வாழ்வு...!
வாழ்வு...!
1 min
17
ஓடும் கூட்டத்தின்
கால்கள் தேடும் பாதை!
மனம் அதில் லயிக்காமல்
புலன்களின் ஆளுமையில்
நுகரும் வெறியில்
பாதைகள் பாதங்களின்
அடியில்
காணாமல் போகும் அவலத்தில்
நிலைபெற்று நிலைபெற்று
நிலையான தேடல்
புரியாமல் துவளும்!
வாழ்வின்
அரிச்சுவடி அறிந்தும்
உணரத்துவங்காது
புலனளிக்கும் போதையில்
தூங்கும் மனது
விழிக்கும் போது
நுகர்ந்த வெம்மையால்
வாழ்வு கரைந்திருக்கும்!
புலன்வழிச் சுகங்கள்
நிறைவின்றிப் புசிப்பதால்
கரையற்ற கடலில்
திசையறியாப் படகாய்
நிலையற்றோடும்!
புலன் மறக்கின்
உள்ளம் புரியும்!
நுகர்வு வெறி அடங்கின்
அகலாத இறையுணர்வு
உள்ளே உழல்வது தெரியும்!