தங்கட்டும் சுதந்திரம்
தங்கட்டும் சுதந்திரம்


கண்ணிருந்தும் குருடாய்
காதிருந்தும் .... செவிடாய்..
வாய் இருந்தும் ஊமைகளாய்...
சிறகிருந்தும்.... கூண்டுப்பறவையாய்....
சமையல்காரியாய்....
வீட்டு ஆயாவாய்...
ஆட்டுவிக்கும் பொம்மையாய்..
சுயத்தை இழந்து..
சுய முகவரியை மறந்து....
சுயத்தேவைகளைத் தொலைத்து......
அன்பை மனதிலே சுமந்து....
அன்றாடம் உழைத்து....
ஆயிரம் கவலைகளை.....
மனக்குழியிலே புதைத்து....
சுதந்திரம் என்னும் காற்றைச் சுவாசத்திலும் காணாது.....
பெண்ணியம் காக்க....
தன்னெலும்பை உருக்கி ......
தளராது உழைக்கும் தையல்களுக்கு...
இந்த ஆண்டிலாவது ......
தங்கட்டும் சுதந்திரம்!!!
.
..