ரக்ஷாபந்தன்
ரக்ஷாபந்தன்

1 min

54
ஆவணித் திங்கள் பெளர்ணமி நாளில்...
அக்கினியில் உதித்த அணங்காம்....
துருபதனின் புத்திரி திரௌபதியாம்....
உலகை காக்கும் உத்தமனாம் கிருஷ்ணனின் வழிந்தோடும்
குருதி கண்டு....
கிழித்திட்டாள் தன் முந்தானைத் தலைப்பை!
நிறுத்திட்டாள் வெளியேறத் துடிக்கும் குருதியின் முனைப்பை! !
மெல்லிய மனம் கொண்ட மங்கை!
மேன்மை குணம் கொண்ட தங்கை!
உணர்த்திட்டாள் தன் சகோதரனுக்குரிய பங்கை!
ரக்ஷா பந்தன் ....
ரக்ஷிக்கும் பந்தத்துக்கான திருநாள் ஆனது!