Madhu Vanthi

Children Stories Drama Others

4  

Madhu Vanthi

Children Stories Drama Others

2k kids 10

2k kids 10

6 mins
352


"ஹர்ஷா... எங்க கூட்டிட்டு போறீங்க... ஐயோ சொல்லிட்டு கூட்டீட்டு போங்க...", என அவன் இழுக்கும் இழுப்புக்கு அவன் பின்னேயே மித்ரா செல்ல..., "வெயிட் வெயிட்... சொல்லுறேன்...", என அவளை இழுத்து கொண்டு யாரையோ தேடி சென்றான்... "அட சொல்லுங்க... வெளிய போலாம்ன்னு சொல்லி கூட்டீட்டு வந்துட்டு இப்டி கேம்பஸ்குள்ளையே சுத்தீட்டு இருக்கீங்க...", என மித்ரா என்ன தான் கெஞ்சினாளும் அவன் வாயை மட்டும் திறந்தபாடில்லை... இவளும் கேட்டு கேட்டு ஓய்ந்து விட்டாள்.


கேன்டீன்க்கு சற்று தள்ளி இருந்த ஒரு மரத்தடியில் இருவரும் எவருக்கோ காத்திருக்க... பார்வையை சுற்றி சுழல விட்ட ஹர்ஷனின் கண்களில் அவர்களும் பட்டு விட்டார்கள்... அவர்களும் இவர்களை பார்த்து விட்டார்கள்.


அவர்களை பார்த்த ஹர்ஷன், "சீனியர்....", என கத்தி அழைத்து தங்கள் இருப்பிடத்தை காட்ட... அதை கண்ட மித்ரா, "ஐயையோ... இப்போ இவங்கள எதுக்கு கூப்புடுறான்...", என அனிச்சையாகவே ஹர்ஷனுக்கு பின்னே நகர்ந்தாள்.


அவளை பார்த்து கொண்டே வந்த சீனியர்ஸ் நேராக ஹர்ஷனிடம் வந்து நிற்க.. அவன் அவர்களுடன் சில அடிகள் தள்ளி, தாங்கள் பேசுவது மித்திராவிர்க்கு கேட்காதவாரு தனியாக சென்றான்...


"என்ன டா ஹர்ஷா... எல்லா ஓகே வா?.. சொல்லிட்டியா", என தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் அதில் ஒரு சீனியர் கேட்க... "இன்னும் எதுவும் சொல்லல சீனியர்... நீங்க பெர்மிஷன் லெட்டர்ல ஹச்.ஓ.டி கிட்ட சைன் வாங்கியாச்சுல.. அத மட்டும் குடுங்க... நா அவள கண்வைன்ஸ் பண்ணி நைட் ஸ்டேஷன்க்கு கூட்டீட்டு வந்துரேன்..", என கூறி ஒரு காகிதத்தை மட்டும் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டான்.


அதனை கொடுத்து விட்டு, "ஷார்ப் செவன்க்கு டிரெயின்... பிளாட் ஃபார்ம் நம்பர் டூ... கரெக்ட்டா வந்துருங்க...", எனக் கூறி இரண்டு ட்ரெயின் டிக்கெட் களையும் கொடுத்துவிட்டு அவர்களும் சென்றுவிட, இப்போது மித்ராவிடம் வந்தவன், "மித்ரா... வா.... ஐஸ் கிரீம் பார்லர் போலாம்... ", என கூறி கொண்டே அவன் கையில் இருந்த காகிதத்தை அவள் கண் முன்னாலேயே மடக்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்தான்.. அவன் நினைத்தது போலவே மித்ரா அதை பற்றி கேட்டு விட்டாள்.


"ஹர்ஷா... இத அவங்க கிட்ட இருந்து வாங்க தா என்ன இவ்வளவு தூரம் கூட்டீட்டு வந்தீங்களா??...", என முகத்தை சுருக்கியவள், "ஆமா..... அது என்ன பேப்பர்??...", என கேட்க... இதையே எதிர்பார்த்தது காத்திருந்தவன், "ம்ம்ம்... சஸ்பென்ஸ்...", என குறும்பாக சிரித்து விட்டு அவளுடன் கேம்ப்பஸ்ஸை விட்டு வெளியேறினான்.

அவளும் தலையை சொரிந்து கொண்டே ஒன்றும் புரியாமல் அவனுடன் சென்றாள்.


             ***********


தேர்வு நெருங்குகிறது என்ற அறிவிப்பு வந்ததும் தான் வந்தது... நம் பார்ட் டைம் படிப்பாளி பிள்ளைகளின் அலப்பறை தாங்கவில்லை... அந்த அறிவிப்பு வந்தது தான் தாமதம் போல... இத்தனை நாளும் மூட்டைகட்டி மூலையில் வைத்திருந்த மூளையை தூசிதட்டி எடுத்து வைத்து... அதற்கு பற்பல அப்டேட்களை சரமாரியாக கொடுக்க துவங்கிவிட்டார்கள்.


தேர்வுக்குத் தேவையான பாடங்களை நடத்தி முடித்து விட்டதால் இந்த ஒரு வாரம் முழுவதும் அனைவரையும் தேர்வுக்கு தயாராகும் விதமாக ஆசிரியர்கள் படிக்க சொல்லி விட.... ஒரு வாரத்திற்குபடம் கவனிக்கும் வேலையும் வீட்டுப் பாடம் செய்யும் வேலையும் இல்லை என்று உற்சாகத்தில் குதிக்காதா குறையாக உற்சாகம் அடைந்தார்கள்....


படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்களை கொஞ்சம் கவனம் எடுத்து படிக்க வைப்பதற்காக அவர்களை மட்டும் ஆசிரியர்கள் தங்கள் அருகிலேயே அமர வைத்து, எளிமையாக கற்றுக் கொடுக்க.... பத்து நிமிடம் வரை பொறுமையாக வகுப்பில் இருக்கும் மற்ற வானரங்கள்.... , "மிஸ்.... நாங்க தனியா வராண்டால ஒக்காந்து படிக்கிறோம்", என பர்மிஷன் வாங்கி வகுப்பை விட்டு வெளியே வந்து விட்டார்கள்.


இது ஒவ்வொரு பரிட்ச்சைக்கும் வழக்கம்தான்... "படிக்கிற புள்ள எங்க இருந்தாலும் படிக்கும்", என்ற பழமொழியின் உதாரணமாக இவர்களுக்கு படிப்பதற்கு சுதந்திரம் வழங்கி விடுவார்கள்.... அது இவர்களுக்கு வசதியாக போய் விட... எந்த இடம்.. எந்த வகுப்பு என்றெல்லாம் பார்க்காமல் பிடித்த இடத்தில் அமர்ந்து கொள்வார்கள்.


அதிலும் முக்கியமாக பத்து பதினொன்று பண்ணிரெண்டாம் வகுப்பு தான் அலப்பறையில் உச்சகட்ட அலப்பரையை செய்வது... கேம்பஸ்ஸின் மூலைமுடுக்கில் எல்லாம் இவர்கள் தான்...

முதல் இரு பாட வேளையில் வகுப்பு வராண்டாவில் இருப்பவர்கள்.. ப்ரேக்கிற்கு பிறகு மொட்டை மாடியின் படியில் சென்று அமர்ந்து படிப்பதும்.... மதியத்திற்கு பிறகு மொட்டை மாடிக்கே சென்று விடுவதும்..... இறுதி இரு பாட வேளையில், மணி அடித்ததும் வீட்டிற்கு ஓடுவதற்கு ஏதுவாக வாயிலுக்கு அருகில் இருக்கும் மரத்தடியில் கூட்டமாக அமர்ந்து படிப்பது வழக்கமே...


ஒவ்வொரு தேர்வுக்கும் இது சகஜம் தான் ஆனால் படிக்கிறார்களா என்று கேட்டால்...... படிப்பதற்கு பயங்கரமாக திட்டம் போடுவார்கள் என்று சொல்லி கொள்ளலாம் என்பது தான் பதில்... மொத்த பள்ளிக்கூடத்தையும் சுற்றி வந்து, கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி இவர்கள் படிக்கிரார்களா இல்லை விளையாடுகிறார்களா என கண்காணிப்பது ஆசிரியர்களின் பெரும் வேலையாகிப் போகும்.


அவ்வாறு இவர்களை காண வரும் ஆசிரியர்கள், கொரோனாஇல்லாத காலத்திலேயே சோசியல் டிஸ்டன்ஸிங்கில் அமர வைத்து செல்ல.... இப்பொழுது கூறவா வேண்டும்??.. கிரவுண்டில் இருக்கும் ஒரு மரத்திற்கு ஒரு ஆள் என அமர வைத்து படிக்க வைக்க.... ஆசிரியர் அப்படி சென்றதும் இவர்கள் இப்படி ஒன்று கூடிவிடுவார்கள். இப்படியே இவர்களின் தேர்வு பிரிப்பரேஷன்கள் தொடர்ந்தது...  


             **********

ஐஸ் கிரீம் பார்லர் வந்து மித்ரா இரண்டு கப் ஐஸ் காலி செய்து விட்டாள.... ஆனால் ஹர்ஷன் அந்த பேப்பரை பற்றி இன்னும் எதுவும் கூறவில்லை.... அவளும் அதை மறந்தே போய்விட்டாள்... 


தன்னிடம் இருந்த ஆப்பிள் ஜூஸை குடித்து முடித்து விட்டு, "மித்ரா... வேற எதாச்சும் பிளேவர் வேணுமா... ஆடர் பண்ணவா??...”, என அவள் சாப்பிடும் அழகை பார்த்துக்கொண்டே கேட்க..., "ம்ம்ஹும்.... இன்னைக்கு இது போதும்.... நாளைக்கு வந்து வேற ப்ளேவர் டிரை பண்ணலாம்....", என ஹர்ஷனுக்கு பதிலளித்தவள், அவளே சர்வரை அழைத்து பில் கொண்டு வருமாறு கூறினாள்...


"என்னமா... சாப்ட்டாச்சா.... வேற எதுவும் வேணாமா...", என அவர் சகஜமாகவே கேட்க..., "ஓசில குடுக்கிரதா இருந்தா குடுங்கன்னா... நா வேனானுலாம் சொல்லவே மாட்டேன்...", என இவள் பதிலுக்கு அவரை வாம்பிலுத்தாள்.


மித்ரா காலேஜ் சேர்ந்தது முதல் இந்த கடையின் ரெகுலர் கஸ்டமர்... அதனால் கடையில் பாதிக்கும் மேலாக வேலை செய்பவர்கள் இவர்கள் இருவரிடமும் சகஜமாக பேசும் அளவிற்கு பழகி விட்டார்கள். 


பில் வந்ததும் அதை கொடுத்து விட்டு வெளியே வந்ததும், "ஓகே மித்ரா.... சொல்லு.... எந்த ஹோட்டல் போலாம்...", என வரிசையாக இருந்த கடைகளில் இடை இடையே இருந்த நான்கு ஹோட்டலை கண்ணாலேயே ஹர்ஷன் சுட்டி காட்ட..., "என்னாது ஹோட்டலா.... அப்போ வீட்டுக்கு போகலையா நாம.... இப்போ எதுக்கு ஹோட்டல்... வீட்டுக்கே போலாமே... ", என மித்ரா கேட்டதற்கு, "நோ.. நோ.... நீ வீட்டுக்கு போனா இன்னைக்கு சாப்புட மாட்ட... சோ இங்கேயே சாப்புடுவியாம்... நா உனக்கு ஒரு சர்பிரைஸ் தருவேனாம் ....", என குரும்பாக கூற... அப்போதே அவளுக்கு மூளைக்குள் மணியடித்தது... 


சீனியர் கொடுத்த அந்த பேப்பரும் நினைவுக்கு வர, "ஆஹா.... நா வீட்டுக்கு போனதும் சாப்புட முடியாத அளவுக்கு எதோ ஒரு ஆப்பு ரெடி பண்ணிட்டாங்க போலவே... சோ இப்போவே எத பத்தியும் கேக்காம சாப்புட்ர வேண்டியது தா... ", என அமைதியாக ஒரு ஹோட்டலை அவள் சுட்டி காட்டினாள்.


அங்கே சென்ற இருவரும் ஆளுக்கு ஒரு சிக்கென் ப்ரைட் ரைஸ் ஆடர் செய்து உண்ண தொடங்கினார்கள்... உண்ணும் போதே மித்ராவின் நினைவில் ஆப்பு என்னவாக இருக்கும் என்ற சிந்தனை தான் ஓடி கொண்டிருந்தது...


இறுதியாக இருவரும் உண்டு முடித்துவிட... தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பெர்மிஷன் லெட்டரை எடுத்து மித்ராவிடம் நீட்டினான்... அவள் அதை வாங்கி பார்க்க...


"INTER- COLLAGE TALENT CONTEST"


என பட்டை எழுத்தில் இருந்த ஒரு போஸ்டருடன் ஒரு கடிதம் இருந்தது... அந்த கடிதத்தில், இவர்களின் கல்லூரி சார்பாக போட்டிக்கு செல்லும் ஒரு பத்து பேரின் பெயர் குறிப்பிட்டிருக்க...... பாட்டு போட்டிக்கு கல்லூரி சார்பாக செல்லும் பெயரில்.

ஏ. மித்ரா தேவி

பிஎஸ்சி. ஜார்னலிசம், ஃபர்ஸ்ட் இயர் என இருப்பதை கண்டு கண்களை அகல விரித்து ஹார்ஷனை நோக்கினாள்...


அவன் சிரித்து கொண்டே தன்னிடம் இருந்த இரண்டு டிக்கெட்டை அவளிடம் கொடுத்து, "நைட் ஏழு மணிக்கு டிரெயின்... வீட்டுல இருந்து ஆறரைக்கு கெலம்பனும்... ", என கூறி அவள் முகத்தை பார்க்க.... அப்போது தான் போட்டி நடக்கும் இடத்தையும் நேரத்தையும் தேடினாள் ..


அது மறுநாள் காலை பத்து மணிக்கு திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நடை பெறுவதாக இருக்க.... ,"யார கேட்டு என் பேர குடுத்தீங்க...", என கத்தாத குறையாக முறைக்க தொடங்கினாள்..., "ஹே... மித்ரா... இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல... இதெல்லாம் சீனியர்ஸ் வேள... அவங்க தா இந்த மாறி காம்படிஷன்க்கு ஆள் செலக்ட் பண்ணுறது... நீ பிரஷ்ஷர்ஸ் டேல பாடுனத வச்சு தா உன்ன செலக்ட் பன்னிருக்காங்க... அது மட்டும் இல்லாம அன்னைக்கு நீ பாட மாட்டேன்னு வீம்பு பன்னதுக்கு பனிஷ்மெண்ட்னும் சொல்ல சொன்னாங்க.... இன்னைக்கும் நீ முடியாதுன்னு சொன்னா அடுத்த பனிஷ்மெண்ட் இதுக்கும் மேல இருக்குமாம்...", என கூற..... வேறு ஊருக்கு செல்ல தயக்கமாக இருந்தாலும் வேறு வழியின்றி சரியென ஒப்புகொண்டாள்.


அடுத்ததாக தன்னுடன் வரவிருக்கும் மற்ற நபர்களை அந்த கடிதத்தில் பார்த்தாள்... மூன்று பெண்கள் ஏழு ஆண்கள் பெயர் இருந்தது... அனைவரும் அவர்கள் டிபார்ட்மெண்ட் தான்... மித்ராவின் வகுப்பு மாணவி ஒருத்தியின் பெயரும் இருந்தது... தனி நடன போட்டிக்கு.... ஹஃப்சானாவின் பெயரும் இருந்தது... பேச்சு போட்டியில்... ஹர்ஷன் பெயர் குழு நடனத்தில் இருந்தது.. ஆண்களில் ஐந்து பேர் குழு நடனத்தில் இருக்க... மற்ற இருவர் தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரை எழுதும் போட்டியில் இருந்து... 

ஹர்ஷன் உடன் வரும் தைரியத்தில் அவளும் கிளம்ப தயாராகி விட்டாள்.. 


அந்த அறிவிப்பு கல்லூரிக்கு நேற்று தான் வந்திருந்தது... அவசர அவசரமாக ஆட்களை தேர்ந்தெடுத்ததால் புதிதாக மித்ரா மற்றும் அவள் வகுப்பு மாணவியை மட்டும் தான் தேர்ந்தெடுத்து இருந்தார்கள்.... காரணம் பிரஷ்ஷர்ஸ் டேவில் ஒரே நாளில் அவர்கள் திறமையை அருமையாக காட்டி இருந்தார்கள் இருவரும்....


அதனால் தான் இதுவரை முதலாம் ஆண்டில் இருந்து எவரும் கலந்து கொள்ளாத இந்த போட்டிக்கு இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது... கல்லூரியில் இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து தான் நம் திறமை வெளிப்படும்... வாய்ப்புகள் வந்து சேரும்... இது போன்ற மேடைகள் தான் நம் வாழ்வில் பல உண்மைகளை உணர்த்தும்... வாய்ப்புக்காக ஏங்கும் ஒவ்வொருவரும் சிறு மேடை ஆனாலும் அதனை கைவிட கூடாது...


ஹர்ஷனும் மித்ராவும் மூன்றரை மணி போல வீட்டிற்க்கு வந்து விட... ஹர்ஷன் இன்று இரவு திருச்சி செல்வதை பற்றி சங்கரியிடம் கூறினான்... அதுவரை எதோ பதட்டத்தில் இருந்தவள்..., "சரி பா... ரெண்டு பேரும் பாத்து பத்தரமா போய்ட்டு வாங்க... ", என பேருக்கு புன்னகைத்து விட்டு செல்ல... குழப்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு விறுவிறுவென சங்கரியிடம் சென்று அவரை பிடித்து ஒரு ச்சேரில் அமர வைத்தார்கள்.


"என்னாச்சு அத்த... வை ஆர் யூ லூக்கின் டல்...", என மித்ரா ஒரு பக்கமும் , "மை மம்மிக்கி இந்த ஃபேஸ் செட் ஆகள... ஸ்மைல் ஸ்மைல்.....", என ஹர்ஷன் ஒரு புறமும் நின்று கொள்ள..., இருவரின் செயலில் மெல்லமாக புன்னகைத்தவர், "தாத்தாக்கு ஒடம்பு சரியில்ல டா... ரொம்ப வீக்கா இருக்காரு... இன்னைக்கு ரூம்லயே மயங்கி விழுந்துட்டாரு... ஹாஸ்பிடல் கூப்ட்டா வர மாற்றாரு...", என வருத்தமாக கூற... 


"ம்மா... இன்னைக்கு நாங்க திருச்சி கேளம்புறதுகுள்ள அவர ஹாஸ்பிடல் கெலப்புறோம்... ஓகே வா?..", என அன்னையிடம் கூறி விட்டு மித்ராவையும் அன்னையையும் அழைத்து கொண்டு தாத்தா ஓய்வெடுக்கும் அறைக்கு சென்றான்.


கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவர் எழுந்து அமர்ந்து கொள்ள... மித்ரா ஒருபுறமும் ஹர்ஷன் ஒருபுறமும் சென்று அமர்ந்து கொள்ள.... தாத்தா இருவரையும் தோளோடு அனைத்து கொண்டார்... 


"தாத்தா... நாங்க உங்க மேல கோபம்..", என மித்ரா முகத்தை சுருக்க... "ஆமா கோபம்...", என ஹர்ஷன் மறுபக்கமாக திரும்பி கொண்டான்.. "என்னாச்சு... என் செல்லங்களுக்கு என்ன கோபம்...", என இருவரின் கையையும் பிடிக்க... "எங்களுக்கு முடியாம இருந்தா மட்டும் ஹாஸ்பிடல் கூட்டீட்டு போறீங்க... நீங்க மட்டும் வர மாட்டுறீங்க...", என மித்ராவும் "எங்களுக்கு ஒரு நியாயம்... உங்களுக்கு ஒரு நியாயமா???", என ஹர்ஷனும் மாறி மாறி அவரை கேள்வி மேல் கேள்வி கேட்க... இறுதியாக பேரன் பேத்தியிடம் போட்டியிட முடியாமல் ஹாஸ்பிடல் செல்ல ஒப்பு கொண்டார்... 

மாலை இவர்கள் இருவரும் திருச்சி கிலம்பவும் மற்றவர்கள் ஹாஸ்பிட்டல் செல்ல முடிவெடுத்து விட்டார்கள்...


தாத்தா ஹாஸ்பிடல் செல்ல ஒப்புக்கொண்ட நிம்மதியில் சங்கரி மற்ற வேலைகளை பார்க்க கிளம்பினார்... மித்ரா போட்டி என்றதும் அதற்கு தயாராகிரேன் என்று கூறி உணவு கூட உன்ன மாட்டாள் என்று நினைத்து தான் ஹர்ஷன் அவளுக்கு ஹோட்டலிலேயே உணவு வாங்கி கொடுத்தான்... ஆனால் அவளோ.. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பது போல கட்டிலில் சென்று குப்புற கவிழ்ந்து விட்டாள்... 


"மித்ரா... காம்பெடிஷனுக்கு பிரிபேர் பண்ணலையா??... " என ஹர்ஷன் கேட்டதற்கு, "நாளைக்கு பத்து மணிக்கு தானே.... அதெல்லாம் அசால்ட்டா டீல் பண்ணுவோம்... இப்போ ஸ்லீபிங் டைம்... என்ன அஞ்சு மணிக்கு எழுப்பி விட்டுருங்க", என்று ஆடர் போட்டு விட்டு உறக்கத்தை தொடங்கினாள்.


😜😈GALAATTAS ON THE WAY 😈🤪



Rate this content
Log in