Madhu Vanthi

Children Stories Drama Classics

4  

Madhu Vanthi

Children Stories Drama Classics

2K kids - 12

2K kids - 12

5 mins
311


அன்று காலை... கல்லூரிக்கு முழுவதுமாக தயாராகி விட்டு கண்ணாடி முன் நின்றிருந்தாள் மித்ரா... அவளின் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தையே விடாமல் பார்த்து கொண்டு... அது தன்னிடம் வந்து முழுதாக நான்கு நாட்கள் ஆகி விட்டது... நான்கு நாட்களும் கல்லூரிக்கு விடுமுறை தான் போட்டிருந்தாள்... அவள் கணவனும் தான்.


ஆனால் எவ்வளவு நாள் தான் இப்படியே விடுமுறை எடுத்து கொண்டு வீட்டிலேயே அமர்வது.. அதனால் மகனையும் மருமகளையும் ஒழுங்கு மரியாதையாக கல்லூரி கிளம்ப கூறி விட்டாள் சங்கரி... அவர்கள் இருவருக்கும் சக மாணவர்களை எதிர்கொள்ள ஒரு தயக்கம்... அவ்வளவு தான்...


திருச்சியில் இருந்து வந்த அன்றே நெருங்கிய நட்புகள் கால் செய்து திருச்சி பயணத்தை பற்றி விசாரித்தார்கள்... ஆனால் என்ன செய்வது.. அப்போது அவர்கள் இருந்த மனநிலைக்கு தங்கள் உணர்வுகளை எவரிடமாவது பகிர வேண்டும் என்று தான் இருந்தது.. முக்கியமாக நட்புகளிடம்... அதனால் எதை பற்றியும் சிந்திக்காமல் மனதார உலரிவிட.. இந்நேரம் இவ்விஷயம் இருவரின் வகுப்பு முழுவதும் நிச்சயம் பரவி இருக்கும்... 


இப்போது வேறு வழியும் இல்லை... பிறரை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்... அனைவரின் வாழ்விலும் நடக்கும் விஷயம் தான்... இவளுக்கு கொஞ்ஜூண்டு வேகமாக நடந்து விட்டது... மித்ராவின் வகுப்பிலும் இரண்டு மாணவிகள் கல்லூரி சேரும்போதே திருமணத்தை முடித்து கொண்டு தான் வந்து சேர்ந்தார்கள்... எல்லாம் கொரோனாவின் மகிமை... ஆனால் அவர்களும் இவளும் ஒன்று இல்லையே... அவர்களை வகுப்பினுள் நுழையும் போதே திருமணம் ஆன பெண்ணாக தான் நுழைந்தார்கள்... ஆனால் இத்தனை நாளும் மிஸ் மித்ரா தேவியாக வகுப்பினுள் இருந்தவள் திடீரென மிஸ்சஸ் மித்ராதேவி ஹர்ஷவர்தனன் என கூறினால் ஒரு நோடி அணைவரும் ஜெர்க் ஆகதான் செய்வார்கள்.. அதையெஎல்லாம் நினைத்து கொண்டவள் ஒரு பெருமூச்சு விட்டு வகுட்டில் குங்குமம் வைத்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.


அங்கே டைனிங் டேபிலில் வழக்கம் போல உணவை அரக்க பறக்க உண்டு கொண்டிருந்த ஹர்ஷனுடன் சேர்ந்து தானும் அதே போல் உண்டு விட்டு கல்லூரி பேருந்தை பிடிக்க பேருந்து நிறுத்தத்திற்கு சென்று விட்டார்கள்.. அங்கே வந்தது அவர்கள் முதலாவதாக எதிர்கொள்ள வேண்டிய சவால்... 


மித்ராவின் பஸ்டாண்ட் தோழிகள் ஆர்த்தி மற்றும் சக்தி நின்று கொண்டிருக்க... இவளோ இருவருக்கும் நடுவில் சென்று அப்பாவி போல் நின்று கொண்டாள்.. அவளை கண்டதும் இவ்விருவரும் விழிவிரிய நோக்கினார்கள்... அவளின் குங்குமம் இட்ட நெற்றியை...

இருவரும் வேறு துறையில் இருப்பதால் அவர்களுக்கு இந்த தகவல் கிட்டவில்லை...


"ஹோய் மித்து... என்ன டி... நாங்க ட்ரீட் கேப்போம்ன்னு சொல்லாம கொள்ளாம கல்யாணத்த முடிசுட்டியா... கடைசில சொன்ன மாறியே சாம்பார் சாதம் கூட பொடலையே பக்கி.. ", என சக்தி முறைக்க... ஆர்த்தியோ வழக்கமாக நிற்கும் மரத்தடியை பிடித்து கொண்ட ஹர்ஷன்னை நோக்கி, "என்ன ஹர்ஷாண்ணா.... நீங்க கூட கூபுடலையே..", என போலியாக சோகமானாள்.

அவர்களுக்கும் புரிந்தது ஏதோ திடீர் முடிவு தான் என்று.


"கல்யாணம் நடக்க போறது தெரிஞ்சா தானே மா கூப்புட முடியும்... எங்களுக்கே தெரியாது...", என ஹர்ஷன் தன் சோக கீதத்தை தொடங்க... "அப்டி என்னண்ணா ஆச்சு என ஆர்த்தி சக்தி கதை கேட்க சீரியசாக தயாரானார்கள்...

அவனும் நடந்ததை கூற தொடங்கினான்.


*********

அன்று திருச்சியில் இருந்து திரும்பும்போது சங்கரியிடம் இருந்து அழைப்பு வர... மொபைலை அட்டென் செய்த ஹர்ஷனிடம் வீட்டில் யாரும் இல்லாததால் நேராக மருத்துவமனைக்கு வர சொல்லி விட்டார்.. அவர்களும் அங்கே செல்ல.. இவர்களுக்காகவே காத்திருந்தது அதிர்ச்சி...


நேராக தாத்தாவை அட்மிட் செய்திருந்த இடத்தை அடையாளம் கேட்டு அவர்கள் அங்கு வந்து விட.... சங்கரி.. அவளின் கணவர் செல்வ குமார் மற்றும் அவரின் தாய் கற்பகம் பாட்டி அங்கு சோகமும் தயக்கமும் கலந்தவாரு அமர்ந்திருந்தார்கள்.. அருகே இருந்த படுக்கையில் வெகுவாக தளர்ந்து சோர்ந்து போய் வெளிறிய தேகதுடன் படுத்திருந்தார் அவர்களின் தாத்தா.. நேற்று மாலை தான் இங்கு அட்மிட் ஆனார்கள்.. இன்று மாலை அவரின் நிலை இப்படி...


பேரனும் பேத்தியும் அவரின் இருபக்கமும் நின்று மெல்லமாக கரத்தை பற்றி கொள்ள... அதில் மெல்ல கண்விழித்த தாத்தா, சங்கரியை நோக்கி, "என்ன மா நா சொன்னத சொன்னியா??...", என தன் தளர்ந்த மெல்லிய குரலில் கேட்க.... "இல்ல மாமா.. அது....", என அவர் தயங்குவதிலேயே எதுவும் சொல்லவில்லை என்பது அவருக்கு புரிந்து விட்டது.. அதனால் அவரே பேச முடிவெடுத்தார்... 


"கண்ணுகளா....", என ஹர்ஷன் மித்ராவின் கரத்தில் அழுத்தம் கொடுக்க.. "என்ன தாத்தா..."... "சொல்லுங்க தாத்தா", என இருவரும் அவரருகில் குனிந்து நின்றார்கள்.


"என்னால சுத்தமா முடியல டா... இப்போவே என் காலம் முடிஞ்சிருமொன்னு தோணுது..", என அவர் சொல்லியது தான் தாமதம்..., " ஏன் தாத்தா இப்டிலாம் பேசுறீங்க... அதெல்லாம் ஒன்னும் ஆகாது... நீங்க நல்லா திரும்ப வந்துருவீங்க..", என மித்ராவும் ஹர்ஷனும் மாற்றி மாற்றி ஒரு முறைபுடனேயே கூறி முடிக்க..., "இல்ல டா... எனக்கும் வயசாயிடுச்சு.. கடைசி காலம்... எப்பொன்னு சொல்ல முடியாது டா... .... ", என கூறி கொண்டிருக்கும் போதே ஹர்ஷன் ஏதோ பேச வாயேடுக்க, "நா முழுசா சொல்லிக்கிறேன் டா", என தாத்தா கூறியதும் அமைதியாக நின்றான்.


"என் காலம் இப்போவே கூட முடிஞ்சுருமோன்னு தோணுது.. அதுகுள்ள... .... ..... உங்க கல்யாணத்தை பாக்கணும் டா.....", என கூறி முடிக்க... இருவருக்கும் இதயம் வேகமெடுத்தது... ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள.. இருவர் முகத்திலும் அதிர்ச்சி... என்ன பதில் சொல்ல என்பது புரியாமல் மலங்க மலங்க இருவரும் விழிக்க..., "என் கடைசி ஆச டா... இப்போவே என்னால முடியல...", என கூறிட.. தாத்தாவின் கண்ணிலிருந்து விழிநீரும் வழிந்து அவரின் வேதனையை காட்டியது.. 


அப்போதே இருவரும் அவரின் நிலையை முழுமையாக கவனித்தார்கள்... நேற்று வீட்டில் பார்த்ததற்கு இன்று மிக மிக சோர்ந்து, மெலிந்து எழுந்து அமர கூட இயலாமல் படுத்த படுக்கையாக தான் இருந்தார்... அதை பார்க்க உண்மையில் அவரின் இறுதி நேரமோ என்று தான் அவர்களுக்கும் தோன்றியது.. மேலும் மித்ரவிடம் சங்கரியும் ஹர்ஷனிடம் அவன் தந்தையும் பேசினார்கள்.. நீங்க ரெண்டு பேரும் விரும்புறீங்க தானே... எப்படியும் நடக்க போறது தா... அத தாத்தாக்காக கொஞ்சம் சீக்கிரமா பண்ணிகலாமே... இப்போ இருக்குற அதே வீடு ஆதே லைஃப் தானே தொடர போகுது... கொஞ்சம் மனசு வைங்கப்பா.... ", என இறைஞ்சி நிற்க... மூத்தவர்கள் இந்நிலை அவர்களை தாக்கியது.... அவர்கள் கூறுவதும் சரி தான்.. இப்போது திருமணம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் இருவருக்கும் அதே வீடு அதே வாழ்க்கை தான்... இவர்கள் யோசிக்கும்போதே தாத்தாவிற்கு உடல் சோர்வாலும் மருந்தின் தாக்கத்தாலும் மயக்கம் வர இவ்வளவு நேரம் யோசனையில் இருந்த இருவரும் திடீரென அவர் கண்ணை மூட பதறி விட்டார்கள்... 


வேகமாக டாக்டரை அழைக்க.. அவர் வந்து பார்த்து விட்டு ஊசி ஒன்றை போட்டுவிட்டு, வயசாயிருச்சுல இப்டி தா இருக்கும்... என்று சாதாரணமாகவே கூறி மற்றவர்களை பார்க்க சென்று விட்டார்... அவருக்கு இருக்கும் ஏகபட்ட நோயாளியில் இவரும் ஒருவர்.. 


இதுவும் ஹர்ஷன் மித்ரா இருவரையும் பாதிக்க... ஒருவரை ஒருவர் கண்ணாலேயே பர்த்து கேள்விகள் பல கேட்டு கோண்டு இறுதியில் தாத்தாவின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்து விட... அவர்களின் நேரம்... இன்று முகூர்த்தமாகவும் அடுத்த முகூர்த்தம் இரு வாரத்திற்கு பின்பாகவும் இருந்தது... அதனால் தாத்தாகாக இன்றே மணமுடிக்க முடிவெடுத்து, இரு வாரத்திற்கு பின் ரிசப்ஷன் வைக்க முடிவெடுத்தார்கள்.


மாலை ஐந்தரைக்கு நல்ல நேரம் இருந்தது... செல்வகுமார் சங்கரி சென்று மாங்கல்யம் தாம்பூலம் மாலை வாங்கி வர... குறித்த நேரத்தில் கண்கண்ட தெய்வங்களான பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியின் முன்னிலையில் ஹர்ஷன் மித்ராவின் கழுத்தில் மங்களநாணை மூன்று முறை முடித்தான்... 


நேரம் கடந்தது.. ஏழு மணி போல வந்த மற்ற பிள்ளைகளிடம் விஷயத்தை கூற... அவர்கள் அக்கா அண்ணனின் மனநிலை என்ன என்பதை பற்றி தான் கவலை கொண்டார்கள்.... "மித்ராக்கா.... நீ நெஜமாவே ஹாப்பியா தா இருக்கியா.,", என ரக்ஷவ் தன் அக்காவிடம் மென்மையாக கேட்க... அவனுக்கு ஒரு புன்னகையை அளிதவள் மயூ தீரவையும் அருகில் அழைத்து, "எனக்கு அவர புடிக்கும்ன்னு உங்களுக்கு தெரியும் தானே... அப்பறம் என்ன?... திடீர்னு நடந்தது தா கொஞ்சம் பதட்டமா இருக்கு... மத்த படி பிரச்சனன்னுலாம் எதுவும் இல்ல.. ", என்று கூறி மூவருக்கும் தன்னிலை நன்றாக இருப்பதை வெளிப்படுத்தினாள்.


அங்கு அர்ஜுன் கூட தன் அண்ணனிடம் இதையே தான் கேட்டிருந்தான்.., " டேய்.. அப்பறமா நடக்க வேண்டியது கொஞ்சம் முன்னாடியே நடந்துறுச்சு... எங்க ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல டா என்று சாதாரணமாகவே கூறிவிட்டான்.


பின் தாத்தாவை கவனிக்க செல்ல... அவருக்கு வெறும் ஊசியும் மருந்தும் மட்டுமே கொடுத்திருப்பதையும்... ஒரு ட்ரிப்ஸ் கூட பொடவில்லை என்பதையும் ரக்ஷவ் கவனித்தான்... அதனை கண்டு நர்சை அழைத்து டிரிப்ஸ் போட சொல்ல.. அதெல்லாம் தேவை இல்லை என்று அவர் மறுத்து விட்டார்... பின் ரக்ஷவ் தான் , "தெம்பு வேணும்னா ஏதாவது சாப்படனும்... தாத்தாக்கு சாப்ட முடியல.. சோ குல்கோஸ் பொட்டா தானே அவர் சரி ஆவாரு... ஒழுங்கா வந்து குல்கோஸ் போடுங்க.", என சண்டை பிடித்து இரவு முழுவதும் நான்கு பாட்டிலை ஏற்றி விட.. காலையில் புத்துணர்வோடு எழுந்து கொண்டார் ஆவர்... உண்மையில் நேற்று பேரன் பேத்தியின் திருமணம் நடக்கவே அவருக்கு அந்த நிலை வந்தது போல தோன்றியது அனைவருக்கும்.... அன்று மாலையே அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்க்கு அழைத்து வந்து விட்டார்கள்.


********

இதை ஹர்ஷன் கூறி முடிக்க... "உங்க வாழ்க்கைல விதி சதி பண்ணிருச்சு அண்ணா...", என ஆர்த்தி சிரித்து கொண்டே கூற..., "ஆமாம்மா... ஆனாலும் நல்ல சதி தா.. எந்த பிரச்சனையும் இல்லாமல் கல்யாணத்த முடிச்சு குடுதுறுச்சே", என கூறி சிரித்தான் ஹர்ஷன்.... 


"ம்ம் ஆமா ஆமா.. ஆனா எங்களால தா அத பாக்க முடியல..", என சக்தி வருத்தப்பட ...., அதை பார்த்து சிரித்த மித்ரா, " நெக்ஸ்ட் வீக் சண்டே ரிசப்ஷன் இருக்கு.... அதுக்கு மட்டும் வந்திருங்க உங்க கவல போய்ரும்...", என மித்ரா இருவருக்கும் அழைப்பு விடுத்தாள்... இருவரும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டார்.


கல்லூரியிலும் இவர்களை அதிகமெல்லாம் சங்கடபட வைக்கவில்லை.... அனைவரும் பக்குவமான வயதுடைவர்கள் தானே... இவர்களின் நிலையை புரிந்து கொண்ட சகாஜமாகவே பேசினார்கள்... அதில் இருவருக்கும் நிம்மதியே கிடைத்தது...


இங்கே பள்ளியில்... ஆபிஸ் ரூம் வாசலில் சட்டை கிழிந்து ஆங்காங்கே லேசாக இரத்தம் கசிந்து அர்ஜுன் மற்றும் நவீன் நிற்க... அவர்களுடன் மேலும் மூவர் நிற்க... எப்போதும் சாந்தமாக இருக்கும் சுகன் சார் இன்று அதீத கோபத்தில் இவர்கள் முன்... இவர்களிடம் அடி வாங்கிய பதினொன்றாம் வகுப்பு மாணவன் அவருக்கு அருகில் தலையில் இரத்தத்துடன்...


😜😈GALAATTAS ON THE WAY 😈🤪



Rate this content
Log in