STORYMIRROR

Uma Subramanian

Others

5  

Uma Subramanian

Others

தணியாத சோதனை

தணியாத சோதனை

1 min
47

லாக் டவுன்....

பெயர் மட்டுமல்ல எல்லாம் புதிது!

கொரோனோ... கோவிட்'19....

நீ பிறந்த போது.... 

அத்துணைப் பாதிப்பு இல்லை! 

நீ வளர்ந்த போது.....

உலகமே... பயந்து போனது!

அப்போதும் உன் பலம் தெரியவில்லை!

ம்ம்ம்..... நாங்கள் பார்க்காத கிருமியா?

நாங்கள் பார்க்காத சளியா?

எத்தனை எகத்தாளம்!

அடிக்கிற வெயிலில் மனிதனே சாகிறான்!

நீ எம்மாத்திரம்? 

அத்தனை அலட்சியம்!

நீ என்ன செய்து விடுவாய்?

பார்க்கிறேன்! ஆணவம்!

விமான நிலையத்தை மூடினாய்!

ஆகட்டும்! எத்தனை வேகம் எடுத்து விடுவாய்? திமிர்!

இரயில் சேவையை நிறுத்த வைத்தாய்!

இதையும் தாண்டி பரவிவிடுவாயா?

எல்லாம் அழிந்துவிடும்! தெனாவெட்டு!

கோயில்களைப் மூடினாய்....

கம்பெனிகளை மூடினாய்.....

பள்ளிகள்.... கல்லூரிகள்.... ஏன்?

வீட்டுக் கதவுகளும் அடைக்கப்பட்டது!

மனிதனே மனிதனைப் பார்த்துப் பயம்!

களை கட்டிய திருவிழாக்கள்....

கலையிழந்து போயின!

ஆட்டம் பாட்டத்தோடு வீட்டு விசேஷங்கள்... 

ஆட்டம் கண்டு போயின!

செத்தால் நாலு பேர் கூடி அழ ஆள்கள் இல்லை!

செத்தவனை பார்த்து அழ முடியவில்லை .. சாவு பயம் ...!

கோலாகலமெல்லாம் அலங்கோலமாகின....!

ஒரே ஒரு கிருமி.... 

காற்றை ஊடகமாக்கி....

சுவாசப்பாதையை நுழைவு வாயிலாக்கி.... 

நுரையீரலை தங்கும் கூடாரமாக்கி....

ஒரு உயிரையே காவு வாங்குகிறாய்!

காட்டுத் தீயாய் பரவி உலகை அழிக்கிறாய்!

அரக்கனைப் போல் உயிர்களை விழுங்குகிறாய்! 

சர்வாதிகாரியைப் போல் மனிதனை மிரட்டுகிறாய !

வீடுகளில் மனிதன் முடங்கிக் கிடக்கிறான்!

ஆளுக்கு ஒரு மூலையில் அடங்கிக் கிடக்கிறான்!

மனிதனைப் பார்த்து பயந்தோடிய மிருகங்கள் சுதந்திரமாய் தெருக்களில்!

சுதந்திரமாய் திரிந்த மனிதன் அஞ்சி வீடுகளில் தஞ்சம் புகுகிறான்

என்று தணியும் எங்கள் சோதனை?


Rate this content
Log in