் இருந்த லீவ் லெட்டரை பிடுங்கி கொண்ட கீர்த்தி அவனை துரத்தாத குறையாக தள்ளி விட... அவனோ மீண்டும் அர்ஜுனை உலுக்கி....

"தங்கச்சிய பத்ரமா பாத்துக்கோ....", என விக்ரம் அழுத்தந் திருத்தமாக கூற... அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் தலையை மட்டும் சரியென ஆட்டி வைத்தான்.


அதிர்ச்சி இருக்காதா பின்ன... அன்று அப்படி கத்தியவன் இன்று சகஜமாக பேசினால் யாருக்கு தான் அதிர்ச்சி குழப்பம் இருக்காது... 


அவன் அதிர்ச்சியை யூகித்த விக்ரம் அவனிடன் வந்து, "ஸாரி அர்ஜுன்... அன்னைக்கு டான்ஸ் அக்காடமில நடந்ததுக்கு....", என வழக்கம்போல் கனீரென கூற...., "ஸாரி கூட இப்டி மேரட்டுற மாறி தா கேப்பியோ?", என்ற ரேஞ்சுக்கு அவனை நிமிர்ந்து பார்த்தான் அர்ஜுன்..., "அன்னைக்கு நாலு பசங்க கீர்த்திய வம்பிழுத்ததா சொன்னா... அவ சொல்லிட்டு அகாடமிக்குள்ள போன அதே சமயம் நீயும் அங்க ரெண்டு பொன்னுங்கட்ட பேசிட்டு இருந்த.... ஆனா அத பாக்க ஏதோ பிரச்சன பன்னுற மாறி தா இருந்துச்சு.... அதா லைட்டா அடிச்சுட்டேன்... ஸாரி... அப்பறமா தா அந்த பொண்ணுங்க கீர்த்தி கிட்ட இத பத்தி சொல்லி அவ என்கிட்ட சொல்லி.... அப்ரம் தா உன் மேல தப்பே இல்லன்னு தெரிஞ்சது.... அப்பரமா உன்ன மீட் பண்ண முடியல.... எதுவும் மனசுல வச்சுக்காத,..", என போலீஸ் யூனிபார்மில் இருந்தாலும் கம்பீரம் குறையாமல் முழு மனதில் மன்னிப்பு வேண்டினான்.


அதை இவ்வளவு நேரம் கேட்டு கொண்டிருந்தவன், "என்ன பாத்தா பொண்ணுங்க கிட்ட வம்பு பன்னுரவன் மாரியா தெரியுது... ", என அப்பாவி போல கேட்க... அவன் காலை வாரி விடுவது போலவே, "பின்ன இல்லையா மச்சான்.... கீர்த்திய கூட வம்பிலுத்தியே.... ", என கூறி ரக்ஷவ் அவனை பார்த்து கண்ணாடிக்க...., அவன் ரக்ஷவை முறைப்பதற்கும், விக்ரம் அவனை கேள்வியாய் பார்ப்பதற்கும் சரியாக இருந்தது... 


அண்ணா... அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு.... நீ மொதல்ல கெளம்பி போ.... நா வீட்டுக்கு போக ரொம்ப ஈகார இருக்கேன்.. கெளம்பு கெளம்பு...", என விக்ரமை வாயில் வரை தள்ளி கொண்டு சென்று விட்டாள்... மற்றவர்களும் அவர்களுடனே வாயிலுக்கு வந்து விட... அனைவரிடமும் புன்னகையுடன் விடை பெற்றவன் அர்ஜுனை நோக்கி திரும்பி "தங்கச்சி பத்திரம்..", என மீண்டும் கூற......"ஹையோ.., அண்ணா.....", என தலையை பிடித்து கொண்டவன், "உங்க தங்கச்சி இனி ஒரு வாரம் என் தங்கச்சி..... நான் பார்த்துக்குறேன்.... போதுமா... இத தானே கேக்க நெனச்சீங்க....", என தலையில் அடித்துக் கொள்ளாமல் கேட்க ...., அவன் செயலில் வாய்விட்டு சிரித்த விக்ரம், "ஹ்ம்ம்.... குட்... பாத்துக்கோ....", என்றுவிட்டு தன் ஜீப்பில் ஏறி அமர்ந்தான்....


அந்தச் சாலையை கடந்து அப்புறமாக செல்லும்வரை அண்ணனுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள் கீர்த்தி.... விக்ரம் சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்ட தீரா அர்ஜூனின் சட்டை காலரை பிடித்து இழுத்து, "என்ன நீ.... கீர்த்தியை தங்கச்சின்னு சொல்லுர.... அவ உனக்கு ப்ரெண்ட் தானே.... அப்போ நா யாராம்", என மூக்கு விடைக்க அர்ஜுனை முறைக்க, "ஏன்... பிரண்ட் தங்கச்சியா இருக்க கூடாதா என்ன?...", என திராவின் முன்னே வந்து நின்றாள் கீர்த்தி.


ஆனால் தீரா அர்ஜுனை விடுவதாக தெரியவில்லை... இன்னும் முறைத்து கொண்டு தான் இருந்தாள்..., "அச்சோ தீருமா... அவ ஒரு வாரத்துக்கு தா தங்கச்சி... அப்பறம் பழையபடி ப்ரெண்ட் ஆகிருவா... அவ டெம்பரரி.. நீ தா எப்பவுமே மை ஸ்வீட் தங்கச்சி என அவளை சமாதானம் செய்ய.... இருந்தும் முறைத்து கொண்டு தான் இருந்தாள்.


"சரி சரி.... இப்போ எப்டி வீட்டுக்கு போக.... ரெண்டு வண்டி தானே இருக்கு??....", என தீராவே பேச்சை திசை திருப்ப... அப்போது தான் இப்படி ஒரு சிக்கல் இருப்பது அனைவருக்கும் நினைவிற்கு வந்தது... என்ன செய்யலாம் என யோசிக்கும் போதே நம் பத்தாம் வகுப்பு பட்டாளம் மொத்தமாக வர...., அதை கண்டு மயூவின் மூளையில் மணியடித்தது... 


"ஹே... நாங்க சபி சுஜி கூட நடந்து வரோம் டா..... நீங்க ரெண்டு பேரும் பேக்க மட்டும் எடுத்துட்டு கெலம்புங்க...", என கூற.... வீடு இரண்டு தெரு தள்ளி தானே இருக்கிறது..." என அவர்களும் சரி என கூறி பேக்கை மட்டும் எடுத்து கொண்டு கிளம்பினார்கள்... மயூ தீரா கீர்த்தி மூவரும் பத்தாம் வகுப்பு பட்டாளதுடன் இணைந்து கொண்டார்கள்... மதி மற்றும் ஜீனத் ஹாஸ்டலுக்கு செல்லும் வழியில் சென்று விட.... ஸ்ரீ மற்றும் தாரா வேன்காக காத்திருந்தார்கள்...


மற்ற நால்வரும் ஒரே பக்கம் தான் செல்ல வேண்டும்.... அவர்களுடனே தீரா மயூ மற்றும் கீர்த்தி இணைந்து கொள்ள.... நால்வராக செல்லும்போது பாதி சாலையை அடைத்து கொள்ளும் இவர்கள் இன்று ஏழு பேராக செல்வதால் முழு சாலையாயும் அடைத்து விட்டார்கள்... ஒருவர் பின்னால் ஒருவர் செல்லும் பழக்கம் இல்லவே இல்லை....

அத்துடன் முக்கியமாக வேகமாக நடக்கும் பழக்கம் அறவே கிடையாது நம் பட்டாலத்திர்க்கு.... 


ஆமையை விட மோசமான வேகத்தில் நடந்து.. பத்து நிமிடத்தில் அடைய வேண்டிய பக்கத்து தெருவை... வெற்றிகரமாக அரை மணி நேர அரட்டை பயணத்தில் அடைந்து விட்டார்கள்... 


அர்ஜூனின் குடும்பத்தை முழுவதுமாக காண கீர்த்தி பெரும் ஆர்வத்தில் இருந்தாள்.... அவன் குடும்பத்தைப் பற்றி கூறியிருக்கும் வார்த்தைகள் அப்படி..... அன்று ஒரு நாள் வந்த போது சரியாக அறிமுகம் கூட ஆகவில்லை... அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இந்த ஒரு வாரம் நன்றாக பேச வேண்டும் என நினைத்துக்கொண்டே அவள் வீட்டின் உள்ளே நுழைய..... புன்னகை முகத்துடன் வந்து அவளை வரவேற்றார் சங்கரி.


"வாம்மா.... உள்ள வா... நம்ம வீடு தா....", என அழைக்க... புன்னகைத்தபடி அவளும் உள்ளே வந்தாள்..... உன் அண்ணன் எல்லாம் சொன்னான் மா.... முகில் எனக்கு அண்ணன் தா.... சோ உன் அண்ணனுக்கு எந்த பயமும் வேண்டாம்...", என புன்னகை மாறாமலேயே அவர் கூற.... சிரித்துக்கொண்டே தலையாட்டினாள் கீர்த்தி.


ஆமா... உன் வீடு எங்க மா....?....


MSK காலணி ஆன்டி....


அவ்வளவு தூரத்துல இருந்தா வர.... சரி சரி.... இனி இதுவும் உன் வீடு தா... எப்ப வேன்னாலும் வரலாம்....", என கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு உள்ளே அழைத்து சென்றார்.


அர்ஜுனும் ரக்ஷவும் முன்பே வீட்டிற்கு வந்து விட்டதால், அவர்களிடம் கீர்த்தியை பற்றி கேட்டார் சங்கரி.

இவர்கள் வரும் முன்பே அவருக்கு தகவல் வந்துவிட்டது... அர்ஜுன் அவளை பற்றியும் அவள் இருக்கும் நிலையைப் பற்றியும் முழுமையாக கூறிவிட... தாயுள்ளம் அவளை ஆறுதலாக அரவனைத்து கொண்டது...


விக்ரம் பள்ளியில் வைத்தே சில இரண்டு நாளுக்கான ஆடைகளை கீர்த்திக்கு எடுத்து வந்திருக்க... ஞாயிறு அன்று ஒரு முறை வீட்டிற்க்கு சென்று மேலும் தேவையானதை எடுத்து கொள்ள கூறியிருந்தான்.

ஏற்கனவே மயூவின் அறையில் மித்ராவும் இருப்பதால் கீர்த்தி தீராவின் அறையில் தங்கி கொண்டாள்.


            ******


எப்பொழுதும் நான்கு மணிக்கு சரியாக வீட்டுக்கு வந்து விடும் ஹர்ஷன் மற்றும் மித்ரா நான்கரை மணி ஆகியும் இன்னும் வீட்டிற்க்கு வரவில்லை.... 


அதை இப்போதே கவனித்த அர்ஜுன்... "ம்மா.... அண்ணனும் மித்ராவும் எங்க...

இன்னும் வரலையா?...", என கீர்திக்கு இன்றோ கொடுக்கும் ஆர்வத்தில் அவன் கேட்க..., "தெரியல டா.... மூன்றைக்கு கால் பண்ணி வர கொஞ்சம் லேட் ஆகும்ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டான்... இன்னும் ஆள காணோம்... வந்துறுவாங்க...", என அசால்ட்டாக கூறிவிட்டு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்து கொண்டிருந்தார்.


அவர்களோ அங்கே ஒரு துணி கடையில் விதவிதமான புடவை குவியலுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டிருக்க... மித்ராவின் தோழிகள் ஐந்து பேர் ஆர்வமாக புடவை செலக்ஷன் நடத்தி கொண்டிருந்தார்கள்... ஆனால் மிதிராவின் முகம் மட்டும் ஏகாத்துக்கும் வாடி இருந்தது... 


அவளின் வாட்டமான முகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவளுக்கு பதிலாக புடவையை பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷன்.


😜😈GALAATTAS ON THE WAY 😈🤪



Rate this content
Log in