STORYMIRROR

Uma Subramanian

Others

4  

Uma Subramanian

Others

யாரை பலியிடுகிறோம்?

யாரை பலியிடுகிறோம்?

1 min
455

நெரிசலை தவிர்த்து

சுகமான பயணம் வேண்டி

இடநெருக்கடியைத் தவிர்த்து  

சொகுசான சாலை வேண்டி

இலுப்பை வேம்பு அரசு

ஆலமரங்கள் பலியிடு விழா!

சிரங்கள் துண்டிக்கப்பட்டு

கரங்கள் வெட்டப்பட்டு

சாய்ந்து கிடப்பதைக் கண்டு  

 பறவைக்கூட்டம் பார்த்து துடித்தன

மனிதக் கூட்டம் பார்த்து ரசித்தன!

நாடோடிகளாய் வாழ்ந்தவன்

ஆறு கால்வாய் குளம் குட்டை ஏரிகளில்

அவன் தாகம் தணிந்தது

இலை கிழங்கு காய்கனிகளில்

அவன் பசிதாகம் மறைந்தது

கையில் எதையும் கொண்டு செல்ல வில்லை !

மரநிழலில் களைப்பாறினான்!

மனம் குளிர இளைப்பாறினான்!

இன்று நாமெல்லாம்?

உணவை சுமக்கிறோம் 

நீரைச் சுமக்கிறோம் 

காற்று சுமந்து செல்ல

காத்து நிற்கிறோம்!

ரோட்டில் மரமில்லை! 

காட்டில் மரமில்லை!

வீட்டிலும் மரமில்லை

கூட்டிப் பெருக்க மாளாது

வீடு பெருக்க கட்ட போதாது!

காற்றில் மட்டும் ஈரம் எப்படி?

வாழ்வாதாரங்களை சேதாரம் 

செய்து விட்டு ஆகாயத்தில் இடம் தேடி அலைகிறோம்! 

பிள்ளைகளுக்கு எதைச் சேர்க்கிறோம்?

சிந்திப்போம்! மறந்து விடின்

இன்னல்கள் பல சந்திப்போம்!

எதிர்கொள்ளும் போது சிந்திப்போம்?

எல்லோரையும் திட்டி தீர்ப்போம்

நாம் என்ன செய்கிறோம்? மறப்போம் 


 

 








Rate this content
Log in