உறங்கிடு!
உறங்கிடு!
விதைகளே....
மயக்கமுற்று கிடந்தீர்களோ?
நான் நீர் தெளித்ததும்....
உயிர்ப் பெற்று எழுந்தீர்களோ?
அய்யகோ..!
நீங்கள் அப்படியே மடிந்து போயிருக்கலாம்!
உங்கள் கதை அத்தோடு முடிந்து போயிருக்கும்!
நீங்கள் காடுகளில் முளைத்திருந்தால்...
கார்ப்பரேட்காரன் உங்கள் கதையை முடித்து வைப்பான்!
வயலோரத்தில் முளைத்திருந்தால்..... விவசாயி உங்கள் விதியை முடித்து வைப்பான்!
சாலையோரத்தில் விழுந்திருந்தால்.... சாலைப் பணியாளன் சமாதிக் கட்டி வைப்பான் !
தோட்டத்தில் முளைத்திருந்தால்....
தோட்டக்காரன் மண் தோண்டி உங்களை புதைத்து வைப்பான்!
சுயநலமிக்க மனித சமூகம் இது!
இங்கே நீங்கள் வாழ இடம் ஏது?
நல்லதையே செய்தாலும்...
ஆதிக்கப்பிடி அவனிடத்தில்!
ஆடம்பர வாழ்க்கையை நோக்கி....
அன்றாடம் பம்பரமாய் சுற்றுகின்றான்!
நாளைய தேவைக்காக ஓடும் அவன்....
வழியில் நம்மை இடையூறாய் எண்ணுகிறான்!
இடைமறித்து கூறிடி்னும்....
அவன் செவிமடுக்க மறுக்கிறான்!
மாற்று வழி ஒரு நாள் கிட்டும்!
மனித இனம் அதை எட்டும்!
எனும் மமதை !
அதுவும் ஒரு நாள் அடங்கும்!
நம்மின் அருமை புரியும்!
ஓடட்டும்....
மூச்சு வாங்கி நிற்கும் போதும்....
மூர்ச்சையாகிப் போகும் போதும் .....
நம் பெருமை தெரியும்!
அப்போது பிழைத்திடு!
அவனுக்காக உழைத்திடு!
அது வரை உறங்கிடு!
_ உன் நலம் விரும்பி மழை
