உறக்கம் வரா இரவு நேரம்...!
உறக்கம் வரா இரவு நேரம்...!
நற்பசி,
நல்லுறக்கம்
அடுத்தநாளைக் கொண்டாட
அச்சான அவசியம்!
ஆனால்,
உறக்கம்வரா இரவுநேரம்
உனக்கான நேரம்!
உன் உள்நோக்கும் நேரம்!
நியூரான்களில்
நினைவுகள்
வீறுகொண்டெழும் நேரம்!
உழைப்பு,உறக்கத்திற்கு
இடையுள்ள நேரம்!
உள்மனதுடன்
உரையாடல் துவங்கும் நேரம்!
உன்னை உண்மையில்
உறுதியாய்
எதிர்கொள்ளும் நேரம்!
தன்னை எதிர்கொள்ளத்
தயங்குபவனே
தன்னை மறக்கும்
நிகழ்வுகளை நாடுவான்!
தன் உணர்வுகளுள்
தன் இருப்பிடம் அறிந்தவன்
சிறப்பிடம் பெறுவான்!
நேற்றும் நாளையும்
நினைவிலகற்றி
இன்றைய மனதை
நெறிப்படுத்தலாம்!
உறக்கமில்லா
நிகழ்காலமே
மன நெறிப்படுத்தலி்ன்
வழிபாட்டு நேரம்!
இனிமேல்,
உறக்கம் வராவிட்டால்
உள்மனம் நோக்கி!
சிறப்பாக்குங்கள்!
உனக்கே உனக்கான நேரம்தான்
உண்மையில் தியான நேரம்!
உறக்கம் வரும்வரை
உம்மை நோக்குங்கள்!