விழியுணராச் சுவர்கள்...!
விழியுணராச் சுவர்கள்...!
1 min
38
கர்வத்தின் சுவர்கள்
அன்பெனும் அழகைச்
சிறையிலடைத்து
அடிமைப்படுத்தும்போது
அறிவெனும் புரிதல்
மதி மயங்கி
விவாதத்தில்
வீறுகொண்டு எழுந்து
சகமனிதனைத்
தோற்கடித்த ஆனந்தத்தில்
நெஞ்சம் விம்மிப் புடைக்க
வீறு நடைபோட்டு
சிதைத்த மனங்களைக்
குரூரத் திருப்தியோடு
கோபத்தின் துணைகொண்டு
இரணமாக்கி
விவாதப் போர்க்களத்தில்
வெற்றிகொண்டு
வீடு திரும்பி
சின்னக்குழந்தை
தன் தோழியிடம்
'நீயே இதுல விளையாடு அழாதே' என்று சொல்வதைக்
கேட்ட போதுதான்
தோற்றுப் போனவன்
நான்தான் என்று
மண்டையில் உறைத்தது!