STORYMIRROR

Uma Subramanian

Others

3  

Uma Subramanian

Others

வழி சொல்லுங்க

வழி சொல்லுங்க

1 min
152

தா  + வரங்கள்....

மண்ணிற்கு இயற்கை தந்த வரங்கள்!

வரங்களை தந்ததாலே தாவரங்கள் ஆயின! 

வரங்கள் தந்தன வளங்கள்!


மும்மாரி பொழித்தன! 

நிலங்கள் தழைத்தன!

வளங்கள் கொழித்தன! 

நலன்கள் செழித்தன!


வரங்களை அழித்தன!

தவறுகள் இழைத்தன! 

கட்டிடங்களை வளர்த்தன!

குப்பைகளை நிறைத்தன!


கழிவுகள் பெருகின!

அழிவுகள் பெருகின!

வாழுமிடம் தொலைத்தன!

வழித் தேடி அலைந்தன!


புவி வெப்பத்தில் உருகுது!

பயிர்கள் வெந்து கருகுது! 

பதறி சனம் கிடக்குது!

பாவி மனம் துடிக்குது!


காசு உள்ளவன் பிழைக்கிறான்!

பெரிய துன்பம் இழைக்கிறான்!

ஏழைகள மறக்கிறான்!

எதிர்த்து நின்னா முறைக்கிறான்! 


வழி ஒன்று சொல்லுங்க!

வாழ இடம் ஒன்று சொல்லுங்க!

வளரும் பிள்ளை கேட்குதுங்க!

வழி தேடி நிக்குதுங்க!


Rate this content
Log in