Participate in the 3rd Season of STORYMIRROR SCHOOLS WRITING COMPETITION - the BIGGEST Writing Competition in India for School Students & Teachers and win a 2N/3D holiday trip from Club Mahindra
Participate in the 3rd Season of STORYMIRROR SCHOOLS WRITING COMPETITION - the BIGGEST Writing Competition in India for School Students & Teachers and win a 2N/3D holiday trip from Club Mahindra

Madhu Vanthi

Children Stories Comedy Drama


4.7  

Madhu Vanthi

Children Stories Comedy Drama


2k KIDS - 3

2k KIDS - 3

8 mins 192 8 mins 192

காலை செங்கதிரோன் இப்பொழுதே சோம்பல் முறித்து கோண்டு மெல்ல தன் கண்களை திறந்து உலகத்தை எட்டி பார்க்க எழுந்து கொள்ள... குப்புற கௌந்து குறட்டை விட்டு கொண்டிருந்தான் அவன்...

"டேய் மச்சான்.... தினம் தினம் விடிஞ்சும் ரெண்டு மணி நேரம் தூங்ககுற அர்ஜுனே எழுந்து டான்ஸ் கிளாஸ் போய்ட்டான்.. உனக்கு என்ன எந்திரிக்க வலிக்குது... வா டா ஜாக்கிங் போவோம்... ஸ்கூல் போக வேண்டிய நானே கூப்புடுறேன்... வீட்டுல வெட்டியா தூங்குற உனக்கு என்ன டா... வா டா... எந்திரி... எந்திரி எந்திரி... கெட் அப்... கெட் அப்....", என அவனருகில் சம்மணமிட்டு அமர்ந்த ரக்ஷவன் அவனை போட்டு உலுக்க... அவனோ, பக்கத்து ரூமில் இருந்த தன் அத்தை மகளான, ரக்ஷவ் மயூரியின் அக்கா மித்ராதேவியிடம் விடிய விடிய ரகசியமாக ச்சேட்டிங் செய்த கலைப்பில், அரை தூக்கத்திலேயே அவனை துரத்தினான்.

"டேய்.... .... .... ரக்ஷவ்..... என் தம்பி டான்ஸ் கிளாஸ்க்கு டைம் ஆச்சுன்னு ஒரு குரல் குடுத்தா நடு ராத்திரி பன்னெண்டு மணின்னு கூட பாக்காம எந்திரிச்சு ஒக்காந்திருவான்......... .... 

லாக்டவுனால கிட்ட தட்ட ஒரு வருஷம் கழிச்சு இன்னைக்கு தா மருபடியும் போரான்... அதா சீக்கிரமா எழுந்துட்டான்... அதுக்காக என்ன எழுப்புவியா நீனு.... போடா... நா தூங்கனும்... எனக்கே கொஞ்ச நாள் தா ரெஸ்ட் கெடைக்கும்... அப்பரம் நானும் உன் அக்காவும் உங்களுக்கு முன்னாடியே எந்திருச்சு காலேஜ பாத்து போகனும்... அது வர கொஞ்ச நாள் என்ன விடென்டா...... ", என்று கலையமாட்டேன் என வீம்பு செய்யும் உறக்கத்திலேயே கண்ணை மூடி கொண்டு ரக்ஷவை உதைத்து தள்ளினான் அவன்... அர்ஜுனின் உடன்பிறப்பு ஹர்ஷவர்தனன்.

அவன் உதைத்ததில் கீழே விழுந்தவன், "டேய்ய்ய்ய்... ஹர்ஷா... மச்சான்ன்னு பாக்க மாட்டென்... எந்திரி டா... தனியா போக நல்லா இல்லடா... நீயும் கூட வா... ஜாக்கிங் போய்ட்டு வந்து மறுபடியும் தூங்கிக்கோ.... நாள் ஃபுல்லா தூங்கிக்கோ....", என கெஞ்சியும் பயனில்லை.

"அட போடா.... இப்போ ஜாக்கிங் போகளைனா ஒன்னும் ஆகிறாது... மூடிட்டு போய் தூங்கு டா.... காலங்காத்தால வந்து நொய்யு நோய்யுண்ணுட்டு.....", போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு தன் உறக்கத்தை தொடர்தான் அவன்.

"என்னது ஒன்னும் ஆகாதா.... அப்போ நா எப்டி என் ஃபிட்னஸ மெயின்டெய்ன் பண்ணுறதாம்...... ஃபிட்டா இருந்தா தானே நாலு பேரு என்னயவும் பாப்பாங்க.... நேத்து வேர ஒரு பொண்ணு என்ன அழகா இருக்கன்னு சொல்லிருச்சு..... வாஆஆஆடாஆஆஆ......", என அவனின் கலைப்பு புரியாமல் இவன் பொட்டு உலுக்கு உலுக்கென உலுக்கினாலும் ரக்ஷவின் மைண்ட் வாய்ஸில், "கண்ணு நல்லா இருக்குன்னு தானே சொல்லுச்சு அந்த பொண்ணு.... சரி விடு... யாரு வந்து கேக்க போறா", என சிந்தனையை எங்கோ வைத்திருந்தான்..

ஆனால் ஹர்ஷனோ கும்பகர்ணன்னுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் உறங்கி கொண்டிருந்தான்.

இவனிடம் போராடி போராடி தோற்று போன ரக்ஷவ், "அட போடா நீயும் உன் தூக்கமும்....", என அவனை பழிவாங்குவதற்கு ஒரு மிதியையும் மிதித்து விட்டு ஹாலில் சென்று சோஃபாவில் பொத்தென அமர்ந்தான்.

"ஹ்ம்ம்... இந்த ஹர்ஷா பய ரொம்ப மோசம்..... எரும இப்டி பொறுப்பு இல்லாம தூங்குது.... தனியா ஓடுனா ஊரே குறுகுறுன்னு பாக்குதுன்னு தானே இவன கூப்புடுறேன்.... ஹ்ம்ம்....", என அலுத்து கொண்டவன் இஞ்சி தின்ன குரங்கைப்போல் முகத்தை உர்ரென வைத்துகொண்டு அதே சோஃபாவில் சாய.... அவன் முக பாவனைகளை கண்டு அவனருகில் வந்து அமர்ந்தார் சங்கரி.

"ரக்ஷாவா.... என்னாச்சு டா.... ஏன் இப்டி ஒக்காந்துருக்க?.....", என்றாவாரு அவள் வந்து அமரும்போதே ரக்ஷவ் தன் தலையை சோஃபாவில் இருந்து அவளின் மடிக்கு ஷிஃப்ட் செய்து விட்டான்...

"அத்த..... உங்க ரெண்டு பசங்களும் ரொம்ப மோசம்.... அவன் என்னடான்னா விடியுறதுக்கு முன்னாடியே என்ன கழட்டி விட்டுட்டு ஆட போய்ட்டான்..... இவன் என்னடான்னா அவன் ஆட போய்ட்டான் நாம ஓடுவோம் வாடான்னா தூக்கத்த விடுவேனான்னு இருக்கான்..... போங்க அத்த... நா போறேன்..... என் ஊருக்கே போறேன்....", என கோபமாக கூறியபடி கையை கட்டி கொண்டு எழுந்தான்.

முதலில் இவனின் ரைமிங்கை கண்டு சிரித்த கொண்டிருந்தவர் இறுதியாக அவன் கூறியதை கேட்டு இப்பொழுது அவள் கோபமாகி விட்டாள்.....

"டேய் ரக்ஷவா..... இது தா டா இனி உன் ஊரு.... இது தா உன் வீடு..... வேற எங்கேயும் போக கூடாது.... அப்டி எங்கேயாவது போகனும்னா எங்கள மறந்துறு.... இது உனக்கு மட்டும் இல்ல.... உன் அக்கா தங்கச்சியவும் சேத்து மூனு பேருக்கும் தா....", என ஒரு முறைப்புடனே கூற... அப்போது தான் தன் வார்த்தையின் வீரியத்தை உணர்ந்தான் அவன்.

சில மாதங்கள் முன்பாக எதிர்பாரா விபத்தில் அன்னை தந்தையை இழந்த மித்ரா மயூரி ரக்ஷவிர்க்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்து பார்த்து இவ்வளவு நாளும் கவனித்தவளிடமே "நா என் வீட்டுக்கே போறேன்....", என்று இந்த வீட்டை உரிமையாக எடுத்து கொள்ளாமல் கூறினால் அவளுக்கு கோபம் வராதா என்ன?.....

அந்த நிகழ்வு தன்னை வாட்டினாலும் அத்தையை சமாதானம் செய்ய நினைத்து, "அச்சோ அத்த.... நா அப்டி சொல்ல வரால.... ஹ்ம்ம்.... இப்டிலாம் கோபபட்டா என் அத்தயோட பியூட்டி என்னத்துக்கு ஆவுறது.... நா எங்கேயும் போக மாட்டேன்... என் அத்த கூடவே தா இருப்பேன்..... மை செல்ல அத்த..... ஸ்மைல் ஸ்மைல்..... அப்பரம் உங்கள கோபமாக்குனதுக்கு மாமா என்ன அடிக்க வந்திருவாரு....", என்றபடி அவளை அணைத்து கொண்டவனை பார்த்து லேசாக சங்கரியின் இதழோரம் புன்னகை அரும்பியது.

"அத்த.... சாரி.... நா சும்மா சொன்னே.... நெஜமாவே உங்க யாரையும் விட்டுட்டு போக மாட்டேன்.... ", என பாவமாக கூறியவனை காண்கையில் வளர்ந்த குழந்தை போல தான் இருந்தது அவளுக்கு....

"ஹ்ம்ம்.... அப்போ சரி..... இப்பொ என்ன உனக்கு.... டெய்லி மார்னிங் எக்ஸசைஸ் பன்னனும் அவ்ளோ தானே... ?"

ம்ம்... ம்ம்... ம்ம்.....", என ஹை-ஸ்பீடில் தலையை ஆட்டினான் அவன். அதை கண்டு சிறித்தவள், "ஹாஹா.... சரி சரி... தல தனியா வந்துற போகுது... பைய ஆட்டு..... ஓகே மாமாட்ட சொல்லி எதாச்சும் ஜிம் பாக்க சொல்லுறேன்.... ஜிம்ல ஜாயின் பண்ணிக்கோ..", என அனுமதி வழங்க.., "அச்சோ அத்த.... அதெல்லாம் வேணாம்.... அது போரிங்... அங்கெல்லாம் போனா அவங்க சொல்லுற டைமிங்க்கு போகனும்... அதுக்கு அஜ்ஜு மாதிரி விடிஞ்சதும் அரக்க பரக்க கெலம்பனும்.... அது வேணாம்....", என முகத்தை ஏழு ஊருக்கு சுருக்கி கொண்டு கூறினான் அவன்.

"ம்ம்ம்ம்???.... அப்போ வேர என்ன பன்னலாம்.... அந்த எருமயும் எந்திரிக்க மாட்டான்... அப்படியே எதிர்க்க வச்சாலும் இன்னும் ரெண்டு வாரத்துக்கு தா அவன் ஃப்ரீ..... அதுகப்பரம் என்ன பன்ன.... ?", என சங்கரி அவனை நோக்க.... அவனும், "திங்க் அத்த திங்க்.....", என அவளையே நோக்கி கொண்டிருக்க.... வெளியே கேட்ட இரு வானரங்களின் சத்தம் இவர்களின் சிந்தனையை கலைத்தது...

"ஹலோஓஓஓஓஓஓ....... எக்ஸ்கியூஸ் மீஈஈஈஈஈஈ,.... யாருமே தெருவுல இல்லையா..... ஹலோஓஓஓ..... யாராவது வாங்களேஏஏஏஏஏஏன்......", என இரு குரல்கள் மாற்றி மாற்றி கேட்க... அதை கேட்ட சங்கரியும் ரக்ஷவும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் நோக்க.... மொட்டை மாடியில் இருந்து திடுதிடுவென கீழிறங்கி வந்தாள் தீரா.

வந்தவள் வந்த வேகத்தில் ரக்ஷவை நோக்கி, "காது கேக்கலையா டா பக்கி... அங்க ரெண்டு புள்ளைங்க தொண்ட தண்ணி வத்த கத்திட்டு இருக்கு... நீ இங்க என் மம்மி மடியில் தூங்கிட்டு இருக்க...", என கத்தி விட்டு வாயிலை நோக்கி ஓடியவள் வெளியில் சென்று, ஒரு சந்து போல இருக்கும் அந்த வீதியில் இருந்து ஒரு இறகுபந்துடன் (Feather ball or shuttlecock) உள்ளே வந்தாள்.... 

வெளியே கத்திய இரு குரல் வேறு யாரும் இல்லை... நம் எதிர்த்த வீட்டு இரட்டைவானரங்கள் சபி சுஜி தான்.

"ஒய் பாப்பா.... என்னதிது.... இந்த நேரத்துல யாரு கூட விளையாடுற நீ.... ஸ்கூலுக்கு கிளம்பல... ", என ரக்ஷவ் அவளிடம் மும்முரமாக கேள்விகளை அடுக்க... அவளோ சற்றும் யோசிக்காமல், "ம்க்கும்... அப்டியே கிளம்புன ஓடனேயே ஸர் போய் என்ன ஸ்கூல்ல விட்டுட்டு வந்துறுவீங்க பாரு.... போடா... எங்களுக்கு டைமிங்க்கு கெலம்ப தெரியும்... இப்பொ நானும் மயூவும் எதுத்த வீட்டு பொண்ணுங்களோட எக்சசைல இருக்கோம்.... டோண்ட் டிஸ்டப் அஸ்...", என்று விட்டு விருவிருவென மாடியேரினாள்.

"என்னது எக்ஸசைசா?...... அப்புடி என்னத்த பன்னுதுங்க இதுங்க.....", என தலையை சொரிந்தவன், "அத்த..... நீங்க உங்க வேலைய கண்டின்யூ பண்ணுங்க.... நா மாடிக்கு போய் இவங்க எல்லாரும் அப்புடி என்ன எக்ஸசைஸ் பண்ணுறாங்கன்னு பாக்குறேன்....", என சங்கரியிடம் கூறிகொண்டே தீராவை பின்தொடர்ந்து மாடியேரினான்.

மேலே மாடியேரி வந்தவன் இவர்கள் செய்யும் செயலை கண்டு சிரிக்கவா இல்லை ஆச்சரியப்படவா என புரியாமல் விழித்துக் கொண்டிருக்க... எதிர்வீட்டு மாடியில் ஷட்டுல் பேட்டுடன் நின்றிருந்த சபி, "ஹே... ஹாய் ரக்ஷவ் ப்ரோ.... குட் மார்னிங்.... ", என கத்திவிட்டு புன்னகைக்க... அவளுடன் சேர்ந்த சுஜியும் குட் மார்னிங் என்பது போல ஒரு கையசைப்பை கொடுக்க...., பதிலுக்கு புன்னகைத்த ரக்ஷவ், "குட் மார்னிங் மா.... ஆமா.. என்னதிது.... கிரவுண்ட்ல விளையாட வேண்டிய விளையாட்ட மொட்டமாடி டூ மொட்டமாடி விளையாடுரீங்க..... நியூ ட்ரெண்டா?.... கீழ போய் விளையாடலாம்ல...

"இல்லண்ணா.... கீழ வண்டி வந்துட்டே இருக்கும்... அதா இந்த பிளான்.... எப்பவும் நா அங்க உங்க வீட்டுக்கு வந்துருவேன்.... சபி இங்க இருப்பா... ஆனா இன்னைக்கு தீராக்கா மயூக்கா இருந்ததால ரெண்டு ரெண்டு பேரா விளையாடுரோம்...", என கூறி அழகாய் புன்னகைத்தார்கள் இருவரும்..

"ஹாஹா... ஹ்ம்ம்... இது கூட நல்லா தா இருக்கு.... பௌன்ற்றி இல்ல... நடுவுல நெட் கட்டுறதுக்கு பதிலா ஒரு பெரிய பள்ளம்... ", என கூறியவாரு இரு வீடுகளுக்கும் இடையில் இருக்கும் வீதியை எட்டி பார்க்க... , "டேய்... நாங்க என்ன ரியல் மேட்ச்சா விளையாடுரோம்... சும்மா காலைல ஒரு குட்டி எக்ஸசைஸ்... பந்து தெருவுல விழுந்தா ஆளுக்கு ஒரு தடவ போய் எடுத்துட்டு வருவோம்... அதுல ஏறி எரங்குறதே நீ டெய்லி ஜாக்கிங்குற பேருல ஓடுறதுக்கு சமம்...", என மயூரி அவனுக்கு பதிலளிக்க... அப்போதே ரக்ஷவின் மூளையில் பல்ப் எரிந்தது.

"ஹை... இந்த ஐடியா நல்லா இருக்கே... அப்ப நானும் உங்க டீம்ல ஜாயின் பண்ணிக்கிரேன்... எனக்கும் ஹர்ஷாவ எழுப்புர வேள மிச்சம்...." என அவனும் அந்த மொட்டைமாடி கூட்டணியுடன் இணைந்து கொண்டான்.

சாதாரணமாக விளையாடி கொண்டிருந்தவர்களை பாய்ன்ட் வைத்து விளையாடினால் தான் நன்றாக இருக்கும் என உசுப்பேத்தி விட்ட ரக்ஷவ், இப்பொழுது தலையில் கைவைத்து ஒக்காந்து விட்டான்.... மற்ற நால்வரும் எக்குத்தப்பாக பந்தை அடித்துவிட்டு இப்பொழுது வாயாலேயே பாய்ன்ட்டிர்க்காக அடித்து கொண்டிருந்தார்கள்... இவர்கள் ஐவரும் கத்திய கத்தில் வீதியில் செல்வோர் இந்த மாடியை நோக்கி திரும்பாமல் சென்றால் தான் ஆச்சரியம்... அப்படிபட்ட ரகளைகளும் அட்டகாசங்களும் நடந்தது இந்த இரு மாடிகளில்.

"அட சும்மா கெடங்க... இன்னைக்கு கேம் ஓவர்.... யாரும் ஜெயிக்கல... கேம் டை ஆகிருச்சு...", என நடுவில் நின்று ரக்ஷவ் கத்த..., "சரி ஓகே... ஸ்கூல் கெலம்பவும் டைம் ஆச்சு... சோ ஃபைவ் மினிட் ரெஸ்ட் எடுத்துட்டு கெலம்புவோம்", என தோளை குலுக்கி விட்டு மற்ற நால்வரும் அப்படியே சுவற்றில் காலை தொங்கவிட்டவாறு அமர்ந்து விட்டார்கள்... ரக்ஷவும் தலையில் அடித்து கொண்டு அவர்களுடன் அமர்ந்தான்.

இவ்வளவு நேரமும் ஆட்டமாய் ஆடிவிட்டு இப்பொழுது மெல்ல மூச்சு வாங்க அமர்ந்திருக்க..., இந்த மாடியில் இருந்து அந்த மாடிக்கு கத்தினான் ரக்ஷவ்..., "ஓய் சுஜி மா... நேத்து பர்த் டே பேபீஸ்க்கு சர்பிரைஸ் குடுக்க மாஸ்டர் பிளான்லாம் போட்டீங்க... நல்லா என்ஜாய் பன்னுனீங்களா?....

"அட போங்கண்ணா நீங்க வேற... நாங்க அவளுங்களுக்கு சர்பிரைஸ் குடுக்களாம்னு பிளான் போட்டு மிஸ்ஸல்லாம் வேற ஏமாத்தி.... ஸ்கூல பாதில இருந்து கட்டடிச்சு... வீட்டுக்கு வந்து அரெஞ்மென்ட் பண்ணுனா அவளுங்க எங்களுக்கு சட்ப்ரைஸ் குடுத்துட்டாலுங்க...", என சபி அலுத்து கொள்ள... "ஏன் அப்டி என்ன ஆச்சு?... ", என குட்டி ஃபிளாஷ் பேக் கேட்க தயாரானாள் தீரா.

நேற்று....

வேகவேகமாக பள்ளியில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பிய சபியும் சுஜியும் வரும் வழியிலேயே பலூன்... ஸ்னோ ஸ்ப்ரே... பாப்பர் என அனைத்தையும் வாங்கிவந்து... வீட்டில் அம்மாவை நச்சரித்து ஒரு குட்டி கேக்கையும்

செய்து விட்டு மற்றவர்களுக்காக காத்திருந்தார்கள்....

அங்கே பள்ளியில் இறுதி மணி அடித்ததும் ஶ்ரீ, மதி, ஜீனத், ஹரிணி நால்வருமாக சேர்ந்து தங்களின் திட்ட படி, "அம்பா.... வாங்க எல்லாரும் போய் சபிய பாத்துட்டு வருவோம்.. அவ வேர திடீர்னு வீட்டுக்கு போய்ட்டா", என சீரியஸாக கூறி தாராவையும் பில்கியையும் சந்தேகம் வராமல் அழைத்து செல்ல... ஹாஸ்டல் செல்ல வேண்டிய மதி மற்றும் ஜீனத் அதிசயத்தின் அதிசயமாக எவ்வித மறுப்பும் கூறாமல் இவர்களுடன் வருவதே தாரா மற்றும் பில்கிக்கு ஏற்கனவே இருந்த சந்தேகத்தை வலுவாக்கி விட்டது. பாவம் அது மற்றவர்களுக்கு தான் தெரியவில்லை...

சரியாக சபி சுஜியின் வீட்டிற்க்கு வரும்பொழுது இருவரையும் முன்னே விட்டுவிட... ஆவர்களும் எதையும் கண்டு கொள்ளாமல் முன்னோக்கி நடக்க... சரியாக கதவை திறந்த நேரம் இரு புறமும் இருந்து வெடித்த பாப்பரின் சத்தம் இருவரையும் அதிர்ச்சியாக்கியது போல் தெரியவில்லை...

அனைவரும்... "என்ன'ம்பா.... ஷாக்கிங்கா இல்லையா?", என கேட்டதற்கு, "ஹிஹிஹி... அதேப்படி இருக்கும்... காலைல இருந்து எதிர்பாத்துட்டே இருந்தோம்... ஆனா எதுவும் நடக்கல... அப்பரம் சபி பண்ணுன அளபரைல லைட்டா டவுட் வந்துச்சு.... இப்போ மதியும் ஜீனத்தும் ஹாஸ்டல் போக சண்ட பொடாம இங்க வரும்போதே வீட்டுல என்னமோ இருக்குன்னு கண்டு பிடிச்சுட்டோம்", என கூறி சிரிக்க... மற்றவர்களுக்கு தான் நம்ம நட்புக்கு இவளோ மூளையா என ஆச்சரியமாக இருந்தது... பின் அரைமணி நேரம் கும்மாளம் அடித்து விட்டு அவரவர் வீட்டை பார்த்து கிளம்பினார்கள்.

இதை சுஜி கூறி முடிக்க.... அவர்களின் ஏமாற்ற நிலையை நினைத்து உச்சு கொட்டி கொண்டிருந்தாள் தீரா...

"சரி சரி... டைம் ஆச்சு... இப்பொ கெலம்புனா தா நேரத்துக்கு போக முடியும்... இல்லன்னா நேத்து மாதிரி ஓட வேண்டியது தா", என ரக்ஷவ் மணியை நினைவு படுத்த... அப்போதே அனைவருக்கும் நேரமாகிவிட்டது நினைவிற்கு வந்து பரபரப்பாக கிளம்ப தொடங்கினார்கள்....

மணி எட்டரையை தொட்ட நெரம் அனைவரும் கிளம்பி வாயிலுக்கு வந்திருக்க... காலையிலேயே குளித்துவிட்டு கிளம்பிய அர்ஜுன், டான்ஸ் கிளாசில் இருந்தே யுனிபார்முடன் தயாராகி வந்திருந்தான்... வந்தவனை கண்டு வாயிலில் அனைவரும் வாயடைத்து போய் நின்றார்கள்....

அவ்விடம் வந்த சங்கரி , "டேய்... யார்ரா இந்த பொண்ணு....", என அவன் பைக் பின் சீட்டில் அமர்ந்து இருந்தவளை கண்டு கேட்க...., "ம்மா... என் புது டான்ஸ் பாட்னர்.... என் ஸ்கூல் தா... அதா நானே கூட்டிடு வந்துட்டேன்.... ", என அன்னைக்கு பதிலளித்தவன் ரக்ஷவை நோக்கி, "மச்சான்... நா இன்னைக்கு கீர்த்துவ கூட்டிட்டு போறேன்... இல்ல இல்ல... டெய்லியும் கூட்டிட்டு போவேன்... நீ என்ன பண்ணுரன்னா.... தீராவையும் மயூவையும் கூட்டிட்டு ட்டிரிபில்ஸ் அடி...", என்று விட்டு தன் வண்டியில அவளுடன் பறக்க.... குடும்பத்தவர்களிடம் அறிமுகம் ஆக இப்போது நேரம் இல்லாததால் சிறு புன்னகையுடன் கையசைத்து விட்டு சென்றாள், அர்ஜுனின் புது டான்ஸ் பார்ட்னர் கீர்த்திகா...

அவள் வேறு யாரும் அல்ல... நேற்று நம் அர்ஜுன்னுக்கு நிகராக ஸ்கூலில் பேசிய அதே பெண் தான்....

இதை கண்டு திறந்த வாயை மூட மறந்து அவர்களை பின்தொடர்ந்து சென்றார்கள் மற்ற மூவரும்...

இவர்கள் புறப்பட்டு இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்கும்.... சற்று முன்னர் உறக்கம் கலைந்து எழுந்த வந்த மித்ரா அத்தையிடம் காலைவணக்கம் கூறிவிட்டு காப்பி குடித்து விட்டு ஏதோ காரணமாகவே ஹர்ஷனின் அறையை நோக்கி கொண்டிருக்க... இதற்கு மேல் காத்திருக்க முடியாமல் தன் அத்தையிடம் ஒரு கப் டீயை வாங்கி கொண்டு அவனறைக்கு சென்றாள்... புராஜெக்ட் வர்க் என இவ்வாறு காலங்காத்தலேயே இவள் அவனை நாடி செல்வது வழக்கம் தான் என்பதால் சங்கரியும் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

"ஹர்ஷா..... எந்திரீங்க.... எந்திரீங்க ஹர்ஷா.... அட... அஜ்ஜு கூட இப்டி தூங்க மாட்டான்", என கூறி கொண்டே கையில் வைத்திருந்த கப்பை லேசாக அவள் தோளில் வைக்க... அதன் சூட்டில் அரக்க பரக்க எழுந்து அமர்ந்தான்.

இவள் ஒருவித எதிர்பார்ப்புடன் அவனை நோக்க... அவனோ இப்போதே உறக்கம் கலைந்ததில் தலையை சொரிந்து கொண்டே அவள் கையில் வைத்திருந்த கப்பை வாங்கினான்.. அதை கண்டு சிறு ஏமாற்றத்துடன் திரும்பி நடக்க..., "மித்ரா ஒரு நிமிஷம்....... நில்லு", என நிறுத்தினான்.

வந்திருப்பது அன்னை என அவன் நினைத்திருக்க... இது அவள் தான் என தெரிந்ததும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்....

அப்பாடா.. இப்பாயாசும் கூப்பிட்டானே", என மனதினுள் நினைத்து கொண்டு திரும்பி புன்னகையுடன் அவனை எதிர்கொள்ள.., "மித்ரா...... அது.. .... நா.... நேத்து கேட்டது..........", என தயங்கியவன் அவள் நிதானமாக இருப்பதை கண்டு, "அதுக்கு பதில் சொல்லாம ஏன் ஆஃப்லைன் போய்ட்ட", என தைரியமாக கேட்க..., அப்போதே தன் இறுதி மெசேஜ் அவனை அடையவில்லை என்பதை நினைவில் கொண்டுவந்தாள்.

"அது... நா நெத்தே சொன்னே... ஆனா நெட் முடிஞ்சு போச்சு....", என கூறும்போதே அவள் முகம் சிவக்க... அந்த பதில் என்னாவாக இருக்கும் என்பதை யூகித்தவனுக்கு விண்ணில் பறக்கவெண்டும் போல் இருந்தது... இருந்தும் ஒரு முறை அவளே கூறி கேட்க ஆசை பட்டவன், "மித்ரா... பிளீஸ்... என்ன பதில்ன்னு இப்போவே சொல்லுவேன்.. பிளீஸ் பிளீஸ்....", என்றவன் டீ கப்பை மேஜையில் வைத்து விட்டு அவள் கரத்தை பற்றிக்கொண்டு கெஞ்ச... அதில் மேலும் சிவந்து போனவள், "அ.. அது... என..க்கு ஓ.. க்கே...", என கூறிய அடுத்த நொடி அவனின் அன்பான அனைப்பினுள் இருந்தாள் அவள்.

😜😈GALAATTAS ON THE WAY 😈🤪Rate this content
Log in