வேண்டும்! வேண்டும்
வேண்டும்! வேண்டும்


வேண்டும்.... வேண்டும்....
மாசு என்னும் அரக்கனிடமிருந்து வேண்டும் விடுதலை!
இலஞ்சம் என்னும் பணமுதலையிடமிருந்து வேண்டும் விடுதலை
காமம் என்னும் மிருகத்திடமிருந்து வேண்டும் விடுதலை!
வறுமை என்னும் பிணியிலிருந்து வேண்டும் விடுதலை!
சாதி என்னும் அக்கினி ஜுவாலையிலிருந்து வேண்டும் விடுதலை!
வன்முறை என்னும் காட்டாற்று வெள்ளத்திடமிருந்து வேண்டும் விடுதலை!
சோம்பல் என்னும் நோயிடமிருந்து வேண்டும் விடுதலை!
பிரிவினை என்னும் செய்வினையிலிருந்து வேண்டும் விடுதலை!
வேண்டும்....! வேண்டும்....! இந்தியாவிற்கு விடுதலை வேண்டும்!