துணை நிற்போம் வாரீர்!
துணை நிற்போம் வாரீர்!

1 min

34
மஞ்சள் நாணை மணிக்கட்டில் அணிவித்து.....
மங்கையவள் தன் சகோதரனுக்குத்
தன் பந்தத்தை உணர்த்தும் நன்னாள்!
சமுதாயத் திருநாள்!
சகோதர உணர்வுப் பெருகும் நாள்!
பெண்ணின் பாதுகாப்பிற்கு
உறுதியேற்பு நாள்!
அவள் நலத்திற்கு உறுதிக் கூட்டும் நாள்!
ஆவணித் திங்கள் பௌர்ணமி நாளில்....
தாவணிப் பெண்களின் கரங்களால் நாமும்....
மஞ்சள் நாண் பூண்டு...
அவர்கள் நலத்திற்கும்... பாதுகாப்பிற்கும்.....
நல்ல சகோதரனாய் ....
துணை நிற்போம் வாரீர்!